வணக்கத்திற்குரிய அய்யா அவர்களுக்குத் தங்களின் காணொளி உரையினைக் கேட்டறிந்தேன்.சிறப்பாக இருந்தது."தமிழும் அணங்கும்" என்னும் தலைப்பிலமைந்த ஆராய்ச்சியுரை சிந்திக்கக்கூடியதாக உள்ளது.அணங்கு எனும் சொல் சங்க இலக்கியத்தில் எவ்வெவ் பொருள்களில் பயன்படுத்தப்பெற்று வந்துள்ளது என்பது பற்றியும்,12ஆம் நூற்றாண்டில் எழுந்த 'கலிங்கத்துப்பரணி ' அணங்கு' எனும் சொல்லைப் பயன்படுத்தும் விதத்தையும் எடுத்துரைத்தீர்கள். அறிஞர் கால்டுவெல் 'தாய்மைத்தமிழ் 'எனும் பொருளில் தமிழ்த்தாய் என்ற சொல்லாடலை முதன்முறையாக பயன்படுத்தியதையும், மனோண்மணீயம் பெ.சுந்தரனார் 'தமிழணங்கு' என்ற சொல்லைத் தமிழ்த்தாய் எனும் பொருளில் அறிமுகப்படுத்தி உள்ளார் என்று ஆய்ந்து கூறியதும் பாராட்டிற்குரியது.இதுபோன்ற தங்களது ஒப்பிலக்கிய சொல்லாராய்ச்சி வருங்கால இளந்தலைமுறை ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தங்களது சொல்லாராய்ச்சிப் பணி தொடரட்டும் என வாழ்த்தும் உள்ளம்...மொ.மருதமுத்து,ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
@thanaacl43086 күн бұрын
❤️🙏👍
@VetriVelC-st1zv7 күн бұрын
❤🎉🎉❤
@RajalakshmiArasan9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajnagaraj919411 күн бұрын
ஒவ்வொரு நாட்டிலுள்ளவர்களைப் பற்றியும் அவர்களது செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்தது. சிறப்புங்க அய்யா.
@puthuvaikrishna632512 күн бұрын
அருமையான தமிழறிவு பெற்ற பெருந்தகைகள். பல்கலைகழகப் பணியைச் செய்து வருகிறீர். உலகையே இணைக்கும் கல்வி நிறுவனம் ஐயா
@instituteofasianstudies488211 күн бұрын
மிக்க நன்றி🙏
@maruthumuthu200513 күн бұрын
மதிப்புமிக்க அய்யா அவர்களுக்கு வணக்கம்."ஆசியவியல் நிறுவனத்தின் தமிழாய்வில் இணைந்து பயணிக்கும் பிறநாட்டினர்" எனும் தங்களின் காணொளி உரையினைக் கேட்டறிந்தேன்.மிகவும் சிறப்பாக இருந்தது. தமிழாய்வுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்ற அயல்நாட்டறிஞர்கள் இருபத்துநான்மரை அவர்களது நிழற்படத்தோடு அறிமுகப்படுத்தி அவர்களது தமிழ்ப்பணியினையும் அழகாக எடுத்துரைத்தது அருமை. வெளிநாட்டறிஞர்களாலும் நமது தமிழ்மொழி,பண்பாடு பாராட்டிப் போற்றப்படுவதை அறிந்து நாம் பெருமைப்பட வேண்டும்.அப்பெருமைக்கு மூலகர்த்தாவாக இருந்து அவர்களை ஒன்றிணைத்துத் தமிழ்ப்பணியாற்றும் தங்களை இந்நாடு போற்றும் காலம் வெகுவிரைவில் உண்டு."டாக்டர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி,டாக்டர் கிரகோரி ஜேம்ஸ்,டாக்டர் தாமஸ் மால்டன்,தாமஸ் லேடன்,டாக்டர் டென்னிஸ்,டாக்டர் வாட்சக், டாக்டர் சௌசிங்(ஈஸ்வரி),பீட்டர் சால்க்,சின்வால்,ஷுஹான் லீக்,குறிச்சி குக்கோ,டாக்டர் மசாகா சுகோனோ,நரேஷ் சுராஜ், டாக்டர் கென்னடி,ஷானோன் கிப்போர்டு,டாக்டர் சராவுத்,பேரா.கிம்டோ யங்,யாங்கீ மூன்,டாக்டர் சௌசன்னா,பெரன் வில்,கில் ரீட்ஜ்,டயானா,அசாகி இசாமோ,பேரா.லியா கோமியோ,டேவிட் ஆல்பர்ட் போன்ற பல்வேறு பிறநாட்டு தமிழறிஞர்களின் தமிழாய்வுகளை வெளிக்கொணர்ந்த பெருமை தங்களுக்கு உரியது என்னும் மாண்பினைப் பெற்றுள்ளீர்கள்.தங்களது உலகளாவிய தமிழ்ப்பணி தொடரட்டும் என வாழ்த்தும் உள்ளம்...அன்புடன் மொ.மருதமுத்து,முதுநிலை ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
@maruthumuthu200513 күн бұрын
🎉🎉🎉
@handleh16 күн бұрын
Title of the books are very thoughtful great job 👍
@instituteofasianstudies488215 күн бұрын
Thank you.
@panneerselvammudaliarc815917 күн бұрын
அன்புடைய ஐயா, தமிழ்ச்சுவடிகளிலிருந்து உயிர்பெற்ற நூற்களைப் பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றின் பொருண்மையையும் தோன்றிய சூழல்களையும் தெளிவாகவும் உங்களின் உழைவிலா உழைப்புக்கு யுனோஸ்கோ நீட்டிய பணவாதரவையும் அவற்றைத் தாங்கள் மூல மொழியானத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து உலகத்திற்கு அளித்தமையையும் ஒவ்வொரு நூலுக்கும் கொடுக்கப்பட்ட தலைப்பின் பின்னணியையும் வெளிநாடுகளில் ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்தமையும் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கவேண்டிய இன்றியமையாமையையும் நூற்களின் இலக்கியவகைகளையும் விளக்கியுள்ளீர்கள். அரசு சாரா நிறுவனமாக விளங்கும் ஆசியவியல் நிறுவனம் தாங்குநர்களைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து பொருள்பெற்று நூற்களைப் பதிப்பிக்கும் திறன் போற்றத்தக்கது. அதற்குத் தாங்கள் குடும்பமாகவுழைப்பதையும் எண்ணிப் பெருமையடைகிறோம். இன்னுந் தொடர்ந்து செல்ல வாழ்த்துகிறேன். வெல்கவே. அன்புடன் உங்கள் மதுரை செ பன்னீர் செல்வம் திசம் 17 2024 1538
@instituteofasianstudies488215 күн бұрын
மகிழ்ச்சி. நன்றி🙏
@maruthumuthu200518 күн бұрын
மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு வணக்கம்."ஓலைச்சுவடிகளிலிருந்து உயிர்பெற்ற சில தமிழ்நூல்கள்" எனும் தலைப்பிலமைந்த தங்களின் உரையினைக் கேட்டறிந்தேன். உலகின் பாரம்பரிய நினைவுச்சின்னங்களின் வரிசையில் ஆசியவியல் நிறுவன மருத்துவச்சுவடிகளும் இணைக்கப்பெற்று யுனெஸ்கோவுடன் இணைந்து செயலாற்றும் தகுதிப்பாட்டினைப் பெற்றுள்ளமைக்குப் பாராட்டுக்கள்.வார்சா,நார்வே,சியோல்,பேங்காங்க் ஆகிய இடங்களில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ்ஒலைச்சுவடிகளின் பெருமைகளை உலகறியச்செய்தமைப் பாராட்டிற்குரியது. ஓலைச்சுவடிகளின் விளக்க அட்டவணைகளையும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிநூற்பதிப்புகளையும் வெளிக்கொணர்ந்த பெருமையை ஆசியவியல் நிறுவனம் பெற்றுள்ளதை அறிந்து மகிழ்கின்றேன். இலக்கியம்,கணிதம்,மருத்துவம் முதலிய பல்துறை நூல்களை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டு உலக அறிஞர்கள் தமிழ்மொழியின் செம்மையினையும் தமிழ்ப்பண்பாட்டினையும் அறியும்படி செய்தமைக்கு வாழ்த்தி வணங்குகின்றேன்.இந்நூல்களைத் தமிழாய்வாளர்களும் தமிழறிஞர்களும் வாங்கிப்பெற்று பயனுறுவார்களாக.தங்களின் தமழ்த்தொண்டுத் தொடரட்டும் என வாழ்த்தும் உள்ளம். மொ.மருதமுத்து,ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
@puthuvaikrishna632520 күн бұрын
தமிழர்களின் பெருமைகளை வெளிக்கொணரும் ஆசியவியில் நிறுவனத்திற்கு தலைநகர் தமிழ் மன்றத்தின் வாழ்த்துக்களும் வணக்கங்களும்
@instituteofasianstudies488215 күн бұрын
நன்றி🙏
@kanagadharshini202421 күн бұрын
ஐயா தங்களை வணங்குகிறேன் தாங்கள் தமிழுக்கு செய்யும் தொண்டு அளப்பரியது
@instituteofasianstudies488215 күн бұрын
மகிழ்ச்சி. நன்றி🙏
@PremaPrema-e4u21 күн бұрын
❤🙏🙏🙏🙏🙏💐💐💐👍👍
@kovaimanimodarapalayamkoth955321 күн бұрын
🎉
@RajalakshmiArasan21 күн бұрын
🙏🙏🙏🙏❤❤❤
@shanyunia456621 күн бұрын
🙏💖🙏💖🙏💖🙏
@rajnagaraj919423 күн бұрын
காலத்திற்கு ஏற்ற தலைப்பு. வள்ளுவத்தைத் தவறான திசையில் இழுத்துச் செல்வோருக்கு இம்மாநாடு அமையும் என்பது எனது நம்பிக்கை. சிறப்புங்க அய்யா.
@maruthumuthu200527 күн бұрын
மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு வணக்கம்.ஆறாவது உலகத் திருக்குறள் மாநாடு-கனடா நாட்டில் வருகிற ஆகஸ்டு மாதத்தில் நடக்க இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.திருக்குறளைப்பற்றி அதிக அளவில் உலகநாடுகளின் மாநாடுகளை நடத்தித் திருக்குறளின் மாண்பினை உலகறியச் செய்த பெருமையினைத் தாங்கள் பெற்றுள்ளீர்கள் .ஐந்து மாநாடுகளிலும் ஐந்து பொருண்மைகளில் உலக அறிஞர்களை ஒன்றிணைத்துப் பேச வைத்து மாநாட்டினைச் சிறப்புற நடத்தியது பாராட்டிற்குரியது. "திருக்குறளில் நிர்வாகம்" எனும் தலைப்பில் ஆறாவது மாநாடு நடக்க இருப்பது மகிழ்ச்சிக்குரியது.மாநாடு சிறப்புடன் நடைபெற வாழ்த்துகின்றேன். அன்புடன் மொ.மருதமுத்து,ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
@RajalakshmiArasan28 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@PremaPrema-e4u28 күн бұрын
Iyaa avargalin pathivu mega mega aruma wongalin thamiz thondu thodarattum
@instituteofasianstudies488228 күн бұрын
Thank you.
@RajalakshmiArasan28 күн бұрын
So nice
@instituteofasianstudies488228 күн бұрын
Thank you.
@shanyunia456628 күн бұрын
🙏💖🙏💖🙏💐💐💐🙏💖🙏💖🙏
@instituteofasianstudies488228 күн бұрын
🙏🙏
@panneerselvammudaliarc81592 ай бұрын
அன்புடைய ஐயா, அருமையான ஆய்வு. பால்வரை தெய்வமும் கடற்கெழு கன்னியும் வகித்த பங்கையும் காலத்தில் ஏற்பட்ட உருமாற்றத்தையும் திருவள்ளுவர் கூறும் அறத்தையும் சங்கஇலக்கியம் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற இலக்கிய மேற்கோள் காட்டியும் இரு தெய்வங்களின் தொன்மத்தைச் சுட்டியும் சொற்களிலேற்படும் ஐவகை மாற்றத்தையும் எளியவரும் அறிந்து கொள்ளுமளவிற்கு விரித்துரைத்துள்ளீர்கள். அச்சொற்களில் புதுச்சிந்தனையெனும் வெளிச்சத்தைப் புலப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி அன்புடன் உங்கள் மதுரை செ பன்னீர் செல்வம் நவம்.04,2024 2041
@instituteofasianstudies4882Ай бұрын
மிக்க நன்றி🙏
@arunachalamc54772 ай бұрын
Whattranslation
@arunachalamc54772 ай бұрын
Goodsir
@arunachalamc54772 ай бұрын
Verygoodsir
@instituteofasianstudies4882Ай бұрын
Thank you.
@arunachalamc54772 ай бұрын
Verygoodsir
@kanagadharshini20242 ай бұрын
வணக்கம் ஐயா வழக்கம்போல் தங்களது ஆய்வு மிகவும் வியப்பிற்குரியதாக இருக்கிறது காணாமல் போன தெய்வங்கள் மற்றும் உருமாறிய தெய்வங்கள் குறித்து ஒரு சொல் குறுங்குவதையும், ஒரு சொல் விரிவடைவதையும் விரிவடைந்த சொல் குறுகுவதையும் காணாமல் போனது பற்றி இலக்கியம் தொட்டு தொல்காப்பியர் தொட்டு திருக்குறளை எடுத்து இயம்பி நேற்றைய பாரதி வரை தங்கள் எடுத்துக் கூறிய செய்திகள் மிகவும் அற்புதமாகவும் வியப்பாகவும் இருந்தது இவ்வளவு கருத்துகளை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எத்தனை புத்தகங்கள் படித்திருக்க வேண்டும் அத்தனை புத்தகங்களையும் உங்களது ஒரு பதிவில் நாங்கள் தெரிந்து கொண்டோம் ஐயா கற்றலில் கேட்டல் நன்று என்பது இதுதானோ
@instituteofasianstudies48822 ай бұрын
மிக்க நன்றி🙏🙏
@g.punniyamoorthygovindasam87282 ай бұрын
அன்புடையீர் வணக்கம் 🙏, பேரா. செல்லப்பன் ஐயாவிடம் அடியேனுக்கு அளவற்ற அன்பும் பெரும் மதிப்பும் உண்டு, அன்னாரின் ஆங்கிலப் புலமையைக் கண்டு, கேட்டு ரசித்துள்ளேன். அன்னாரின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கும் ஆங்கிலத்துறைக்கும் பெரும் இழப்பாகும். அன்னாரின் ஆன்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் இவண் கோ.புண்ணியமூர்த்தி🙏🙏🙏
@shrilakshmi88932 ай бұрын
வணக்கம் ஐயா. புதிய செய்திகள் கொண்ட உரை ஐயா. அருமை.பகிர்வுக்கு ஐயா.Etymological dictionary வெளிவராது போனது துரதிர்ஷ்ட மே
@instituteofasianstudies48822 ай бұрын
மிக்க நன்றி🙏
@maruthumuthu20052 ай бұрын
மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு வணக்கம். "மறைந்துபோன அல்லது உருமாறிய இரு கடவுளர்கள்" எனும் தலைப்பிலமைந்த தங்களின் உரையினைக் கேட்டறிந்தேன். சொற்களானது காலந்தோறும் பொருள் மாறுபாடடைந்து வருவதையும் ,ஒரு சொல்லிற்குப் பலபொருள்கள் ஆகிவருவதையும் ' பால்வரை தெய்வம்,கடற்கெழு செல்வி' ஆகிய இரு தொடர்கள் குறிக்கும் பொருளையும் அழகாக எடுத்துரைத்தீர்கள்.தொல்காப்பியம்,சங்க இலக்கியம்,திருக்குறள்,சிலப்பதிகாரம்,மணிமேகலை ஆகிய நூல்களிலிருந்தும் இரு தொடர்களுக்கான விளக்கங்கள் உருமாறி வளர்ந்து வந்துள்ளமையை விரித்துரைத்தீர்கள். பால்,அறம் ஆகிய சொற்கள் உணர்த்தும் பொருட்கள் பற்றியும்,குமரிதெய்வம் பகவதிதெய்வம் ஆன செய்தியையும்,பால்வரை தெய்வம் குன்றுதோராடும் தெய்வமாகவும் வளர்ந்த விதத்தினைப் பதினெட்டு நிமிடங்களில் அழகாக எடுத்துரைத்தது பாராட்டிற்குரியதாகும்.ஆய்வறிஞர்களுக்கு இவ்வுரை பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. தங்களின் பரந்துபட்ட அறிவு மென்மேலும் தொடர வாழ்த்தும் உள்ளம்- அன்புடன் மொ.மருதமுத்து, முதுநிலை ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
அன்புடைய ஐயா, தமிழ்- கொரிய உறவுக்காணொளி மிகவருமை.என்போன்ற பலருக்குத் தெரியாப் பல செய்திகளைத் தெரியப்படுத்தினீர்கள்.மிக்க நன்றி. இரண்டு வகையான ஆய்வு நெறிகளைக் காண்பாருக்குத்தெளிவாக்கினீர்கள். அன்புடையான ஐயா, அருமையானக் காணொளி. பல்வேறு செய்திகளைத் தமிழ்-கொரிய உறவுகளில் கடல்மடை திறந்த வெள்ளம் போல் ஆய்வுகளை அறியா எங்களுக்கு அறிவித்தீர்கள்.மிக்க மகிழ்ச்சி. இரு வேறுபட்ட ஆய்வு முறைமைகளை விளக்கியிருந்தீர்கள். உணர்ச்சி ஆய்வுகள் ஆய்வுலகத்திற்குப் பொருந்தாதெனவும் தரவுகளோடு கூடிய ஆய்வுகளே உண்மைகளை வெளிக்கொணரும் என்பதாகவும் அடிக்கோடிட்டீர்கள்.அதன் மேலே உங்கள் ஆய்வுகளை அடுக்கினீர்கள். 1.சீனத்தில் கி.பி.1340-இல் கி.மு.48-இல் வெளியானத் தொல்கதையில் சுரா என்றொரு மன்னர் வானத்திலிருந்து வந்த முட்டையிலிருந்து பிறந்ததாகவும் அவர் கப்பலில் வந்த ஹியா எனும் பெண்ணை மணந்ததாகவும் கூறினீர்கள். புதுமையானக் கதை. 2.அயோத் எனுஞ்சொல்லின் வரலாற்றை இந்தியாவின் அயோத்தியிலிருந்தும் தாய்லாந்தின் அயோத்தியிலிருந்தும் கூறியிருக்கிறீர்கள். 3.தமிழ்ச் சொல்லான செம்பவளத்தையும் ஹியோ கற்பனையோடு தொடர்புப்படுத்தியுள்ளீர்கள். 4.கொரிய மொழியும் திராவிட மொழிகளும் ஒட்டுமொழியென்றும் உரல்-ஆல்தோ மொழிகளான அங்கேரியம் கொரியம் சப்பானியம் போன்றனவற்றை ஆய்ந்த அறிஞர்களின் பங்களிப்பையும் போற்றியுள்ளீர்கள். 5.கொரிய-தமிழ் மொழி இணையாய்வுகளில் தாங்கள் செலுத்திய கூராய்வுகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள். 6.சப்பானின் பண்டிகையான கோசட்சுவும் பொங்கலும் ஒற்றுமையுடையனவென்றும் யுனசுகோ நடத்திய பயிலரங்கில் ஓலைச்சுவடி கண்காட்சி நடத்தப்பட்டதையும் அதிலே கலந்தவர்களின் எதிர்வினையையும் விளக்கியிருந்தீர்கள். 7.பூசான் சீயோன் நகரங்களின் சிறப்பையும் அவை வேறுபடுமாற்றையும் எடுத்துரைத்தீர்கள். 8.போதி தர்மரின் பிறந்தவூர் காஞ்சிபுரந்தான் எனத் தாங்கள் முனைந்ததைப் பெருமையுடன் நினைவுகூர்கிறேன். 9.புத்தத்தால் ஏற்பட்ட பண்பாட்டு புரட்சியையும் சமசுகிருத பாலி மொழி பயன்பாடு போன்றவற்றைப் புலப்படுத்தினீர்கள். நீண்ட ஆராய்ச்சியின் பிழிவை எமக்குத் தந்த தங்களுக்கு என்ன கைம்மாறை நான் தரப்போகிறேனோ. தொடரட்டும் ஐயா தங்கள் தொண்டு.அஃது உலக அமைதிக்கும் அன்புக்கும் உதவட்டும்.அறிஞருலகம் அதற்காற்றுந் தொண்டுக்குத் தொண்டை மண்டலந் தலைமை தாங்குகிறது முனைவர் ஜி.ஜான் சாமுவேல் மூலமாக. நன்றி ஐயா. அன்புடன் தங்கள் மதுரை செ பன்னீர் செல்வம் அக்.27,2024 1325
@rctamil018dr.d.indirakumar32 ай бұрын
வணக்கம் ஐயா. பண்பிற் சிறந்த மூத்த அறிஞர் பேரா. செல்லப்பனார் அவர்களை நினைவு கூர்ந்து உரை வழங்கியதற்கு நன்றி. எளிமையானவர். தினமும் அதிகாலையில் சூரிய வழிபாடு வழிபாடு செய்பவர். லிவர்பூல் திருக்குறள் கருத்தரங்கில் அவரை சந்தித்தோம். அவரது இருமொழித் தொண்டிற்குத் தலை வணங்குகிறோம்.
@instituteofasianstudies48822 ай бұрын
நன்றி🙏
@maruthumuthu20052 ай бұрын
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம். "ஒப்பிலக்கிய ஆய்வும் பேராசிரியர் கா.செல்லப்பனார் பங்களிப்பும்" எனும் தலைப்பிலமைந்த தங்களின் காணொளி உரையைக் கேட்டறிந்தேன். ஒப்பிலக்கிய ஆராய்ச்சி தமிழிலக்கியத்தில் எல்லீஸ்,கால்டுவெல்,பேராசிரியர் ஒப்பிலக்கிய மொழிநூல் அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்,அறிஞர் கைலாசபதி,எஸ்.இராமகிருஷ்ணன்,பேராசிரியர் கா.செல்லப்பன் போன்ற பலரால் வளர்ந்த வரலாற்றினையும்,அதில் தங்களது பங்களிப்பு பற்றியும் அறிந்து மகிழ்ந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் தெ.பொ.மீ.அவர்கள் மொழியியல் துறையை உருவாக்கி பல ஒப்பியல் ஆங்கிலப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுத்து ஒப்பாய்வுத்துறையை வளர்த்த வரலாற்றினை அழகாக எடுத்துரைத்த செய்தி இளைய தலைமுறை ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அயல்நாட்டு கவிஞர்களின் படைப்போடு நமது இலக்கியப் படைப்புகளையும் ஒப்பிட்டு ஒப்பாய்வு ஆராய்ச்சி வளர்ந்த வரலாற்றினையும் எடுத்துரைத்தது பாராட்டிற்குரியது.ஷெல்லி,பைரன்,வேர்ட்ஸ்வொர்த், வால்ட் விட்மன்,ஷேக்ஸ்பியர் போன்ற அயல்நாட்டறிஞர்களின் படைப்புகளோடு நமது கவிஞர்களான இளங்கோவடிகள், திருவள்ளுவர்,கம்பர், பாரதியார் இன்னும் மற்றுமுள்ளவர்களின் படைப்புகளை ஒப்பாய்வுசெய்து வெளியிட்ட அறிஞர்களின் வரிசையில் பேராசிரியர் தெ.பொ.மீ.,பேராசிரியர் இராமகிருஷ்ணன்,பேராசிரியர் கா.செல்லப்பன்,பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு,க.கைலாசபதி,கா.சிவத்தம்பி மற்றும் தங்களது பங்களிப்பு பற்றியும் அறிந்து கொண்டது மகிழ்ச்சி அய்யா.ஒப்பிலக்கிய ஆய்வில் பேரா.கா.செல்லப்பனார் அவர்களின் பங்களிப்பும் உள்ளத்தில் அவர் ஊனம் இல்லை எனவும் பெரிதும் பாராட்டிய பாங்கும் அன்னாரது மறைவிற்கு மனம் இளகி வருத்தமுற்றதையும் தங்களது நன்றிமறவா பண்பினையும் உணர்த்துவதாக உரை அமைந்திருந்தது. மிக்க அன்புடன் மொ.மருதமுத்து,முதுநிலை ஆய்வுவளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
@maruthumuthu20052 ай бұрын
ஐயா வணக்கம்.பிற நாட்டு அறிஞர்கள் நூல்கள் எனும் தலைப்பிலமைந்த தங்களின் உரையினைக் கேட்டறிந்தேன்.மிகவும் சிறப்பாக இருந்தது. வெளிநாட்டு அறிஞர்கள் தமிழ்மீது நாட்டம்கொண்டு தமிழிலக்கியங்களைக் கற்றறிந்து ஆராய்ந்து ஆங்கிலத்திலும் அவர்களது தாய்மொழிகளிலும் வெளியிட்டிருப்பது போற்றுதற்குரியது. ஆசியவியல் நிறுவனம் அந்நூல்களை வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரியது. செக் நாட்டறிஞர் கமில்சுவலபில், ஜான் ரால்ஸ்டன் மார்,டேவிட் சி பக்,ஜான் ஏ லட்டு,மைக்கேல் ரபேல்,பிரண்டை பெக்,பாட்ரிக் ஹாரிங்கன், பேராசிரியர் கெம்பே, யூக்கோ புக்குராய்,டாக்டர் ஷு ஹிகோசகா, போப், ஆஷர்,சண்முக தாஸ்,தாமஸ் மாட்டன்,தாமஸ் லேடன் போன்ற பதினாறுக்கும் மேற்பட்ட அறிஞர்களின் உழைப்பு தமிழிலக்கியத்திற்கு வளம்சேர்த்தமைக்கு பாராட்டுக்கள்.அதனை வெளியிட்ட ஆசியவியல் நிறுவனத்திற்கும் இயக்குநர் அய்யா அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகின்றேன்.இந்நூல்களைத் தமிழறிஞர்களும் தமிழாராய்ச்சியாளர்களும் வாங்கிப் பெற்று பயனுறுவார்களாக.அன்புடன் மொ.மருதமுத்து,முதுநிலை ஆய்வு வளமையர்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
@maruthumuthu20052 ай бұрын
பெயர் திருத்தம்=ஜான் ஏ லவுடு, பிரண்டா பெக்,தாமஸ் மால்டன்
@kannammalt30212 ай бұрын
வணங்குகிறேன் ஐயா🙏சிவ.. .. சிவ....நன்றி.... நன்றி 🙏
@shanyunia45662 ай бұрын
🙏❤💖🙏🙏🙏💖♥️🙏
@dhayailakkiya7842 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@RajalakshmiArasan2 ай бұрын
Sorry nice 👍👍👍🎉🎉🎉
@maruthumuthu20052 ай бұрын
அய்யா வணக்கம்.தமிழக - கொரிய உறவுகள் எனும் தலைப்பில் அமைந்த உரையைக் கேட்டறிந்தேன்.உரை சிறப்பாக இருந்தது. கொரிய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் கொரிய மொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள உறவுகள் பற்றியும் புராணம் ,கலை ,இலக்கியங்கள் எடுத்துரைத்தீர்கள்.ஆராய்ச்சி நெறிமுறையானது நடுநிலைத்தன்மையோடு காய்த்தல் உவத்தல் இன்றி இருத்தல் வேண்டும் என்றும்,புராணங்களில் வரலாற்று உண்மை இருந்தால் அதை வெளிக்கொணரலாம் எனவும்,கொரியமொழி,தமிழ்மொழி இரண்டும் ஒட்டுநிலைமொழி எனவும் அரிய பல செய்திகளை எடுத்துரைத்தது மிகவும் சிறப்பு.ஆசியவியல் நிறுவனத்தில் தமிழக-கொரிய கலை இலக்கிய பண்பாடு பற்றிய பயிலரங்குகள் நடத்தி "கொரியநாட்டு கவிக்குயில்" புத்தகம் வெளியீடு நிகழ்வு சிறப்பிற்குரியது. பதினெட்டு நிமிட இவ்வுரையானது தமிழார்வலர்களை ஈர்க்கும் தன்மையதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அன்புடன் மொ.மருதமுத்து,முதுநிலை ஆய்வுவளமையர்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.🎉
@dhayailakkiya7842 ай бұрын
அருமையா சொன்னிர்கள் ஐயா
@RajalakshmiArasan2 ай бұрын
Sorry nice
@UnionCab272 ай бұрын
Congratulations, Dr. Loud. You are indeed a legend in a number of spheres. May your light continue to shine brightly.