அணிலை நேசிக்கிறவர்களுக்கு, வீட்டில் வளர்க்கிறவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! அணிலை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து நன்றாக அறிந்த பின்னர் அணில் வளர்ப்பதே நல்லது. அணிலுக்கு மிகவும் அத்தியாவசியமானவை: சூரிய ஒளி இயற்கையான காற்று Calcium + Vitamin Supplements ஆரோக்கியமான உணவு வகைகள் அதனுடன் செலவிடுகிற நேரம் அணிலுக்குக் கெடுதல் விளைவிக்கக்கூடியவை: சீனி, Chocolates, எண்ணெய் உணவுகள் மனிதர்கள் உண்கிற உணவு வகைகள் அணில்கள் கிடைக்கிற எதையும் ஆர்வத்துடன் சாப்பிடுகிற பழக்கத்தை உடையவை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அணிலுக்கு எதையும் அளவுடன் கொடுப்பதே அதனுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதனுடைய பற்கள், எலும்புகள், நகங்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியமாக உள்ளது. வீட்டில் வளர்க்கிற எந்த அணிலுக்கும் இது அத்தியாவசியமானது. Calcium குறைபாட்டினால் அணில்கள் MBD - Metabolic Bone Disease என்ற நோய்க்கு உள்ளாகக்கூடிய துரதிர்ஷ்ட நிலை ஏற்படலாம். இதனால் அணில்களுக்கு படிப்படியாக சோர்வு ஏற்பட்டு, கால்கள் செயலற்று முடக்குவாதம் ஏற்படலாம் அல்லது திடீர் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. எனவே அணிலை நேசிப்பவர்கள், அணிலை வளர்ப்பவர்கள், இதைக் கவனத்தில் கொண்டு செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன். செல்லப்பிராணியான அணிலின் இழப்பு பெரும் வேதனைக்குரியது. அணில் குறித்து மேலும் இணையத்தில் தேடி வாசித்தறியுங்கள். இந்த செய்தியை மற்றவர்களுடனும் பகிர்ந்து செல்லப்பிராணி அணில்களைக் காப்பாற்றுவதற்கு உங்களாலான முயற்சியை எடுங்கள். நன்றி.