Пікірлер
@sivakumarramakrishnan7758
@sivakumarramakrishnan7758 8 сағат бұрын
Sir Physically chalanged person dharsan next booking date please
@GEINFOTEC
@GEINFOTEC 7 сағат бұрын
ஒவ்வொரு மாதமும் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு Senior Citizen, Physically Challenged person, Medically Challenged Person, இலவச தரிசன டிக்கெட் வெளியிடுவார்கள்... தற்போது ஜனவரி மாதம் வரை தரிசன டிக்கெட் முடிந்தது... வரும் நவம்பர் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு... பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியிடுவார்கள்...
@murthycreationuthaman8402
@murthycreationuthaman8402 Күн бұрын
Sir vanakkam whatsapp groups?
@GEINFOTEC
@GEINFOTEC Күн бұрын
வணக்கம் சார், மன்னிக்கவும், நமது சேனலுக்கு என்று தனிப்பட்ட எந்த ஒரு சமூக வலைதளக் கணக்கும் இல்லை... நமது சேனலில் தினமும் வீடியோ போடுவதற்கு எண்ணம் உள்ளது... ஆனால் தான் எனக்கு நேரம் கிடைப்பதில்லை.. எனவே மற்ற சமூகவலைதள கணக்குகளை கையாள்வது எனக்கு கடினமாக இருக்கும்... திருப்பதியில் கொடுக்கப்படும் எல்லா தரிசன டிக்கெட்டிலும், எல்லா சேவா டிக்கெட்டிலும், தரிசனம் பார்த்து இருக்கிறேன்... ஒரளவு ஒவ்வொரு மாதமும் என்னென்ன எப்பொழுது நடக்கும் என்ற தகவலும் தெரியும்.. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கடந்த 5 வருடங்களாக, நான் மாதத்திற்கு 2 முறை திருப்பதி செல்லும் போது அனைத்தையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன்... என்னிடம் கிட்டத்தட்ட 2TB வீடியோ உள்ளது.. அதை எடிட் செய்து போடுவதற்கு தகுந்த உபகரணமும், நேரமும் கிடைப்பதில்லை...
@SathishKumar-xu6yj
@SathishKumar-xu6yj Күн бұрын
ஓம் நமோ நாராயணா
@GEINFOTEC
@GEINFOTEC Күн бұрын
🙏🙏🙏
@ramadv
@ramadv 2 күн бұрын
Tommorow without any plan maximum tharisnam morning rush 5to 6 hrs or more?
@GEINFOTEC
@GEINFOTEC 2 күн бұрын
நாளை சனிக்கிழமை என்பதால் எப்போதுமே சனிக்கிழமை தான் கூட்டம் இருக்கும்.. எனவே 6 மணி முதல் 8 மணி நேரம் ஆகலாம்
@GEINFOTEC
@GEINFOTEC 2 күн бұрын
நண்பரே உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. எப்போழுதுமே திருப்பதி பயணத்தை திட்டமிட்டு பயணிக்கும் போது தான் மிகச் சரியாக அமையும்... உதாரணத்திற்கு நமக்கு எப்போழுது விடுமுறை கிடைக்கிறதோ!! அன்று திருப்பதி பயணிப்பதை தவிர்த்து... திருப்பதியில் என்று கூட்டம் குறைவாக இருக்கும்.. எப்பொழுது போனால் மிகச் சிறப்பான தரிசனம் பெற முடியும்... எப்போது போனால் இலவச டிக்கெட் எளிதாக வாங்க முடியும்... இதனை கணக்கிட்டு திருப்பதிக்கு பயணிக்கும் போது... மிக அற்புதமான பயணமாகவும்... மன நிறைவான தரிசனமும் அமையும்... இது என்னுடைய அனுபவ அறிவு... நான் பயன்படுத்தும் யுக்தி...
@ramadv
@ramadv 20 сағат бұрын
@@GEINFOTEC sir your quick response heartly thanks sir
@RaviChandran-ee6vu
@RaviChandran-ee6vu 2 күн бұрын
14/1/2025 ticket open date சொல்லமுடியுமா
@GEINFOTEC
@GEINFOTEC 2 күн бұрын
கணிக்க முடியவில்லை நண்பரே ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி நடைபெறும்.. எப்போதுமே அதற்கான டிக்கெட்டுகள் தனியாகத்தான் வெளிவிடுவார்கள்... சென்ற வருடம டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி ஆரம்பித்தது.. அதற்கான டிக்கெட்டும் டிசம்பர் மாதம் தான் வெளியிட்டார்கள்... அதை வைத்துப் பார்க்கையில் இந்த டிக்கெட்டுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படலாம்... TTD தான் அறிவிப்பை வெளியிட வேண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் நிச்சயமாக நாம் அப்டேட் செய்கிறேன்.... ஏன் கணிக்க முடியவில்லை என்றால் கடந்த 5 வருடங்களாக ஒரு விதிமுறை வகுத்து அது முன்னரே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.... ஒரு சில நேரங்களில் மட்டுமே சில மாற்றங்களை திடீரென புகுத்தினார்கள்... ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு டிக்கெட் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் அதேபோல் வைகுண்ட ஏகாதசி டிக்கெட் 20 நாட்களுக்கு முன்பாக வெளியிடுவார்கள்... சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியிட்டார்கள்... தற்போது புதிய அரசாங்கம் புதிய நிர்வாக அமைப்பு எனவே இவை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது... இன்று வெளியிடப்பட்ட ஜனவரி மாத டிக்கெட்டில் ஜனவரி 1 புத்தாண்டுக்கான டிக்கெட்டும் வெளியிடப்பட்டது.. ஆனால் அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை... கடந்த மூன்று வருடங்களாக ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டுக்கான டிக்கெட்டுகள் தனியாகத்தான் வெளியிடப்பட்டன எனவே வைகுண்ட ஏகாதசிக்கான டிக்கெட் திடீரென அறிவிப்பு வெளியிடலாம்... அறிவிப்பு வந்தால் நிச்சயமாக உடனடியாக நமது சேனலில் அப்டேட் செய்கிறேன்...
@amarjanuworld
@amarjanuworld 2 күн бұрын
Anna please reply Srinivasam rest house la room book panom just now no of persons 2 only katuthu nanga 3 persons 1 baby Stay panna mudiuma illa ethachu solluvangala sollunga anna please 1st time onnum purila
@GEINFOTEC
@GEINFOTEC 2 күн бұрын
நீங்கள் ஏன் கீழ் திருப்பதியில் தங்குகிறீர்கள் திருமலையில் ரூம் எடுக்க வேண்டியதுதானே? நேற்று அதற்கான தகவல் தானே கேட்டீர்கள்.... ரூம் புக்கிங் செய்யும்போது 2 நபர்களுடைய தகவலை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்... அதனால் 2 நபர்களுடைய தகவலை மட்டுமே கேட்கும்... இதை எதற்காக பதிவிட சொல்கிறார்கள் என்றால் 2 நபர்களில் யாராவது ஒருவர் வர முடியாமல் போனால் மற்றொருவர் அவருடைய தகவலை கொடுத்து ரூமை பெற்றுக் கொள்ளலாம் அதற்காக 2 நபர்களுடைய தகவலை பதிவு செய்ய சொல்கிறார்கள்... தங்குவதற்கு அல்ல... ரூமில் தங்குவதற்கு ஆறு பேர் வரை அனுமதி உண்டு. நாங்கள் 10 பேர் கூட தங்கி இருக்கிறோம்...
@TRPSHENTHILVEL
@TRPSHENTHILVEL 3 күн бұрын
சாமி சேவ் பண்ணியாச்சு சாமி ஆனா விருச்சுவல் சேவலை போயிட்டு எனக்கு ஃபேஸ் பண்ண முடியல என்னால
@GEINFOTEC
@GEINFOTEC 3 күн бұрын
மீண்டும் முயற்சி செய்யுங்கள்...
@amarjanuworld
@amarjanuworld 4 күн бұрын
Anna 1st time poga porom onnume purila so many places special dharisanam 300 rs ticket than book panna poren 4 peoples porom enga stay pannalam room price enna varum? Budget friendly Which slot ticket is best Illa room illamaye poitu vara mudiuma??
@GEINFOTEC
@GEINFOTEC 4 күн бұрын
உங்களுடைய பயணத்திட்டம் சிறப்பானது அதையே செயல்படுத்துங்கள்... 300ரூ தரிசன டிக்கெட் 4 பேருக்கும் புக்கிங் செய்து கொள்ளுங்கள்... இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்தில் தரிசனம் பார்க்கலாம்... மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை உள்ள ஸ்லாட் பயன்படுத்த வேண்டாம், அந்த ஸ்லாட்டில் தான் நிறைய பேர் வருவார்கள் கூட்டமாக இருக்கும்... சில நேரம் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும் தரிசனம் பார்க்க குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்.... மற்ற எந்த சிலாட் உங்களுக்கு பொருத்தமாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்... உங்களுக்கு வசதியாக இருந்தால் இரவு பத்து மணி ஸ்லாட் சிறப்பாக இருக்கும் 2 மணி நேரத்தில் சாமி பார்க்க முடியும்... தரிசன டிக்கெட் புக்கிங் செய்த அதே மொபைல் நம்பரில் லாகின் செய்து, ரூம் புக்கிங் செய்து கொள்ளுங்கள்... திருமலையில் ரூம்கள் 50₹, 100₹, 1000₹, 1500₹, ரூம்கள் உள்ளன.... 100 ரூபாய்க்கு நல்ல ரூம்கள் கிடைக்கும்... ரூம் புக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், Room check in time சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும், அதாவது 12:00 to 6:00, 06:00 to 12:00, 12:00 to 18:00, 18:00 to 12:00 என நான்கு விதமான Room check in time இருக்கும் இதில், நீங்கள் திருமலைக்கு எந்த நேரத்தில் சென்றடைவர்களோ, அந்த நேரத்திற்குரிய Room check in time மை தேர்ந்தெடுக்கவும்... உதாரணத்திற்கு நீங்கள் மதியம் 2 மணிக்கு திருமலையை சென்றடைவார்கள் என்றால் மதியம் 12:00 முதல் 18:00 மணி வரை உள்ள Room check in time மை தேர்ந்தெடுக்கவும்... நீங்கள் மாலை 6:00 மணிக்கு தான் திருமலையை சென்றடைவீர்கள் என்றால், மாலை 18:00 மணி முதல் இரவு 12 மணி வரை உள்ள Room check in time மை தேர்ந்தெடுக்கவும்.... ரூம்கள் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், நீங்கள் இலவச தங்குமிடங்களில் தங்கிக் கொள்ளலாம் அதுவும் ஓரளவு நன்றாக இருக்கும், குறிப்பாக பேருந்து திருமலை நிலையத்திற்கு எதிரில் உள்ள மாதவ நிலையம் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது நன்றாக இருக்கும்....
@amarjanuworld
@amarjanuworld 4 күн бұрын
@@GEINFOTEC romba thanks 🙏🏻🙏🏻
@amarjanuworld
@amarjanuworld 3 күн бұрын
Anna room book pannum pothu no of persons 2 kattuthu avunga mattum than stay panna mudiuma nanga 3 person + 1 baby enna pandrathu Please reply me
@GEINFOTEC
@GEINFOTEC 2 күн бұрын
@amarjanuworld ரூம் புக்கிங் செய்யும்போது இரண்டு நபர்களுடைய தகவலை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்... அதனால் இரண்டு நபர்களுடைய தகவலை மட்டுமே கேட்கும்... ரூமில் தங்குவதற்கு ஆறு பேர் வரை அனுமதி உண்டு. நாங்கள் 10 பேர் கூட தங்கி இருக்கிறோம்...
@amarjanuworld
@amarjanuworld 2 күн бұрын
@@GEINFOTEC romba thanks anna bayanthu poiten
@vijaykathirvel8988
@vijaykathirvel8988 5 күн бұрын
ஐயா ஶ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக வந்து குழந்தைகளுடன் முடி காணிக்கை கொடுத்து விட்டு தரிசனம் செய்ய வேண்டும் என்றால் எத்தனை மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடியும் தரிசனம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் எங்கே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விபரங்களை கூறுங்கள் ஐயா
@GEINFOTEC
@GEINFOTEC 4 күн бұрын
வணக்கம் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக குழந்தைகளுடன் நடந்து படி ஏறுவதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும்... தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வதாக இருந்தால் ஆன்லைனில் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும்... தரிசன டிக்கெட் புக்கிங் செய்வதாக இருந்தால் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஜனவரி மாதம் தரிசனம் பார்ப்பதற்கான, 300ரூ தரிசன டிக்கெட் வெளியிடுவார்கள்.. இந்த டிக்கெட்டை புக்கிங் செய்தால் 2 முதல் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம்.... அல்லது எந்தவித டிக்கெட்டும் புக்கிங் செய்யாமல், திருப்பதிக்கு வந்து அதே நாளில் தரிசனம் பார்ப்பதற்கு, கீழ் திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவார்கள், அதை வாங்கிக்கொண்டு ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக நடந்து மலையேறி 3 முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் பார்க்கலாம்.... அல்லது ஸ்ரீவாரி மெட்டிலேயே அடிவாரத்தில், காலை 6:00 மணி முதல் ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவார்கள், அதை வாங்கிக் கொண்டு மலை ஏறி 3 முதல் 4 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம்.... ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக நடந்து சென்று இலவச டோக்கனில் 1மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்த்த என்னுடைய அனுபவ வீடியோ; kzbin.info/www/bejne/Z3KVd56Gmbl7ftU
@GEINFOTEC
@GEINFOTEC 4 күн бұрын
திருப்பதி 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள். °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ❤️ திருப்பதியில் 2 முதல் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்க கூடிய 300ரூ தரிசன டிக்கெட்டுகள்... ❤️ 2025 ஜனவரி மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் 👉 24.10.2024 காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது தேவைப்படுவோர் புக்கிங் செய்து கொள்ளவும்..... ❤️ ஆதார் கார்டு தகவல் வைத்து மட்டுமே புக்கிங் செய்ய முடியும்... ❤️ மொபைல் நம்பர் கொடுத்து OTP மூலம் லாகின் செய்து புக்கிங் செய்ய வேண்டும்... ❤️ ஒரே டிக்கெட்டில் 6 நபர்கள் வரை புக்கிங் செய்யலாம்... ❤️ 6 நபர்களுக்கு மேல் டிக்கெட் புக்கிங் செய்வதாக இருந்தால் வேறொரு மொபைல் நம்பரில் லாகின் செய்து..... புக்கிங் செய்து கொள்ள வேண்டும்... ❤️ கிரெடிட் கார்டு ,டெபிட் கார்டு UPI, கூகுள் பே, போன் பே, மொபைல் பேங்கிங், மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த முடியும்... ❤️ 300 ரூபாய் தரிசன டிக்கெட்டில் தரிசனம் பார்க்க..... உடை கட்டுப்பாடு உள்ளது... ❤️ ஆண்கள் வேட்டி சட்டை அணிந்து இருக்க வேண்டும்.... ❤️ பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிந்து இருக்க வேண்டும்.... ❤️ தரிசனத்திற்கு செல்லும் போது தவறாமல்....... தரிசன டிக்கெட்.... மற்றும் ஒரிஜினல் ஆதார் அட்டை.... இரண்டையும் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்...... 💥 300ரூ தரிசன டிக்கெட்டை நம் வீட்டில் இருந்தபடியே..... எளிதாக நமது போனில்.... புக்கிங் செய்வது எப்படி வீடியோ : kzbin.info/www/bejne/iZDalpSQrc-cb5Y 💥 Clipboard Copy paste method மூலம் டிக்கெட்டை எளிதாக..வேகமாக.. புக்கிங் செய்வது எப்படி ; kzbin.info/www/bejne/a6DalXqtrtSkaJo 💥 300ரூ டிக்கெட் புக்கிங் வெப்சைட் லிங்க்: ttdevasthanams.ap.gov.in
@GEINFOTEC
@GEINFOTEC 4 күн бұрын
திருப்பதிக்கு எந்தவித டிக்கெட்டும் இல்லாமல் வரும் பக்தர்கள் இலவசமாக 3 முதல் 5 மணி நேரத்தில் தரிசனம் பார்க்க... தினமும்.... இலவச தரிசன டோக்கன்கள் கொடுக்கிறார்கள்... 1. (SSD) Slotted Sarva Darshan Token for ALL Pilgrims...... 2. (DD) Divya Darshan Token Srivari Mettu FOOTPATH Pilgrims இந்த இலவச டோக்கன்கள் இருந்தால் 3 முதல் 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம்.... டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.... SSD இலவச டோக்கன்கள் கீழ் திருப்பதியில் மட்டுமே வழங்கப்படுகிறது.... மலைக்கு மேல் திருமலையில் வழங்கப்படுவதில்லை..... °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° கீழ் திருப்பதியில் SSD slotted Sarva Darshan Tokens 1. விஷ்ணு நிவாசம் (ரயில் நிலையம் எதிரில்) 2. சீனிவாசம் காம்ப்ளக்ஸ் (பேருந்து நிலையம் அருகில்) 3. பூதேவி காம்ப்ளக்ஸ் (அலிபிரி பாலாஜி பஸ் ஸ்டாண்ட்) மொத்தம் 3 இடங்களில் இந்த டோக்கன்கள் வழங்கப்படுகிறது.... இந்த டோக்கன்கள் அதிகாலை 2 மணிக்கு கவுண்டர்கள் திறந்து டோக்கன்கள் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.... பக்தர்கள் இரவு 10 மணிக்கே வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுவார்கள்... இந்த டோக்கன்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.... ஒரு நாளைக்கு 15 முதல் 20 ஆயிரம் டோக்கன்கள் கொடுப்பார்கள்.... டோக்கன்கள் தீர்ந்த பிறகு கவுண்டர்களை மூடி விடுவார்கள்..... பெரும்பாலான நாட்களில் காலை 5:00 மணிக்குள் இந்த டோக்கன்கள் தீர்ந்து விடும்... ஒரு சில நாட்களில் மட்டுமே மதியம் வரை டோக்கன்கள் இருக்கும்.... இந்த டோக்கன் உறுதியாக வேண்டுமென்றால் இரவு 10 முதல் 12 மணிக்குள் வரிசையில் இணைந்தால் நிச்சயமாக கிடைக்கும்.... இந்த டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்..... இந்த டோக்கன்கள் அன்றைய தினத்திற்கே தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும்.... மறுநாள் காலை தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும் சேர்த்தே வழங்குவார்கள்.... நீங்கள் எவ்வளவு விரைவாக கவுண்டரில் நின்று டோக்கன்களை பெறுகிறீர்களோ அதை பொறுத்தே அதே நாள் தரிசன டோக்கன் அல்லது மறுநாள் தரிசன டோக்கன் கிடைக்கும்... இந்த டோக்கனை பெற்றுக் கொண்டு..... பஸ்...கார்...பைக்... அல்லது நடந்தோ எப்படி வேண்டுமானாலும் திருமலைக்குச் சென்று டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம்.... ★★★★★★★★★★★★★★★★★★★★ 2. DD (Divya Darshan) Token °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை அடிவாரத்தில் உள்ள கவுண்டரில்...... ஒரு நாளைக்கு 3000 முதல் 4000.... இலவச திவ்ய தரிசன டோக்கன்கள் காலை 6 மணி முதல் வழங்குகிறது... இந்த டோக்கன் வாங்கிக்கொண்டு 1200 ஆவது படியில் ஸ்கேன் செய்ய வேண்டும்... ஸ்கேன் செய்தால் மட்டுமே டோக்கன் செல்லுபடியாகும்... இந்த டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்... பெரும்பாலான நாட்களில் காலை 8 மணிக்குள் இந்த டோக்கன் தீர்ந்து விடுகிறது... SSD இலவச தரிசன டோக்கன்கள் ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்கள் கொடுப்பார்கள்... எப்பொழுது போனால் எளிதாக டோக்கன் வாங்கலாம்..... முழுமையான தகவல்கள் வீடியோ; kzbin.info/www/bejne/roWbaYivodargcU திருப்பதி சீனிவாசம் காம்ப்ளக்ஸில் இரவு 10 மணிக்கு இலவச டோக்கன் வரிசை எங்கு தொடங்கும்??? எப்படி இருக்கும்??? ஆரம்பம் முதல் இறுதி வரை முழு வீடியோ; kzbin.info/www/bejne/sIu8aYiAlMdkb9E திருப்பதியில் ரூம் கிடைக்கவில்லையென்றால் பக்தர்கள் இலவசமாக தங்க, தூங்க, குளிக்க, சாப்பிட மொட்டை போட, பேக் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க..... இலவச தங்கும் இடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வீடியோ; kzbin.info/www/bejne/bXKlqWybgJhljaM இந்த இலவச டோக்கனில் 1 மணி நேரத்தில் தரிசனம் பார்த்த என்னுடைய அனுபவம் kzbin.info/www/bejne/Z3KVd56Gmbl7ftU திருப்பதிக்கு எளிதாக எப்படி போகலாம்???? பஸ், ரயில்,புறப்படும் நேரம்.... டிக்கெட் விலை.... முழுமையான திருப்பதி பயண தகவல்கள் kzbin.info/www/bejne/fH7EpaOcfribeLM திருப்பதியில் ஒரே நபர் தொடர்ந்து 30 முறைக்கு மேல் தரிசனம் பார்க்க கூடிய 500ரூ விர்ச்சுவல் சேவா டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி? A to Z முழுமையான தகவல்கள்; kzbin.info/www/bejne/Y6bKon-Qq6Z1f5o திருப்பதியில் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்க கூடிய 300ரூ தரிசன டிக்கெட் வீட்டிலிருந்த படியே நமது போனில் எளிதாக, வேகமாக புக்கிங் செய்வது எப்படி????? A to Z முழுமையான தகவல்கள்; kzbin.info/www/bejne/iZDalpSQrc-cb5Y திருப்பதியில் 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்க கூடிய 500ரூ ஆர்ஜித சேவா + தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி முழுமையான தகவல்கள்; kzbin.info/www/bejne/i6rKkqGhrtKlobc திருப்பதியில் 120ரூபாயில் VIP தரிசனம் பெருமாளுக்கு மிக மிக அருகில் சென்று தரையில் அமர்ந்து நீண்ட நேரம் தரிசனம் பார்க்க வேண்டுமா!!!???? A to Z முழுமையான தகவல்கள் வீடியோ; kzbin.info/www/bejne/mJOupZqClL-Ln6c
@vijaykathirvel8988
@vijaykathirvel8988 3 күн бұрын
@@GEINFOTEC ரொம்ப நன்றிங்க ஐயா 🙏
@GEINFOTEC
@GEINFOTEC 3 күн бұрын
@vijaykathirvel8988 🙏🙏🙏
@sakthiwalker9418
@sakthiwalker9418 5 күн бұрын
January 9 to 20 varaikkum today release panna seva la slot not available nu varuthu sir
@GEINFOTEC
@GEINFOTEC 5 күн бұрын
ஆம் நண்பரே.. ஜனவரி 9 முதல் 20 வரை ஆர்ஜித சேவா டிக்கெட், வைகுண்ட ஏகாதசி காரணமாக வெளியிடப்படவில்லை... ஜனவரி 10 முதல் 19 வரை வைகுண்ட ஏகாதசி நடைபெறும் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட் தனியாக வெளியிடுவார்கள்.... அதுவும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் மட்டுமே வெளியிடுவார்கள்... அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை.. விரைவில் வெளியிடப்படலாம் அல்லது வழக்கம்போல் டிசம்பர் மாதத்தில் வைகுண்ட ஏகாதசிக்கான டிக்கெட்டுகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது...
@rathinasamym6762
@rathinasamym6762 5 күн бұрын
How to enter age in t t d application. Only 2024 comes. My age is 70 ,, 1954 born
@GEINFOTEC
@GEINFOTEC 5 күн бұрын
இது வழக்கமாக ஏற்படும் ஒரு பிழை... மீண்டும் முயற்சி செய்யவும் அல்லது வெப்சைட்டில் புக்கிங் செய்யவும்.... நமது இணைய இணைப்பு சரியாக இல்லை என்றாலும் அல்லது இணைப்பில் நிறைய நேரம் இருந்தால் இப்பிழை ஏற்படும்....
@Baskaran-x9q
@Baskaran-x9q 6 күн бұрын
❤🙏💐ஓம் நமோ நாராயணாய🙏ஓம்நமோநாராயணாய 🙏🙏ஓம்நமோநாராயணாய 🙏🙏🙏
@GEINFOTEC
@GEINFOTEC 5 күн бұрын
🙏🙏🙏
@pachamuthu8286
@pachamuthu8286 7 күн бұрын
Super
@GEINFOTEC
@GEINFOTEC 7 күн бұрын
Thank you 🙏🙏🙏
@ravichandran.761
@ravichandran.761 8 күн бұрын
Thrilling sir..
@GEINFOTEC
@GEINFOTEC 8 күн бұрын
Thank you sir 🙏🙏🙏