Lyrics தூயர் நீங்கள் அன்றோ பாவி நாங்கள் அன்றோ.... நீங்கள் சாஹே ஹரம் நான் ஃபகீரே அஜம் நீங்கள் உயர்வின் குணம் நாங்கள் தாழ்ந்த இனம் நீங்கள் கோவின் கொடை... தூதர் நீங்கள் அன்றோ பாவி நாங்கள் அன்றோ இல்ஹாமை உடையாய் அணிந்தவர் குர்ஆனின் கருவாய் அமைந்தவர் உங்கள் சிம்மாசனம் அர்சே அழீம் யா ரஹ்மத்தன் லில் ஆலமீன் நீங்கள் ஹகீகத் நான் அதை உணர துடிக்கின்றவன் தகித்திடும் எமக்கு நன்னீரின் கடல் நீங்களே என்னில்லம் மண்ணிலே நும் பயணம் விண்ணிலே ஸித்ரத்துல் முன்தஹா..... நான் நிலைகுலைந்து தடுமாறி விழும் முன்னரே உங்கள் திருகாட்சியே என்றும் எமை தேற்றுமே எங்கள் நன்னேரமே நான் உங்கள் உம்மத்தே நீங்கள் தருவீர் ரிழா வானோரே மிஃராஜின் சுல்தான் நபியவர்களே நீங்கள் பார்த்தாலே பரவசத்தில் உறைவீர்களே சூரா வல்லைலு திரு முடியை விபரிக்குமே முழு குர்ஆனும் முக அழகின் புகழ் கூறுமே முகம்காணவே முகம்காணவே முகம்காணவே எங்கள் அண்ணலே அன்பியா அணியின் இமாம் நாமம் கேட்டாலே நவில்ந்திடனும் சல்லியலா சொல்லனும்..... சல்லி அலா சல்லி அலா தூக்குஜா மன்குஜா முஸ்தஃபா முஜ்தலா யா ரஹ்மத்துன்லில் ஆலமீன் படைப்பில் புனிதர் தங்கள் நிலை ஹக்கின் குரல் உங்கள் உரை வானோரே உங்கள் வாசகர் ஜிபுரீல் ஆமீன் உங்கள் சாரதி யா ரஹ்மத்துன்லில் ஆலமீன் நீங்கள் பேரௌியாம் போர்வையை அணிந்தவர்கள் நாங்கள் சலவாத்தை கோர்வையாய் மொழிபவர்கள் இஸ்கின் காபா நீங்கள் சுற்றி வருவோர் நாங்கள் தேட்டம் தீர்ப்போர்களே தூயர் நீங்கள் அன்றோ பாவி நாங்கள் அன்றோ....
@shaiksoofi37414 жыл бұрын
Masha Allah barakallahu lahu va nafa allahu be he 😍🤩🤗