25:30 - பத்துக் குற்றங்கள் என்பவை, ஒரு நூலில் இருக்கக்கூடாதவை என நன்னூல் வரையறுத்துக் கூறுவதாகும். 1.) குறிப்பிட்ட ஒரு பொருளை விளக்குவதற்கு தேவையான சொற்களில் குறைவுபடக் கூறுதல் 2.) குறித்த ஒரு பொருளை விளக்குவதற்கு தேவையான சொற்களைவிட மிகைப்படக் கூறுதல் 3.)சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுதல் 4.)முன்னர் சொல்லிய ஒரு செய்திக்கு முரணாகக் கூறுதல் 5.)குற்றமுடைய சொற்களை ஆங்காங்கே சேர்த்தல் 6.)கூறவேண்டிய செய்தியை இதுவோ அதுவோ என்று தயக்கத்தோடு கூறுதல் 7.)பொருளோடு பொருந்தாத வெறும் சொற்களை அடுக்கி அலங்கரித்துக் கூறுதல் 8.)சொல்லத் தொடங்கியப் பொருளை விட்டுவிட்டு இடையில் மற்றொரு பொருளைக் குறித்துப் பேசுதல் 9.)விரிவாகச் சொல்ல ஆரம்பித்து பொருளை போகப்போகச் சொல்நடையும் பொருள் நடையும் தேய்ந்து குறைத்து முடித்தல் 10.)சொற்களிருந்தும் அவற்றால் பொருட்பயன் ஏதுமில்லாது கூறல் ஆகிய இப்பத்தும் ஒருநூலுக்கு இருக்கக்கூடாத குற்றங்களாகும்.
1:51:30 अविद्यास्मितारागद्वेषाभिनिवेशाः क्लेशाः ||३|| அவித்யா, அஸ்மிதா, ராக, த்வேஷ, அபிநிவேஷங்கள் - யோக ஸூத்ரம் 2-3 2.3 The five afflictions are ignorance, egoism, attachment, aversion, and the desire to cling to life.
@logeshlovely69922 жыл бұрын
25/10/22 மிக அருமையான விரிவான விளக்கம். ஐயா அவர்கள் எல்லாம் வல்ல இறைவருளால் பூரண உடல்நலத்துடன் வையகம் பயன் பெற நீடுழி வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.நன்றி!
@schoolbreeze80217 жыл бұрын
ஜெயராஜ் எனும் ஒளிச்சுடர் தமிழ்த்தாயின் அருமையை விளக்குவதற்கு கம்பன், வள்ளுவள், இளங்கோ, பாரதி வரிசையில் இத்தரணியில் உதித்தனன். நன்றி! நன்றி! நன்றி!
@Rktrends7854 жыл бұрын
குறள் : 35 அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம். அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)
@Rktrends7854 жыл бұрын
குறள் : 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.
@Rktrends7854 жыл бұрын
குறள் : 36 அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
குறள் : 33 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல். ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)
@vedanishtha3 жыл бұрын
24:40 அனுவதித்தல் - அனுவாதம் அனு - தொடர்ந்து, வதனம் - கூறல், மீண்டும் கூறல்
@vedanishtha3 жыл бұрын
1:19:00 இழுக்கா - இழுக்காகக் கருதி நீக்கி, இயன்றது - இயற்றுவது, அறம்
@Rktrends7854 жыл бұрын
குறள் : 39 அறத்தான் வருவதே இன்பமற்றெல்லாம் புறத்த புகழும் இல. அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. ('ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.)
@Rktrends7854 жыл бұрын
குறள் : 32 அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
@RaniRani-ft4rv2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@saraswathisrinivasan4544 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா ,வணக்கங்கள் பல 🙏🙏
@09natarajanАй бұрын
சிவாய நம
@Thirunavukkarasar19872 жыл бұрын
முக்கிய பதிவுகள்
@revathyshankar34503 жыл бұрын
மிக நன்றாக இருந்தது ஐயா 🙏😍👌🤩💖💐🍊மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@visvarajvisvaraj5373 жыл бұрын
ஆழ்ந்த கருத்துக்கள்......அருமை பதிவுகள் ......நன்றி ஐயா...
@gncvari28037 жыл бұрын
God bless you dear Karka Kasadara ...For you service...Ramasamy.Muscat...
@Krishnaveni-os3xn2 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா
@nageswarithamotharampillai46823 жыл бұрын
Namaskaram GuruJi Humble Pranams Thank you for the teachings with Gratitude
@muthuswamys7046 жыл бұрын
watching this episode 3rd time thankto ayya jeyaraj sir
@selvamnagarajan12353 жыл бұрын
🙏🙏
@manikandan-bx8jw3 жыл бұрын
Unable to download offline. please help
@l4rjy4 жыл бұрын
திருக்குறளை உலகம் எலாம் பரவும்வகை செய்யும் உங்களுக்கு முயர்ச்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். You tube இல் upload பண்ணியதற்கு இன்னும் ஒருமுறை நன்றிகள். இவற்றை படிப்பதற்கு நேரம் இல்லையே என்ற கவலையை தீர்த்தீர்கள். எமக்கு விரம்பிய நேரத்தில், இருந்த இடத்தில் இருந்தே படிக்க ஏற்பாடு செய்து தந்து விட்டீர்கள். மிக்க நன்றி. உங்கள் இப்பணி இன்னும் தொடர எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக!
@Krishnaveni-os3xn2 жыл бұрын
மிக்க நன்றி
@கார்மேகம்-ட2ற4 жыл бұрын
Nandri fully watched Learn Lot
@dillirajsomasundaram75122 жыл бұрын
Yes . Iyya elevates Parimel Azhagar to an extent that it insults ep porul yar yar vai ketpinum ---. Azhagar wrote with a clear object of colourising Thirukural with Vaidigam. Thiruvalluvar Thidikiduvar !
@முத்தையாமுருகேஸ்வரி7 жыл бұрын
அருமை .நன்றி ஐயா .
@rajarajan77327 жыл бұрын
கேள்வி பதில் பகுதியினை வாய்ப்பிருந்தால் வெளியிடவும்
@SKL20207 жыл бұрын
நன்றிகள் பல கோடி
@mohanmaths58873 жыл бұрын
ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்...
@rameshs68137 жыл бұрын
மிகச் சிறப்பு...
@vedanishtha3 жыл бұрын
2-11-40 செயற்பாலதோரும் - செய்யவேண்டியது எல்லாம் உயற்பாலதோரும் - செய்யாமல் உய்ய வேண்டியது எல்லாம்
@rajarajan77327 жыл бұрын
அடுத்த வகுப்பினை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.
@vasanthir51054 жыл бұрын
🙏
@aswanth. Жыл бұрын
அறம் வெல்லும்
@pudukottairamakrishnan81694 жыл бұрын
நல்ல முயற்சி.
@salagap7 жыл бұрын
பாயிரம் இயல் - அதிகாரம் 4 - அறன் வலியுறுத்தல்
@hiranyasritharan7138 Жыл бұрын
எப்போது இராமாயணம் கற்பிப்பீர்கல்
@guruduttneethirajan28417 жыл бұрын
மிகவும் நன்றி நன்றி
@bavanisiva90586 жыл бұрын
Sahaj Marg is an organization which gives you practical experience for all these explanation. I'm saying this with conviction.
@susheelaj93177 жыл бұрын
Iyya vanakkam .thank you very much, bless us
@thamizhmadhu6 жыл бұрын
ஐயா உரையை கேக்கும்போதும் பரிமேல் அழகரை சிலாகித்துப் போசும்போதும், திருக்குறளை எழுதியது திருவள்ளுவரா இல்லை பரிமேல் அழகரா என்கிற ஐயம் வந்துவிடுகிறது ..இருந்தாலும் திருக்குறள் அற கமுக்கங்களை கேட்க கேட்க புதுவித அனுபவம். நன்றி ஐயா
@yeshwanthss8 ай бұрын
திருள்ளுவர் தான் திருக்குறளை இயற்றினார் ஐயா. சந்தேகம் வேண்டாம்.🙂
@muthusamy9697 жыл бұрын
Waiting for this. So much thanks to karka kasadara!
@viswana79777 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@God-o_f-demon79577 жыл бұрын
கேள்வி பதில் பகுதியையும் பதிவேற்றினால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்
@muthuswamys7046 жыл бұрын
i also agree for this
@pvpbalaji20797 жыл бұрын
VERY NICE SIR
@mohanm97464 жыл бұрын
ஐயா உங்கள் பிரசங்கம் என்னை எங்கோ இட்டுசெல்கிது
@tamilentdr.v.r.p75144 жыл бұрын
அய்யா, விண்ணுலகத்திற்கும் வீட்டிற்கும் என்ன வேற்றுமை.
@vedanishtha3 жыл бұрын
ஸ்வர்கம், முக்தி
@dhandapani5206 Жыл бұрын
The concept of "Aram" i.e.living a virtuous/righteous way of life encompassing human values, a sublime Hindu way of life, pre ordained for human beings to live such a life according to the code of ethics, were propounded by our ancient Rishis to keep our souls clean with a view to bringing about a perfect future man endowed with Godly characters, the ultimate aim of human life; our Thirukkural, a peerless ancient classical literary masterpiece, highlights in its "Arathupal" about such an ethical way of life to be practised in our life as envisaged in our native culture! Due to the onslaught of western culture, we are compelled to run after material wealth in mundane affairs forgetting about the sublime ideals of a spiritual life! How long will it take to realise about our ongoing aberrant way of life and return to the fold of our native spiritual Hindu way of life, nothing can be said with certainty!
@thevarasasubramaniam46077 жыл бұрын
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் ஒருவர்கு நாம் அறம் செய்கின்றோம் என்பதற்காக ஒரு ஏழையை நாம் பணம் கொடுத்து அவரை நாம் சோம்பேறி ஆக்கின்றோமல்லவா?ஏனென்றால்.அப்படிப் பட்டவர் தொளில் ஈடு பாட்டில் ஈடுபடாமல் மற்றவர்களிடம் இரந்து வாழலாமே என்ற எண்ணம் தானே ஏற்படும் இதனால் சமூகத்தில் சுயமாகச் சம்பாதித்து வாழ ஆர்வம் வருமாய்யா?இதனால் தான் நான் நினைக்கின்றேன் ஆரோக்கிய ஏழைகளுக்கு பண உதவிகளைச் செய்யாமல் அப்படிப் பட்டவர்கள் எப்படி சுயமாக சம்பாதித்து வாழ வழிகாட்டிவிடலாமென நினைக்கின்றேன்.தப்பாய்யா? இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா ⚘☇🏹💥🔥💧🌏
@senthilkumarmanoharan95826 жыл бұрын
பனம் இன்று உதவும் , கல்வி இந்த பிறவி உதவும், ஆன்மீகம் அவன் இனி எடுக்கும் அனைத்து பிறவிக்கும் உதவும் , ஆன்மீக உதவியே பெரிய உதவி என்கிறார் விவேகானந்தர். இறைவழிபாட்டு முறைகளை வளப்படுத்துவதே அனைத்து உயிர்களுக்கும் செய்யும் நீடித்த உதவியாகும்
@banumathyrajendran24005 жыл бұрын
அறம் என்பது இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும் எனககூறுவதாகும்