Рет қаралды 81,281
மதுரை மேலூர் அருகே வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை சந்தித்த பாஜ தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுடன் பேசி திட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார்.
கிராமங்களின் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தார். அதன் பின் மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்தது.
மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், அழகர்கோவில் வல்லாளப்பட்டியில்
மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தினர். இருவருக்கும் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். #tungsten #annamalai #modi #kishan #reddy #