ஒரு நல்ல குடும்பம் ஊருக்கும் நாட்டுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. அந்தக் குடும்பங்களை நிர்வகிக்கும் தாய்மார்களுக்கு சரியானதும் தகுதியானதுமான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும். குடும்பங்களின் சிதைவு தன்மை நாட்டின் வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கும். ஆகவே, அக் குடும்பப் பெண்களை மீட்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தயவு செய்து, மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி அவர்கள் இது குறித்து நேரடியாக விசாரித்து, இப் பெண்களை கடனில் இருந்து மீட்டு எடுக்க வேண்டுகிறோம். சிறு தொழில் செய்யும் பெண்களுக்கு வட்டி இல்லா கடன்களை வழங்க வேண்டும்.