நெட்பிளிக்சில் பிளாக்மணி லவ் என்ற சீரியலில் வரும் காட்சி இது. இந்தக்காட்சி மட்டுமல்ல... இந்த சீரியல் மட்டுமல்ல நான்பார்த்த எந்த சீரியலிலும் இப்படியொரு காதல் ஜோடியை பார்த்தது இல்லை. இது துருக்கி சீரியல். ஆங்கிலத்தில் சப் டைட்டில் வருகிறது. ஓமர் ஒரு போலீஸ். எலிப் ஒரு பணக்காரவீட்டுப்பெண். வைர நகை வியாபாரம் மற்றும் டிசைனர். தன் அப்பாவின் கொலை சம்பந்தமாக ஓமருடன் பழகும் வாய்ப்பு எலிப்பிற்கு கிடைக்கிறது. நாளடைவில் ஓமர் மீது எலிப்பிற்கு காதல் ஏற்படுகிறது. இதே போல ஓமருக்கும் எலிப் மீது தீராத அன்பு ஏற்படுகிறது. ஆனால் அதனை வெளிப்படையாக எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் ஒரு பிரண்ட் போலவே பழகுகிறான். எலிப் தன் காதலை சில முறை வெளிப்படையாக ஓமருக்கு சமிக்ஜை காட்டியும் ஓமர் தன் காதலை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை. எலிப்பின் சிறுவயது முதல் நண்பி பாகர். பாகர் எலிப்பின் அலுவலகத்திலும் வேலை பார்க்கிறாள். பாகர் தன் காதலனுடன் சேர்ந்து எலிப்பிடம் உள்ள வைரத்தை திருட முனைகிறார்கள். இதற்காக பாகர் தன் காதலனை எலிப்பின் அலுவலகத்தில் பைனான்சியல் மேனேஜராக சேர்த்து எலிப்பை லவ் செய்யச்சொல்கிறார். ஆனால் எலிப் காதலிப்பது ஓமரை. இதனை அறிந்த பாகர் எலிப்பிடம் ஓமர் பற்றி தவறான தகவல்களைக்கூறி ஓமருடான காதலை முறிக்கச்சொல்கிறார். ஒரு நாள் பாகரின் காதலன் மேனேஜராக இருப்பவன் எலிப்பை ஒரு சினிமாவுக்கு கூப்பிடுகிறான். எலிப் வேறு வேலை இருப்பதாக சொல்கிறாள். இந்தச்சமயம் ஓமர் வருகிறான். இதனால் ஓமர் மீது கடுப்பேற்ற தன் மேனேஜருடன் சினிமாவுக்கு செல்கிறாள். பின்னாலேயே ஓமரும் வருகிறானா என ஜாடை மாடையாக ஓரக்கண்ணால் பார்க்கிறாள். சினிமா தியேட்டருக்குள் மேனேஜருடன் ஒன்ராக அமர்ந்து சினிமா பார்க்கும் போதும் ஓமரும் உள்ளே வந்ததை கவனித்து அவனுக்கு மேலும் கடுப்பேத்த மேனேஜருடன் சிரித்து பேசுகிறாள். பாப்கார்ன் எடுத்து சாப்பிடுகிறாள். இதனால் ஓமர் கடுப்பாகிறான். பின் இருவரும் ஒரு ஓட்டலுக்கு செல்கிறார்கள். அங்கும் ஓமர் செல்கிறான். எலிப் தனியாக ஒப்பனை அறைக்குச்செல்கிறாள். அவளை பிந்தொடரும் ஓமர் ஒப்பனை அறையில் எலிப் செய்வது சரியில்லை என வாக்குவாதம் செய்கிறான். பின் எலிப்பின் கையை பிடித்து வெளியே அழைத்துவந்து, எலிப்பின் கைப்பையை எடுக்க வருகிறான். அப்போது மேனேஜர் தடுத்து நீ ஏன் எலிப்பின் கையை பிடித்துள்ளாய் என கேட்க, எலிப்பின் பாய்பிரண்ட் நானெக்கூற அந்த இடத்தில் எலிப் வியந்து ஒரு புன்முறுவல் பூக்கிறாள்.. ஓமர் எலிப்பை ஓட்டலை விட்டு பூங்காவெளியில் அழைத்து வரும்போது, எலிப் தன் கையை உதறிவிட்டு வேகமாக நடக்க பின் தொடரும் ஓமருக்கும் எலிப்பிற்கும் நடக்கும் வாக்குவாதத்தின் முடிவு என்ன ?