Perumal Utsavam Arumai Swami. please keep all divya desam mahimai.
@thenmozhi2912 жыл бұрын
Om namo Lakshmi narayanaya
@VenkatApn2 жыл бұрын
🙏🙏🙏🙏
@vasanthasaiprasad21072 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malathynarayanan60782 жыл бұрын
முதல் பகுதி - இன்றைய பகுதியில் பெருமாளின் லாவண்ய செளந்தர்யாதிகளுக்கு மூலமாய் இருப்பதே மஹாலஷ்மி என தன் நிரதிசய ஞானத்தால் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பிராட்டி வைபவத்தை உரைத்ததிலிருந்து திருக்குறுங்குடி நம்பி லாவண்யத்திற்கு விளக்காய் திகழ்வது போல் செளந்தர்யாதிகளுக்கு எடுத்துக்காட்டாய் நாகை செளந்தரராஜன் விளங்குகிறார் என்றும் திருமங்கை ஆழ்வார் இப்பெருமான் மீது பொன் இவர் மேனி ... அச்சோ ஒருவர் அழகிய வா என சௌந்தரராஜன் மீது ஒரு பதிகத்தை பாடி சிறப்பித்ததையும் கூறி வழிமொழிந்தார். அடுத்து அன்றாடம் நாம் தரிசிக்கும் அஷ்டலக்ஷமாகளில் ஆதிலக்ஷ்மியான மஹாலஷ்மி குணத்தில் இவளை காட்டிலும் உயர்ந்த சிறு புலியூர் திருமாமகள் நாச்சியாராக அருள் மாகடல் அமுதனுடன் சேவை சாதிக்கும் ப்ரபாவத்தை எடுத்துரைத்து 3 இடத்தில் மஹாலஷ்மி தன் ஸ்தானத்தை ஸ்தாபிக்கிறாள் என்றார். அவைகள் முறையே தனிக்கோயில் நாச்சியார், பெருமானின் திருமார்பு,உபய நாச்சிமார்களாக பெருமானுடன் இருப்பது. கோயிலில் பெருமானை தரிசிக்க முன்பு ஆழ்வார், ஆச்சாரியர்கள், விஷ்வக்சேனர், தனிக்கோயில் நாச்சியார் பின் பெருமாள் என்ற இந்த வரிசைக்ரமத்தில் சேவிப்பது உசிதம் என வலியுறுத்தினார். வ்யாக்ரபாதருக்கு பெருமான் ப்ரத்யக்ஷமாகியது சிறு புலியூர் திவ்யஸ்தலம் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகவும், பெருமான் திருமார்பில் உறைகின்ற பிராட்டியாகவும் இருந்து அடியார் களுக்காக பெருமானுடன் அளவளாவி புருஷகாரம் - பரிந்துரை செய்து ரக்ஷிக்கும் பிரபாவத்தையும் முன்மொழிந்தார் இதேபோல் தை மாசி பங்குனி சித்திரை பெருவிழாக்களை குறிப்பிட்டு, ஆதி ப்ரஹ்மோத்சவத்தில் பங்குனிஉத்திர திருநாளில் ஸ்ரீரங்கநாச்சியார் அவதரித்த தினத்தன்று ஸ்வாமி ராமானுஜர் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பெருமான் பிராட்டி இருவரையும் நம் சார்பில் சரணாக தி அடைந்த ப்ரதாபத்தை கூறும்போது "பகவத் நாராயண அபி மத அநுரூப ரூப" என பிராட்டி பெருமாள் இருவர் கருத்தும் ஒரு மித்து இருப்பது அபி மதம் எனவும், இருவரும் ரூபத்தில் ஒத்து இருப்பது அநுரூபம் எனவும் பெருமானின் ஸ்வரூபத்திற்கு ஏற்றார் பால் பிராட்டியும் நிகரான பெருமை படைத்தவள் என்றும் இவர்கள் இருவர் திருவடிகளை பற்றுவதே ப்ராப்யமாய் கொண்டு ஸ்வாமி ராமானுஜர் சரணாகதி அடைந்ததையும் எடுத்துரைத்தார். அன்று முழுவதும் விடியவிடிய ஸ்வாமி ராமானுஜர் திருக்கோஷ்டியூருக்கு 18 முறை படை எடுத்ததின் அடியாய் ஸ்ரீரங்கராச்சியாருக்கும் பெருமானுக்கும் 18 முறை திருமஞ்சனம் செய்வதை ப்ரஸ்தாபித்தார். அஹோபில வல்லி நாச்சியார் லக்ஷ்மியாங்கித வாம பாகமாகிய நரசிம்மனின் இடப்புறத்தில் வீற்றிருப்பதையும் முன்மொழிந்து, அல்லி மாதர் மஹாலஷ்மி பெருமானின் இரு திண்தோள்களை அணைத்திட இரண்டு தோள்களும் பன்மடங்காய் பெருகிய ப்ரபாவத்தையும் நித்ய அநபாயினியாக பிராட்டிபெருமானை விட்டு பிரியாமல் இருக்கிறார் என சாதித்தார். கைங்கர்யத்திற்கு தேவையான தனத்தை கொடுக்க நாம் பிரார்த்தித்து ஒரு நாயகமாய் ஓட உலகுண்டாண்டவர் என்ற பாசுரத்தை அனுசந்தித்து அதன் விளக்கத்தையும் அளித்து, ஒரிடத்தில் நெருப்பு பற்றிக் கொண்டால் அது சுற்றியுள்ள இடத்தையும் ஆக்ரமிப்பது போல், ஸதா போக லீலையாய் மஹாலஷ்மி திருநாராயண பெருமாளையே தன் சொத்தாக ஏற்றுக் கொண்டாள் மேலும் டெ ல்லி பாதுஷாவிடமிருந்து செல்லப்பிள்ளையை ஸ்வாமி மீட்டியதையும் கருத்து தெரிவித்து அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். மேல் கோட்டை திருநாராயணபுரம் செல்லப்பிள்ளை, யதுகிரி நாச்சியார் திருவிழாக்கோலம் தெவிட்டாத இன்பமாய் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது. ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.