Рет қаралды 3,289
ஈழத் தமிழ் வாழ்த்து
---------------------------------------------
வெளியீடு & இசையுரு & குரல்:
'இசை வாருதி' எம். எஸ். பிரதீபன்
இசை ஆசிரியர், ஹாட்லிக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.
வாழ்த்து ஆக்கம்:
கவிஞர், கலாநிதி செல்லத்துரை சுதர்சன்,
சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை
இசையமைப்பு:
'இசையருளி' திரு. க. சியாமளன்
மருத்துவபீட மாணவன்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஒழுங்கமைப்பு:
திரு. ர. விதுர்ஷன்
இறுதி வருட மாணவன்
பேராதனைப் பல்கலைக்கழகம்.
& இயக்குநர் - தடம் மீடியா
--------------------------------------------
ஈழத் தமிழ் வாழ்த்து
--------------------------------------------
ஈழ நிலந்தனில் இன்பத் தமிழ் மொழி
இனிதென வாழியவே
இங்குள்ள வானத்தின் வெளிமிசை எங்கணும்
தமிழிசை ஓங்குகவே
சூழ் இடர் போக்கியும் சுடர் ஒளி ஏற்றியும்
சுவை தந்து வாழியவே
சுந்தரமாம் எங்கள் சுவைத் தமிழ் ஆருயிர்ச்
சுடர் என்றும் வாழியவே - தமிழ்ச்
சுடர் என்றும் வாழியவே
ஐம்பெருங் காப்பியம் அணியெனப் பூண்ட எம்
அன்னைத் தமிழ் மொழியே
ஐயனும் ஒளவையும் அருங்கவி வாணரும்
அணிந்திடும் தவ மொழியே - தமிழ்
ஆய்ந்திடும் உயர் மொழியே
சங்கிலியும் சமர்வென்றிடு வேந்தரும்
சாற்றிய தமிழ்மொழியே
சாந்தமெனத்திகழ் யோகரும் தாயெனத் தாங்கிய தனிமொழியே - முனி
தழுவிய தமிழ்மொழியே
ஈசனின் அன்பரும் இன்பிறை நேசரும்
இன்புறும் தமிழ்மொழியே
ஈழ நிலம்மிசைச் சிங்கள மாந்தரும்
இயம்பிடும் இன்மொழியே - இசை வீந்திடும் எம்மொழியே
நாவலரும் பல பாவலரும் தொழு தேத்திய நனிமொழியே
காவலெனத் தினம் களம்புரி வீரரும்
காவிய தமிழ்மொழியே - எம்
காவியத் தனிமொழியே
மாம்பழத் தீவென மலிகடல் சூழ்ந்த எம்
மாமணி நாட்டினிலே
நாமெலாம் நன்குவோர் அன்னையின் பிள்ளையாம்
சாதனை புரிந்திடுவாய் - தாயே
சாதனை புரிந்திடுவாய்
தீயினிலே விழும் போதினிலும் தமிழ்
வாழ்க என்றே உரைப்போம்
திகழ் வாழ்வினிலே எங்கள் வாயில் எந்நேரமும்
வெல்க என்றே உரைப்போம் - தமிழ் வெல்க என்றே உரைப்போம்
இன்னுயிராம் எங்கள் இன்சுவையாம் தமிழ்
இங்கென்றும் வாழியவே
ஈழ நிலந்தனில் இன்பத் தமிழ்மொழி
இசைவுற வாழியவே - தமிழ்
இனிதுற வாழியவே