கண் போனே போக்கிலே கால் போகலாமா , கால் போனே போக்கிலே மனம் போகலாமா, மனம் போனே போக்கிலே மனிதன் போகலாமா , மனிதன் போனே பாதையை மறந்து போகலாமா , (கோரஸ் ஹம்மிங் ஆங்கில படங்களில் காண்பது , கேட்பது போலிருக்கும் ) ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கூறும் அறிவுரை , நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் , நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் , ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் , உணராமல் போவோருக்கு உதவாமல் போகும் , என்ற எம்ஜிஆரின் தத்துவம் மனிதனை நல் வழிபடுத்தும் , எப்படி , உன் கருணையில்லாத பார்வை கனவோடு போகும் , தரமில்லாத சொல் காற்றோடு போகும் , உண்மையான வாழ்க்கை உனக்காக வாழும் , இதை உணராமல் போனால் எதுவும் உதவாமல் போகும் , பொய்யான சில பெர்க்கு புது நாகரீகம் , புரியாத பல பெர்க்கு இது நாகரீகம் , முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் , முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் , தலைவரின் பொன் மொழிகளை கேளும் , பொய்யான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு புது நாகரீகம் , புரியாதவர்களுக்கு இது நாகரீகம் , முறையாக வாழ்பவர்களுக்கு முன்னோர்கள் சொல்லியதுதான் நாகரீகம் , திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம் , வருந்தத உருவங்கள் பிறந்து என்ன லாபம் , இருந்தாலும் மறைந்தாலும் பெர் சொல்லே வேண்டும் , இவர் போலே யார் என்று ஊர் சொல்லே வேண்டும் , கெட்டவன் நல்லவனாக வேண்டும் , தவறு செய்தவன் திருந்த வேண்டும் , அவன் இருந்தாலும் மறைந்தாலும் ஊர் மெச்சவேண்டும் , பணம் படைத்தவன் எப்படி வாழ வேண்டும் என்று மக்கள்திலகம் பாடும் காட்சியும் ,ஸ்டைலும், அற்புதம் , வாலியின் தங்க வரிகளுக்கு , மெல்லிசை வழங்கிய மன்னர்களின் இசை அபாரம் , பாடிய டி.எம்.சௌந்தராஜனின் மாயஜால குரலில் மயங்காதவர் , உடலில் உதிரமில்லாதவர், கேளுங்கள் , தவறு செய்பவர்கள் திருந்துங்கள் , மகிழங்கள் , பிடித்திருந்தால் ஒரு லைக் செய்திடுங்கள் , நன்றி .