Рет қаралды 647
பாடல்
பல்லவி
ஆண்:பூமியில் ஒரு நிலா
போகுதே ஓர் உலா
வானத்தில் திருவிழா
வையத்தில் கலக்கலா
பெண்:பூமியில் ஒரு நிலா
போகுதே ஓர் உலா
வானத்தில் திருவிழா
வையத்தில் கலக்கலா
ஆண்: தூறல் இது ஒரு தூறல்
பெண்:சாரல் இது மழை சாரல்
மன்மதன் அம்புகள்
மார்பினில் பாய்ந்ததோ
(பூமியில்......
சரணம் - 1
ஆண்:இரவு வந்தாலென்ன
பகலும் சென்றாலென்ன
இளமை பூத்தாடுதே
இனிமை கூத்தாடுதே
பெண்:ஆடல் முடியாமலே
கூடல் தொடர்ந்தாலென்ன
மாதம் எந்நாளுமே
மாறன் உன் ஞாபகம்
காமனே காயங்கள்
பூக்கள் என்னாவது
ஆண்:வானவில் என்னிடம்-உன்
வாசல் வந்தாடுதோ
(தூறல்.....
(பூமியில்....
சரணம் - 2
ஆண்:பயணம் சுகமானதே
பாதை இதமானதே
இனிய தருணங்களில்
இதயம் இடம் மாறுதே
பெண்:வீணை இல்லாமலே
விரல்கள் தடுமாறுதே
தாளம் சேராமலே
தளிரும் குளிர் காயிதே
ஆண்:கோயிலின் கோபுரம்
தேவரசமானதே
பெண்:மாதவன் உன் மடி
தேவி வசமானதே
(தூறல்......
(பூமியில்.....
Lyrics: Aadhavan
Music: Murugaiah
Singer: Prabhakar, Deepa
பாடல்:ஆதவன்
இசை:முருகையா
பாடியவர்கள்:பிரபாகர், தீபா Boomiyil Oru Nila Directed by Aadhavan
1) Neruppukozhi movie link
• NERUPPU KOZHI/Tamil fi...
2) Pesadha padam movie link
• Pesadha Padam | Tamil ...
3) Pesadha padam hindi movie link
• पेसाधा पादम Pesadha Pa...
4) Andaman Tamil movie link
• Andaman - | New Tamil ...