ஜோதிட சொந்தங்கள், மாணவர்கள் இந்த மண்ணை தரிசனம் செய்யலாம்
@palanimanimozhi233 Жыл бұрын
*உலகத்திலேயே ஜோதிடர் ஒருவர் மகா சமாதி அடைந்ததும் பக்தர்களால் அவருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்யும் பெருமை வேலூருக்கு உள்ளது! ஸ்ரீ அய்யலானந்த சித்தர் ஜீவசமாதி மடாலயம் வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் காந்தி ரோடு அருகில் உள்ளது! கர்ம வீரர் காமராஜர் உட்பட பல அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்! தாம் ஜீவசமாதி ஆக போவதை ஒரு வாரத்திற்கு முன்பே நான் அடுத்த வாரம் ஊருக்கு போக போகிறேன் என்று தம் பக்தர்களிடம் சொன்னவர்! தை மாதம் சதய நட்சத்திரம் அன்று மகா சமாதி அடைந்தார்! வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டஸ்வரர் ஆலயத்தில் சுமார் 400 ஆண்டுகளாக மூலவர் இல்லாமல் வழிபாடுகள் நடைபெறாமல் இருந்தது! 1981 ஆம் ஆண்டு முதல் கோட்டை ஸ்ரீ ஜலகண்டஸ்வரர் ஆலயத்தில் மூலவர் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடைபெற காரணமானவர் வேலூர் ஸ்ரீ அய்யலானந்த சித்தர்! ஸ்ரீ அய்யலானந்த சித்தர் ஜீவசமாதி மடாலயத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி குரு ஓரையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது! இங்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகளை ஸ்ரீ அய்யலு சித்தர் நிறைவேற்றுகிறார் என்பதை ஏராளமான பக்தர்கள் தம் அனுபவத்தில் உணர்ந்து உள்ளார்கள்! சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் நான்கு வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என ஸ்ரீ அய்யலு சித்தரிடம் கோரிக்கை வைத்து வழிபட்டனர்! வழிபட்ட நான்கு வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர்! இது போல் ஏராளமான பக்தர்களுக்கு திருமணம் யோகம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் கல்வி வேலை வாய்ப்பு என பல கோரிக்கைகள் நிறைவேறுகிறது "தமிழகத்தின் சீரடி" என ஸ்ரீ அய்யலானந்த சித்தர் ஜீவசமாதி மடாலயம் பக்தர்களால் அழைக்கபடுகிறது! வாருங்கள், உணருங்கள் விபரங்களுக்கு 9787471791*
@venkatapathys4926 Жыл бұрын
WhatsApp group ல் நான் சேரவிரும்புகிறேன். ஆவண செய்யுங்கள் ஐயா!
@venkatapathys4926 Жыл бұрын
வணக்கம் ஐயா, அரியூர் எஸ்.வெங்கடபதி புதுச்சேரியில் இருந்து உங்கள் முன்னால் மாணவன். சந்தேகம் தொடர்பான கேள்வி ஐயா! பாவக ஆய்வு செய்யும் போது பாவக ஆரம்பம் முதல் தொடங்கி பாவக முடிவு வரை ஒரு பாவகப் பலன் கூற பாவக ஆய்வு மேற்கொள்கிறோம். 1.தசா நாதனின் சொந்த பாவகங்கள் 2.தசா நாதன் நின்ற பாவகம் 3.நட்சத்திர நாதன் நின்ற பாவகம் 4.கோட்சார பலன்களையும் ஆய்வு செய்கிறோம் 5.இதே அடிப்படையில் புத்தி நாதனையும் ஆய்வு செய்கிறோம் *எனது சந்தேகம் ஒரு பாவகம் என்பது சுமார் 9 பாதங்களை உள்ளடக்கியது அல்லவா? (உ.ம்)துலாம் லக்கினம் அதற்கு 7-ம் பாவகம் மேஷம் 10.11 முதல் ரிஷபம் 9.37 வரை இதில் மேஷத்தில் அஸ்வனி 4 பரணி1,2,3,4 கார்த்திகை 1 ரிஷபத்தில் கார்த்திகை 2,3,4 இடம் பெற்றுள்ளது. 9 பாதங்களின் அதிபதிகள் சுமார் 3 கிரகங்கள் அதாவது கேது, சுக்கிரன், சூரியனின் பாதங்கள் இடம் பெற்ற இவர்களின் பலனையும் ஆய்வு மேற்கொண்டு இணைத்தால் தான் துல்லியமான பலனை காணமுடியும் என நினைக்கிறேன். இவர்களின் பலன் காணும் முறையை விளக்கவும் ஐயா! தாங்கள் எனது சந்தேகத்தினை தெளிவுபடுத்த வேண்டும் என இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். நன்றி ஐயா!
@venkatapathys4926 Жыл бұрын
ஐயா வணக்கம், புதுவை அரியூர் எஸ்.வெங்கடபதி உங்கள் மேல்நிலை ஜோதிட முன்னாள் மாணவர். ஐயா வணக்கம், எனது சந்தேகம் தொடர்பான கேள்வி. லக்ன பாவம் (உ.ம்) மிதுனம் 29.00 எனக் கொண்டால் லக்ன சுபர், பாவர் லக்னம் எந்த ராசியில் உள்ளதோ அதன் அடிப்படையில் எடுத்துக் கொள்கிறோம் இது சரியா? மிதுன லக்னம் 29.00 பாகை இதில் 1.00 பாகை மட்டுமே உள்ளது கடகத்தில் சுமார் 29.00 பாகை கொண்டுள்ளது இதனால் அதிக பாகையை கொண்ட கடக ராசியின் சுபர் பாவர் என்பதுதான் சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். லக்கன சுபர் தசா புத்தி காலங்களில் சாதக பாதக பலன் இங்கே பலன் மாறுபடும் என நினைக்கிறேன் விளக்கவும் ஐயா? எனது கேள்வி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் ஐயா. தென்னிந்திய ஜோதிட கல்வியில் பாவ ஆரம்பம் முதல் கணக்கிடப்படுகிறது. வட இந்திய ஜோதிட முறையில் பாவ மத்திமம் உள்ளது. இது தொடர்பான விளக்கம் அளிக்க தங்களை கேட்டுக் கொள்கிறேன் ஐயா!