சித்தர்களும் சுப்பிரமணியரும் | பாகம் - 3 | Part - 3 | Who is Subrahmanya? | Siddhar and Subramanyan

  Рет қаралды 335

Pallikaranai Sakthi

3 жыл бұрын

சித்தர்களும் சுப்ரமணியரும் | www.pallikaranaisakthi.org
To join our WhatApp Group click: chat.whatsapp.com/KumsdCnNxoZ995mhIHBh1N
பள்ளிக்கரணை சக்தி அன்பர்களுக்கு வணக்கம்.
கடந்த பகுதியில், சுப்பிரமணி என்ற சொல்லின் பொருளையும், முருகனுக்கு சுப்பிரமணியர் என்ற பெயர் வர காரணமான ஒரு அற்புதமான சித்தர் பாடலையும் பார்த்து மகிழ்ந்தோம். அந்த பகுதியின் இறுதியில், சுப்பிரமணியரை பற்றி தமிழ் ஞானியான அருட் பிரகாச வள்ளலார் என்ன கூறுகிறார் என்று அடுத்தப் பகுதியில் காணலாம் என்று முடித்து இருந்தோம். வாங்க 3வது பகுதிக்குள் செல்லலாம்.
எந்தவித முறையான கல்வியும் இல்லாத இராமலிங்கம் என்கிற 7வயது சிறுவன், தூய தமிழ் இலக்கணத்தோடு திருவருட்பா என்று போற்றப்படும் ஞானப் பாடல்களை இயற்றினார். திருவருட்பா பாடல்கள், 6 திருமுறைகளாக வெளியிடபட்டு, இன்றும், அவர் வழி செல்லும் பல ஞானியர்களுக்கு வழி காட்டிக்கொண்டு வருகிறது. இந்த திருமுறைகளைத் தவிர, வள்ளல் பெருமானார் தனது சீடர்களுக்கு உரையாற்றிய சொற்பொழிவுகளையும், தானே எழுதிய உரைநடைகளையும், தனியே ஒரு புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் “உபதேசங்கள்” என்கிற தலைப்பில், “சுப்பிரமணியம்” என்று ஒரு கட்டுரை உள்ளது, அதிலிருந்து இந்த பகுதியில் சில குறிப்புகளை காணலாம். இந்த கட்டுரை, ‘கேள்வி-பதில்’ நடையில் இருப்பது தனிச்சிறப்பு. வள்ளல் பெருமானின் பதில் ஆழமான அர்த்தங்கள் கொண்டவை என்பதால், இந்த கட்டுரையை ஆர்வம் உள்ளவர்கள் புத்தகத்தை வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மற்றவர்களுக்காக இங்கே சுறுக்கமாக கூறுகிறோம்.
சீடர்களின் முதல் கேள்வி: “சுப்பிரமணியம் என்றால் என்ன?
வள்ளல்பெருமானின் பதில்: நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணிபிரகாசம் பொருந்தி இருக்கின்றது. இந்த ஜோதிமணியை ஷண்முகம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
பராபரம் மற்றும் பராபரை என்ற வார்த்தைகளை பல முறை நாம் பயன் படுத்தியதால், அதன் பொருளை மேலும் திருமூல சித்தரின் திருமந்திரத்தின் ஒரு பாடலின் மூலம் விளக்கமாக அறிய முற்படலாம்.
இந்த பாடல், படைத்தல் என்ற தலைப்பின் கீழிலிருந்து எடுக்கப்பட்டது. இதில், திருமூலப் பெருமான், இந்த பிரபஞ்சம் மொத்தமும், ஊழி காலம் என்று சொல்லப்படும் அழிவு சமயத்தில் ஒரு அணுவில் ஒடுங்கி, உறக்க நிலையில் இருக்கும் என்றும், பிறகு, அந்த அணுவிலிருந்து பொறி தட்டி மறுபடியும் ஒரு புது பிரபஞ்சம் உருவாகும், என்றும், அது எவ்வறு நிகழ்கிறது என்றும் விளக்கமாக குறிப்பிடுகிறார். இந்த பகுதியில், 5000 ஆண்டுகாளுக்கு முன்பே, இன்று மேற்கத்திய அறிவாளிகள் Big Bang Theory என்று கூறும் பிரபஞ்சத்தின் தோற்றத்தை; ஆன்மீகத்தையும், அறிவியலையும் இணைத்து, உண்மை பொருளை துல்லியமாக விளக்குகிறார் திருமூலர் சித்தர். விருப்பம் உடையவர்கள், திருமந்திரம் புத்தகத்தை வாங்கி, இந்த பகுதியை படித்து, தங்களின் பகுத்தறிவை கொண்டு ஆறாய்ந்து தெளிவடையுங்கள்.
முருகனின் அறு படை வீடுகளில் ஒன்றான, திருப்பரங்குன்றத்தின் பெயர் வர காரணம் என்ன வென்று, இப்பொழுது நீங்களே, யூகித்துப்பாருங்கள்? இந்த பதிவை பார்த்தப் பிறகு உங்களுக்கு திருபரங்குன்றம் என்றால், திரு+பரம்+குன்றம் என்று புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம். அதாவது, பரம்பொருளாகிய சிவ-சக்தி மைந்தன் வீற்றிருக்கும் குன்றே, திருபரங்குன்றம்.
அதே போல், சேயோன் என்ற சொல், தமிழில், அக்னி பகவானுக்கும், செவ்வாய் பகவானுக்கும், முருகனுக்கும் உறிய சொல் ஆகும். சேயோன் என்றால், சிவந்த நிறம் உடையவன் என்று பொருள். அக்னியும், செவ்வாய் கிரகமும், முருகனும் சிவந்த மேனியுடையவர்கள் என்பதால், இவர்களுக்கு சேயோன் என்கிற பெயர். இன்று செவ்வாய் கிரகத்திற்கே செயர்க்கைக்கோள்களை அனுப்பி Mars is a Red planet என்ற முடிவிற்கு வந்து இருக்கிறார்கள், விஞாஞிகள், ஆனால் தமிழ் சித்தர்களோ, அதை ஞானத்தால் உணர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு, சேயோன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள். அவரை தன்னம்பிக்கை, வீரம் வேண்டுவோரை வணங்கும்படி அறிவுரித்தி இருக்கிறார்கள். இப்பொழுது, நீங்களே, மேற்கூறியவற்றை இணைத்து பாருங்கள். முருகன், சிவந்த தீச்சுடரிலிருந்து பிரந்தவன், எனவே அவனுக்கு சேயோன் என்கிற அக்னியின் பெயர். வாணியல் சாஸ்திரத்தின் படி, செவ்வாயிற்கு அதிபதி முருகன். இருவருமே வீரத்திற்கு உறியவர்கள் ஆவர்கள். எனவே முருகனுக்கு செவ்வாயின் பெயரான சேயோன் பொருந்தியுள்ளது.
இருதியாக, முருகன், சிவந்த மேனியன் என்பதால், முருகனுக்கு சேயோன் என்ற பெயர். ஒப்புக்கொள்கிறீர்களா? இங்கே பதிவிடுங்கள்.
இப்படி இறைமூலமான முருகனை, (1) சித்தர்கள், ஞானத்தை நல்கும் சுப்பிரமணியராகவும்; (2) மனிதர்கள் மற்றும் ஞானப்பயிற்சி மேற்கொள்ளும் சித்த-மாணவர்கள், ஆறு ஆதாரங்களை முறைப்படுத்தி ஆரோக்கியம் அளிக்கும், ஆறுமுகனாகவும்; (3) தன்னம்பிக்கை மற்றும் வீரத்தை அளிக்கும் சேயோனாகவும்; (4) அழகு, புகழ், செல்வம் மற்றும் பக்தர்காளின் குறல் கேட்டு, கேட்டதையெல்லாம் அருளும் முருகனாகவும் வணங்கி, மகிழ்ந்து, இறை சிந்தனையில் லயித்து வாழ்ந்து வந்த நம் தமிழ் மக்களை, முட்டாள்களாக்கும் கூட்டத்தின் உண்மை சுவரூபம் என்னவென்று புரிந்துக்கொள்ளுங்கள், சிந்தித்து செயல் படுங்கள்.
முருகனின் அர்புதங்களை நமக்கு மேலும் நிலைநிருத்தும் வண்ணம், பல முருகபக்தர்கள் சமீப காலங்களில் வாழ்ந்து அவர்களின் வாழ்க்கையையே முருகனின் மகிமைகளுக்கு ஆதாரமாக அமைத்து தந்து சென்று இருக்கிறார்கள். அவர்களில், சிலரின் வரலாற்றை அடுத்த பகுதியில் காணலாம்.
#LordMurugan #KandhaSastiKavasam #siddhar #Murugan #MuppatanMurugan #MaridhasAnswers #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #Shivan #Saivam #KalaiyarsiNatarajan #TamilSaivaPeravai #KaruparKootam #SaveMuruganFromBrahmanism

Пікірлер: 5
@archanaanallamuthu6639
@archanaanallamuthu6639 3 жыл бұрын
Nice video, very informative 🙏
@summairubala
@summairubala 3 жыл бұрын
முருக பெருமான் பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர் பதிவு.. நன்றி..
@shrisivagurushrisivaguru1771
@shrisivagurushrisivaguru1771 3 жыл бұрын
🙏🙏🙏👍👌
@geethagee8620
@geethagee8620 3 жыл бұрын
Superb!! Very informative!! Narrated very well... I heard fully... Voice over is good.
@vaishnavir1307
@vaishnavir1307 3 жыл бұрын
Very nice and rare content which is narrated in a crisp and clear manner. Looking forward for more such videos..🙏🙏
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 752 М.
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 752 М.