பாஜவில் திடீரென ஓங்கும் ஆதிதிராவிடர்கள் கை; பின்னணி என்ன | BJP | BJP new president | BJP election

  Рет қаралды 67,533

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership பாஜவில் திடீரென ஓங்கும் ஆதிதிராவிடர்கள் கை; பின்னணி என்ன | BJP | BJP new president | BJP election
பா.ஜ., மாநில தலைவர் பதவிகளில் 20 சதவீதம் பட்டியலினத்தவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி மேலிடம் துவக்கி உள்ளது.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பா.ஜ., உட்கட்சி தேர்தல் நவம்பர் 11ல் துவங்கியது.
கிளை கமிட்டி, மண்டலம், மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிந்த நிலையில், இன்னும் சில நாட்களில் மாநில தலைவர் தேர்தல் நடக்க உள்ளது.
பா.ஜ., கட்சி விதிகளின்படி, நிர்வாகிகள் நியமனத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆனால் பல இடங்களில் தகுதியான நபர்கள் இல்லை எனக்கூறி இந்த இடஒதுக்கீட்டை பின்பற்றாத நிலை இருந்து வருகிறது.
மாநில தலைவர்களை தேர்வு செய்ய, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு குழுவை பா.ஜ., மேலிடம் அமைத்துள்ளது.
மாநில தலைவரை சுமுகமாக தேர்வு செய்ய, மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் கருத்துகளை அக்குழு நேரில் கேட்டறிந்து வருகிறது.
தேசிய, மாநில நிர்வாகிகளில், பட்டியலினத்தவர்கள் நிர்வாகிகளாக இருந்தாலும், முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட மாவட்ட, மாநில தலைவர்களில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நடந்து முடிந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையானது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதை பெரும் பிரச்னையாக்கின. கடந்த 2000ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பட்டியலினத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன், பா.ஜ., தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதை பின்பற்றி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை, பா.ஜ., தேசிய தலைவராக நியமிப்பது குறித்து, பிரதமர் மோடி, அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
ஆனால், தேசிய தலைவராக தேர்வு செய்யும் அளவுக்கு, செல்வாக்கான பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.,வில் இல்லை என்று கூறப்படுகிறது.
அதனால் 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்கள் என 36 மாநில தலைவர்களில், 20 சதவீதம் அதாவது 7 அல்லது 8 மாநிலங்களுக்கு பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை மாநில தலைவர்களாக நியமிக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மாநில தலைவர் பதவிக்கு பொருத்தமான பட்டியலின நிர்வாகிகளை அடையாளம் காணுமாறு, மாநில தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினருக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி மாநில தலைவராக, பட்டியலினத்தைச் சேர்ந்தவரை நியமிக்கும் திட்டம் இருப்பதாகவும், இதற்காக அமைச்சர் சாய் சரவணகுமார் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி பாஜவினர் கூறுகையில், இந்திய அரசியல் சூழல் மாறி வருகிறது. பா.ஜ.,வின் ஓட்டு வங்கியாக உள்ள சமூகங்களின் மக்கள்தொகை குறைந்து வருகிறது.
பட்டியலின, பழங்குடியினரின் ஆதரவின்றி, இனி தேர்தல்களில் வெல்ல முடியாத நிலை வந்து கொண்டிருக்கிறது. அயோத்தி லோக்சபா தொகுதியில் பட்டியலினத்தவரை வேட்பாளராக நிறுத்தி, பா.ஜ.,வை சமாஜ்வாதி கட்சி தோற்கடித்தது.
இதை உணர்ந்து தான், கட்சியில் பட்டியல் இனத்தவர்களை முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் நியமிக்க, பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். எனவே, இந்த முறை மாநில தலைவர்களாக பட்டியலினத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றார்.#BJP #BJPnewpresident #BJPelection

Пікірлер: 118
@palanichamysamy3612
@palanichamysamy3612 22 күн бұрын
யாருக்கும் முன்னுரிமை கூடாது.அனைத்து தரப்பினரும் சமஅளவில் இடம்பெற வேண்டும்
@Rajkumaragri2000
@Rajkumaragri2000 23 күн бұрын
தமிழ்நாட்டில் பிஜேபி தலைவராக அண்ணாமலை மட்டும்தான் வேண்டும் மற்ற தலைவர்கள் இருந்தால் பிஜேபி தமிழ்நாட்டில் வளராது
@sabujijohn9129
@sabujijohn9129 23 күн бұрын
சீமானுக்கு அதிக வாய்ப்பு அதிகம் ....
@ramprasath7268
@ramprasath7268 22 күн бұрын
​@@sabujijohn9129 வந்தால் தமிழர்களுக்கு நல்லது தானே ❤❤❤
@mystics0033
@mystics0033 22 күн бұрын
Annamalaiji will never be changed he will remain as tamil nadu bjp chief .
@kvrr6283
@kvrr6283 22 күн бұрын
அதானி நம்ம சுடலையாருக்கு ஆதரவு​@@sabujijohn9129
@TravellerSK
@TravellerSK 21 күн бұрын
​@@sabujijohn9129😜🤣😝😂😆😁😄🫣😉
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 23 күн бұрын
வாழ்க பாரதம் வாழ்க பிஜெபி வாழ்க தாமரை
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 23 күн бұрын
ஜெய் பீம்
@ramprasath7268
@ramprasath7268 22 күн бұрын
​@@Kumarshanmugam. அதை திமுக விடம் சொல்லி ஒரு பொது தொகுதி வாங்கலாமே
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 22 күн бұрын
@@bhonuslifestyle2432 ஜெய் பீம்
@Sivaraj369
@Sivaraj369 22 күн бұрын
வரவேற்கிறோம்... அனைவருக்கும் சம வாய்ப்புக்கொடுங்கள்...அம்பேத்கார் கோபம் நியாயமானது..... 👌👌👌🙏👍
@Lov-m3f
@Lov-m3f 22 күн бұрын
இதுதான் சமூக நீதி
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 22 күн бұрын
முருகனுக்கு பேசவே தெரியாது. எங்களது தலைவர் எப்போதும் அண்ணாமலை தான்.இல்லையேல் எங்களது ஓட்டு நோட்டாவுக்குதான்.
@rajkumar-ko7mq
@rajkumar-ko7mq 22 күн бұрын
அடுத்த மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி 👍
@jayaramanswaminathan9143
@jayaramanswaminathan9143 18 күн бұрын
அருமையான முடிவு. தமிழ் நாட்டில் பாஜக 30 ஆண்டுகளாக வளராது இருந்த காரணமே கட்சியில் பிரதானமாக இருந்தவர்களே மேல் வகுப்பை சேர்ந்தவர்கள் தான். ஓரளவு தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை இருந்தாலும் சாதாரண மனிதர்களை சென்றடையவில்லை என்பதே உண்மை.
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 15 күн бұрын
சென்னையிலும், மைக்கிலும், பேட்டி கொடுத்தும் கட்சி எப்படி வளரும்? மக்களோடு மக்களாக இருந்தால்தான் கட்சி வளரும்
@shunmugasundaramsundaram43
@shunmugasundaramsundaram43 22 күн бұрын
ஆதி திராவிடர்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதுமா எல்லா சமூகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தானே ஓட்டுப் போடுவார்கள்
@shunmugasundaramsundaram43
@shunmugasundaramsundaram43 22 күн бұрын
ஆதி திராவிடர்கள் தற்போது ஓட்டுப் போடுவது இல்லை
@sankarindian2004
@sankarindian2004 22 күн бұрын
அவர்கள் பிஜேபிக்கு vote போடுவதில்லை
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 22 күн бұрын
மோடி ஜீ அவர்கள் ஆளுமைக்கு வாழ்த்துக்கள்
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 22 күн бұрын
என்ன ஆளுமை.... ஒன்றும் இல்லை, மடையா..
@ஆதிக்குடி-ண5ட
@ஆதிக்குடி-ண5ட 22 күн бұрын
ஐயா நாங்கள் ஆதி தமிழர்கள் திராவிடர்கள் அல்ல
@karthid3752
@karthid3752 22 күн бұрын
Apadeeyelam certificate kudukka mattanga
@Jeevasugan3
@Jeevasugan3 22 күн бұрын
எந்த வெண்ணெய்யும் எங்களுக்கு தமிழன் சர்டிபிகேட் கொடுக்க வேண்டியது இல்லை என்று சொல்லலாம்.. ஏனென்றால் நாங்கள் ஆதி தெலுங்கர்கள்..
@ஆதிக்குடி-ண5ட
@ஆதிக்குடி-ண5ட 18 күн бұрын
@@karthid3752 இதனாலதான் ஆட்சிமாற்றம் வரணும் வந்தாதான் தமிழர்கள் உரிமை பாதுகாக்க படும்
@RajenthiranS-kq1dp
@RajenthiranS-kq1dp 16 күн бұрын
அண்ணன் அண்ணாமலை சிங்கம் 🔥🔥🔥
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 22 күн бұрын
🙏திரு அண்ணாமலை மட்டுமேதலைவராக இருக்க வேண்டும் மாற்றினால் அனைவரும் வாக்களிக்கமாட்டோம்❤️🔥💥🚩👍🤝💐
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 22 күн бұрын
மோடியின் ராஜதந்திரம் ❤❤❤
@krishnarajulug5725
@krishnarajulug5725 22 күн бұрын
அனைத்து மாநில இடுகாடு சுடுகாடுகளை.இல்லாமல் செய்து ஒரு ஒன்றியத்திற்கு ஓர்.மின்சார சுடுகாடு அமைத்து ஒர் செயலில் மூன்று நன்மைகள் சுற்று சூழல்,நிலம் மீட்பு எல்லா மத,இன,மொழி ஓர் இடத்தில் அமையம் இதை மோடி ஒருவர் செய்ய முடியும்
@DuraiPalam
@DuraiPalam 22 күн бұрын
ஜெய் மோடிக்கு சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்
@MariAppanமாரீயப்பன்
@MariAppanமாரீயப்பன் 19 күн бұрын
வாழ்க ❤அண்ணாமலை❤வாழ்க❤தாமரை ❤
@Paranthaman-tu4xu
@Paranthaman-tu4xu 22 күн бұрын
மூன்று வருடத்திற்க்கு முன்பு ஆதி திராவிடத்திற்க்கு தமிழக பாஜக தலைவர் பதவி கொடுத்தது பத்தாதா..
@outofoffice4032
@outofoffice4032 22 күн бұрын
பார்பான்களை ஓரம்கட்ட வேண்டும் ❤
@KrishnamoorthyKattalai
@KrishnamoorthyKattalai 22 күн бұрын
சாதி அடிப்படையில் தலைவர்கள் நியமனம் திறமையான நபர்களை சோ ர்படைய செய் யும்...
@iyerfolsom7806
@iyerfolsom7806 22 күн бұрын
வாழ்த்துக்கள் வரவேகிறேன்
@uddaivamsith
@uddaivamsith 19 күн бұрын
Ananthan ayyasami thenkasi super selection
@ramjassi1244
@ramjassi1244 22 күн бұрын
Only bjp 🙏🙏💪💪💪
@vickyparthiban3823
@vickyparthiban3823 6 күн бұрын
Annamalai IPS
@jagandhanush1380
@jagandhanush1380 22 күн бұрын
Sai j saravanankumar 🎉❤❤
@kumarn8849
@kumarn8849 22 күн бұрын
அண்ணா மலை சிங்கம் நாடார் வாக்கு கணிசமாக தாமரைக்கு உண்டு
@RajenthiranS-kq1dp
@RajenthiranS-kq1dp 16 күн бұрын
🚩🚩🚩
@smselvam775
@smselvam775 22 күн бұрын
Sai j Saravana Kumar 💪💪💪
@manikandanj5234
@manikandanj5234 21 күн бұрын
#Annamalai❤
@pandiduraij3157
@pandiduraij3157 22 күн бұрын
Good Decision
@palaniappanpalani9236
@palaniappanpalani9236 22 күн бұрын
Suppar ❤❤❤
@rengasankari5418
@rengasankari5418 22 күн бұрын
SINGAM Must be continued as BJP President in TAMILNADU Jai shree krishna jai shree Ram Bharat madhaki ki jai 🎉🎉🎉
@JanakiramanP-hl1ti
@JanakiramanP-hl1ti 22 күн бұрын
தமிழகத்தில் ஆதிதமிழர் நியமனம் செய்ய வேண்டும் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் ஆதி தமிழர்கள் நியமனம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் சாதிய அரசியல் இனி வாய்ப்பு இல்லை
@AnandhaKumar-in2tb
@AnandhaKumar-in2tb 21 күн бұрын
Annamalai jii Tamil Nadu thalavara erthal mattum than Tamil Nadu la bjp vallarim🎉🎉🎉
@varugunanmarimuthuammal4069
@varugunanmarimuthuammal4069 22 күн бұрын
Annamalai ips only ever leader
@mnseetharaman
@mnseetharaman 22 күн бұрын
ஆதி தமிழர்கள் என உண்மை படுத்தவும்
@gururakeshgururakesh8336
@gururakeshgururakesh8336 22 күн бұрын
❤❤❤❤ bjp 4nation india
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 22 күн бұрын
முதலில் அண்ணாமலையை மாற்றுங்கள், H, ராஜாவை நியமியுங்கள்...
@kumarn8849
@kumarn8849 22 күн бұрын
ஏண்டா பீமூக சுடலையை மாற்றி ஆ ராசாவ போடு
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 22 күн бұрын
சாதி ஒழிக்கப்படும் வரை பித்தளாட்ட அரசியல் தொடரும்.....ஆண் பெண் பெயர்கள் மட்டும் சாதிஇணைப்பில்லாமல் என்று பதிவு செய்து அரசு சட்டம் இயற்றுகிறதோ அன்றே சாதி ஒழியும்....இதை ஆளும் அரசுகள் செய்யுமா....???????
@rajasekaran9734
@rajasekaran9734 22 күн бұрын
ஆதிதிராவிடர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டாம்
@subhasethuraman2869
@subhasethuraman2869 22 күн бұрын
See only the talent and skill.no quota
@tamilselvan729
@tamilselvan729 22 күн бұрын
There are lots of telungans are Aathy thiravidian so BJP should be care full about this.
@deventhiranl541
@deventhiranl541 22 күн бұрын
Hi
@smselvam775
@smselvam775 22 күн бұрын
Sai j
@babuthava556
@babuthava556 22 күн бұрын
Bjp washout
@amsnaathan1496
@amsnaathan1496 22 күн бұрын
ஆதி தமிழர்கள்னு சொல்லுங்கய்யா அது என்ன திராவிடர்கள்,,எல்லோருக்கும் சமவாய்ப்பு என்பதே சமூக நீதி
@WildEagle-p1u
@WildEagle-p1u 22 күн бұрын
Yow neenga enna panninaalum tamilnattai aala mudiyathu😅😂
@venkatesanusha5107
@venkatesanusha5107 22 күн бұрын
Over
@singsongc4016
@singsongc4016 22 күн бұрын
Malayalikal peruku pinnal jathi poduranga kannadargal poduranga telugus poduranga tamilan jathi podakudhathu ithu thaan aniyaayam😂
@denidd6859
@denidd6859 22 күн бұрын
Aadi dravidargal endru sollatheergal, aadhi thamizhargalnu sollunga illaina pattiyilina makkalnu sollunga
@sambathp5919
@sambathp5919 19 күн бұрын
Sir Anybody can elect but local field work must need in each party in every union Union Secretary is main base of any party Every body realise their real strength of course we have 48 00 000 lacs memership then we should get in election minimum 96 00 000 lacs votes is it happen?
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 22 күн бұрын
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இனத்தோருக்கு அதிக அளவில் முன்னுரிமை தரவேண்டும் 🎉🎉🎉🎉
@D.ChinthaMony-tq7hz
@D.ChinthaMony-tq7hz 22 күн бұрын
ஊழலை ஒழிப்பது மற்றும் அனைவருக்கும் இலவசம் தவிற்க முயற்சிப்பதே நாட்டின் வளர்சி. அதற்கு கோடாவது போட ஆரம்பியுங்கள்.
@ebinraj5164
@ebinraj5164 22 күн бұрын
Oozhal pantrathey bjp than apram epdi avanga oozhalai destroy pannuvanga
@kiranpraba3796
@kiranpraba3796 22 күн бұрын
Pondy sai J 🔥🔥
@SambandhamA-qv6mw
@SambandhamA-qv6mw 15 күн бұрын
ஆதிதிராவிடர்களுக்குபிஜேபிசப்போட்பண்ணகூடாதுபசிஆர்சட்டத்தைரத்துசெய்யவேண்டும்சாதிஅடிப்படையில்எம்பிஎம்எல்ஏஇருக்ககூடாதுஎல்லாம்பொதுதொகுதியாக்கவேண்டும்ஓட்டுவாங்கும்நபர்வெற்றிபெரட்டும்
@ggara1377
@ggara1377 22 күн бұрын
Time for induct airport murthy in to party
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 23 күн бұрын
Athi dravidar kalai, Olithu Kattum DMK?
@rajavelurajavelu7334
@rajavelurajavelu7334 22 күн бұрын
BJP Tamil Nadu La Eppavum 00000000000000 than😂😂😂😂😂😂😂😂
@sabujijohn9129
@sabujijohn9129 22 күн бұрын
தமிழ்நாட்டில் சீமானுக்கு வாய்ப்பு கொடுக்கலமே....
@Lov-m3f
@Lov-m3f 22 күн бұрын
சீமான் சரக்கு அறிவு இல்லபா
@96radman
@96radman 22 күн бұрын
Mattahavan jathi ellam ilicha vayana.... I hate this
@swaminathanmahadevan6830
@swaminathanmahadevan6830 22 күн бұрын
Vottum pattial enathuvarkalkke kodungal.engalukku vendam
@smurugan89
@smurugan89 22 күн бұрын
Malai
@sabujijohn9129
@sabujijohn9129 23 күн бұрын
உருடு....உருடு... நல்ல உருடு....
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 22 күн бұрын
ஆதாரம் தரவும். உருட்டு யார் என்று திருட்டு திராவிட மாடலிடம் போய் கேளு தெரியும் 😡😡😡
@pon_r_chandran
@pon_r_chandran 22 күн бұрын
#ஆதி_திராவிடர்கள் என்ற சொல்லை மாற்றி #ஆதி_தமிழர்கள் என்று அழைக்க கற்று கொள்ளுங்கள்...🙏 ஆதி தமிழனை தான் நாம் கண்டோமே தவிர திராவிடனை அல்ல..!
@kumarn8849
@kumarn8849 22 күн бұрын
படித்த மெஜாரிட்டி நாடார் வாக்கு தாமரைக்கு தான் அதிகம்
@AnbazhaganRengasamy-p1z
@AnbazhaganRengasamy-p1z 21 күн бұрын
பள்ளர் தலைவராவர்
@mani7703
@mani7703 22 күн бұрын
Stop repeating nasty lies about what Amit Shah said.
@karticiyer7252
@karticiyer7252 22 күн бұрын
It means Annamalai is supporting Dravidians and not tamilians
@RamanManikandan-e9m
@RamanManikandan-e9m 22 күн бұрын
தமிழ் நாடு அது பழி காது பின்ன ஒரு காலம் வரது பார்த்து கோ
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН