நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த நேர்காணலை கண்ட மன நிறைவு. எனது தம்பியின் கல்யாணத்திற்கு அம்பத்தூரில் நடந்த போது அப்பா என் அழைப்பிற்கு இணங்கி வந்திருந்தார். அவர் என்னை ஆசிர்வதித்து வழங்கிய Autograph இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. சப்தரிஷி அவர்களின் அப்பாவுடனான நினைவுகள் ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அவர் ஒரு சித்தர் என்று ஜெயகாந்தன் குறிப்பிட்டது அவருக்கு மிகப் பொருத்தமானதே. சப்தரிஷியின் புத்தகத்தை இந்த முறை புத்தகக் கண்காட்சியில் வாங்க காத்திருக்கிறேன்.
@malai3434 күн бұрын
"அவரை எவ்வளவு பெரிய எழுத்தாளரா நீங்க நினைக்கிறீங்களோ - அதை விடப் பெரிய அப்பா அவர் " என்ன ஓர் உயர்ந்த சான்றிதழ்! அதுவும் பெற்ற மகனிடமிருந்து! "அப்பனுக்குப் பயந்து கெட்டது பண்ணாம இருந்தயின்னா - அப்பன் இல்லாத நேரத்தில் கெட்டது பண்ணுவே - அதுவே கெட்டதுக்குப் பயந்து கெட்டது பண்ணாம இருந்தயின்னா எப்பவுமே கெட்டதே பண்ண மாட்டே " எப்பேர்ப்பட்ட தெளிவான அறிவுரை! "சேதி வர்றதுக்காகவா நா ஒக்காந்துண்டிருந்தேன்! நீ வர்றதுக்காகத்தானேடா உக்காந்துண்டிருக்கேன் " ப்பா! "நீ என்னை நல்ல அப்பான்னு புரிஞ்சுக்க இருவத்தஞ்சு வருஷம் ஆச்சு " என்று சிரித்து விட்டு - உடனே கண்ணீர் துளிர்க்க - "இப்படி நீ இருவத்தஞ்சு வருஷம் தாமதமா மன்னிப்பு கேட்கும் போது அதைக் கேட்கற பாக்யம் அமைஞ்சது பார் " என்று அந்தப் "புரிதல்" மகாத்மியத்தை அவர் விளக்குவது பேரழகு. "சித்தப்பா மரணம் அறிந்த சித்தரப்பா உன் தந்தை" என்று ஜெயகாந்தன் சொன்னதை நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும் - இப்போது கேட்கும் போதும் புல்லரித்தது. T.N.இராதாகிருஷ்ணன்