ஐயா! வணக்கம்!.எனக்கு சிறு வயது முதலே இந்த எண் கணித ஆர்வம் எனது தாத்தாவின் மூலம் வந்தது.பண்டிட் சேதுராமன் .."எண் கணித வித்வான்" எனது தாத்தாவின் நெருங்கிய நண்பர். அன்னார் எழுதிய எண்கணித நூலினை நன்கு படித்து அறிந்து அதன் மூலம்..எண்களைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டேன். தற்போது எனக்கு 61 வயது. என்னால், மற்றவர்களின் குணம், நடவடிக்கைகள்..இன்ன பிற இவைகளை வைத்து. அவர்களின் எண்களை ஊகிக்க முடிகிறது..அதை அவர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். மேலும் பிறந்த தேதி, நட்சத்திரம், கிழமை இவைகளை வைத்து பிறந்த குழந்தைகளுக்கு பெயர்களை அவற்றிற் கேற்ப தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளேன்.இதுவரை அக்குழந்தைகள் நல்ல நிலைமையில் நல்ல வளர்ச்சியுடன் வாழ்க்கையில் மிளிர்கின்றனர். பெற்றோர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. எனக்கு மேலும் எண்கணிதம் பற்றிய அறிவுத் தெளிவு வேண்டும் என பல ஆண்டுகளாக எண்ணிக் கொண்டிருந்தேன். மேற்கண்ட தங்களின் பதிவு எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி!! மிக்க நன்றி ஐயா!!. இந்தப் பதிவு ஒவ்வொரு நாளும் Y TUBE ல் வெளி வருமா!..அறிய விளைகின்றேன்..❤❤❤