Рет қаралды 122,338
This Song is Dedicated to My Beloved Mother And Every Mothers In This Universe 💕
Singer : Hafil Iqbal
Lyricist : A. Asbar
recording : kefro Production
Mixing & Mastering : Hammadh Zarook
Vocal Arrangements : Hamidh Zarook
Video Editing : A. Asbar
Subscribe & Like ♥️ & Comment & Share
Song Lyrics:-
பிள்ளை முகம் சிரிக்கத்தான்
உறக்கம் இல்லை உனக்குத்தான்
உலகே அது இயங்கத்தான்
தாய்மை ஒரு அருளும் தானே..
உயிரின் ஓரம் நீ தாங்கும்
கருவின் பாரம் நீங்கும்...
என் தாயே நெஞ்சோடு
நீ சிந்தும் அன்போடு
காலங்கள் உன்னோடு
வாழ்வெனக்குப் போதும்
நீதானே என் உயிர் தானே
உதிரங்கள் பாலாக்கி ஊணுறக்கம் இழந்தாயே....
------------------------------------------------
இன்னும் இன்னும் அன்பை என்றும் வாரி தந்து வியக்கும் ஓருயிரே
பிள்ளை முகம் பார்த்த நொடியில் யாவும் மறக்கும் உறவே
வேர்வை சிந்தி வேலை செய்யும் கூலி இன்றி தியாகம் திகைக்குமே
உன் முகத்த பார்க்கும்போது அழனும் போல இருக்கும்
பெண்: என் பிள்ளை வாழ்வெங்கும் ஆனந்தம் பொங்கிட என்னுயிரும் தந்திடுவேன்
காயங்கள் நீ கண்டால் தாங்காதே என்னுள்ளம் துடித்துப் போய் விடுவேன்
இந்த தாய் போலே சொந்தம் கிடையாதே
சிந்தும் பேரன்பும் என்றும் குறையாதே
நீயும் என் மனதில் என் மனதில் தேவதை போலாக
என் வாழ்வை என்றென்றும் வாழ்வேனே உனக்காக..
என் தாயே நெஞ்சோடு
நீ சிந்தும் அன்போடு
காலங்கள் உன்னோடு
வாழ்வெனக்குப் போதும்
நீதானே என் உயிர் தானே
உதிரங்கள் பாலாக்கி ஊணுறக்கம் இழந்தாயே....
---------------------------------------------------
அந்த ஆகாயம் தான் தாண்டும் உந்தன் அன்பு
என் ஆசைகள் தீர்த்தாளே தன்னுயிர் தந்து
விதியின் பாதைகள் விரையும் நேரங்கள்
பிரியா சொந்தம் நீ பிரிந்திடும் நேரம்
என் ஆயுள் தந்தேனும் வாழ்ந்திட துடிக்கும்
என் தாயே நெஞ்சோடு
நீ சிந்தும் அன்போடு
காலங்கள் உன்னோடு
வாழ்வெனக்குப் போதும்
நீதானே என் உயிர் தானே
உதிரங்கள் பாலாக்கி ஊணுறக்கம் இழந்தாயே....🎶🎼♥️
வரிகள் : A. Asbar