Ganesh Pooja at Home | வீட்டில் விநாயகர் வழிபாடு | குலதெய்வம் அறியாதவர்களுக்கு விநாயகர் வழிபாடு

  Рет қаралды 502

Pallikaranai Sakthi

3 жыл бұрын

108 விநாயகர் போற்றிகளை பதிவிறக்கம் செய்ய click: www.pallikaranaisakthi.org/downloads
குலதெய்வம் பற்றிய எங்கள் காணொளிக்கு click:
kzbin.info/www/bejne/Z2bKpKGCZb2drtk
மண் தத்துவத்தின் வழிபாடு: விநாயகர் சதுர்த்தி காணொளிக்கு:
தமிழ் பதிவு: kzbin.info/www/bejne/bJexhpKmiJl2ns0
English Post: kzbin.info/www/bejne/jqSogH5tg7eJiMk
பள்ளிக்கரணை சக்தி அன்பர்களை மற்றொரு ஆன்மீக பதிவின்மூலம் சந்திப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த பதிவில் நாம் விநாயகப்பெருமானை வீட்டிலேயே எளிமையாக வணங்கும் வழிபாட்டு முறையை பற்றியும், குலதெய்வம் எங்கிருக்கிறது அல்லது யார் என்று அறியாதவர்கள் எவ்வாறு விநாயகரையே குலதெய்வமாக வழிபடலாம் என்றும் காணலாம். இந்த பதிவின் இறுதியில் நமது பள்ளிக்கரணை அடிகளார் அவர்களால் நமக்கு அருளிக்கொடுக்கபட்ட 108 விநாயகர் போற்றிகளை பதிவிறக்கம் செய்யும் link ஐ கொடுத்துள்ளோம். மேலும் விநாயக-வழிபாட்டின் மூலம் கிடைக்கவிருக்கும் நற்பலன்களை பற்றியும், அவரது சில அற்புத குணங்களை பற்றியும் இந்த காணொளியில் சிந்திக்கலாம். வாங்க பதிவிற்குள் போகலாம்...
விநாயகரை வீட்டில் வழிபடும் முறை
இவரை நமது இல்லங்களில் தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் வணங்கலாம்.
வழிபடும் காலங்களில், பூஜை அறையில், விநாயகர் சிலை அல்லது படம் அருகில் ஒரு தீபம் ஏற்றிவைத்து. விநாயகருக்கு மஞ்சள்-குங்குமம் பொட்டிட்டு, நறுமண உதிரிபூக்கள் சாற்றி, வெற்றிலை பாக்குடன், கற்கண்டு, சர்க்கரை அல்லது வெல்லம், இவைகளில் ஏதேனும் ஒரு இனிப்பை நெய்வேத்தியமாக வைத்து கீழ்வரும் விநாயகர் போற்றிகளை மனம் ஒன்றி கூறி வழிபடலாம்.
குறிப்பாக திங்கட்கிழமைகளிலும், சதுர்த்தி திதிகளிலும், கிரகபலன்களுக்காக செவ்வாய் கிழமை இராகு காலங்களிலும் வழிபடும் பொழுது, மேற்கூறிய நெய்வேத்திய பொருட்களுடன் விநாயகருக்கு பிடித்தமான அவல்-பொரி, மோதகம், பழங்கள், என வைத்து கீழ்வரும் விநாயகர் போற்றிகளை மனம் ஒன்றி கூறி வழிபடலாம். இறுதியாக, தூப-தீபம் காண்பித்து வழிபாட்டை நமது வேண்டுதல்களைக்கூறி முடித்து விடவும்.
மேலே, குல தெய்வம் எங்கு உள்ளது அல்லது யார் என்று அறியாதவர்கள், மாதம் தோறும் வரும் பரணி நட்சத்திரத்தன்று ஏழு விளக்குகளை விநாயகர் பெருமானுக்கு ஏற்றி, குல தெய்வத்திற்கு சமர்ப்பணம் ஆக வேண்டும் என்று விநாயகரை வணங்கி முடிக்க வேண்டும். எந்த விநாயகரை வணங்க தொடங்குகிறோமோ. அதே விநாயகரையே கடைசிவரை வணங்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும், தமக்கு விருப்பபட்ட பரணி நட்சத்திரத்தன்று விநாயகருக்கு குல தெய்வ வழிபாடு போல சைவ படையலிட்டு வணங்க வேண்டும். குடும்பத்தில் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் அவர் முன்னாலேயே செய்யலாம். குலதெய்வ வழிபாடு என்கிற தலைப்பில் நாங்கள் ஒரு தனி காணொளியை பதிவிட்டுள்ளொம், description பகுதியில் உள்ள Link-ஐ பயன்படுத்தி அதையும் காணலாம்.
விநாயகரை தினம் நமது இல்லத்திலும், மனதிலும் இவ்வாறாக எழுந்தருளச் செய்தால், முன்வினைகள் தீர்ந்து, சகல செல்வங்களுடன் சேர்ந்த ஒரு நிறைவான வாழ்வை வாழலாம். மேலும் இந்த வழிபாடு நமக்கு அடுத்து வரும் சந்ததிகளையும் காக்கும்.

Пікірлер: 2
@kalasrinivasan640
@kalasrinivasan640 3 жыл бұрын
அருமையான விநாயகர் பூஜை விளக்கம்
@pallikaranaisakthi680
@pallikaranaisakthi680 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,1 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН