gomathiyin kathalan -2 by Devan

  Рет қаралды 614

KathaiCharam

KathaiCharam

Күн бұрын

Пікірлер: 9
@jayaramansekar7584
@jayaramansekar7584 Ай бұрын
அத்தியாயம் 3 காதல் - அன்பு, ஆசை, ஆவல், வேட்கை - தமிழ் அகராதி. தஞ்சாவூரில் ஒரு கிழவர் இருக்கிறார். அவரை நமஸ்காரம் செய்யும் இளைஞர்களையெல்லாம் அவர், “அப்பா! நீ சின்னவேலி ஜமீன்தார் மாதிரி இருக்கணும்!” என்று ஆசீர்வாதம் செய்து வருகிறார். சின்னவேலி ஜமீன் அதன் பெயருக்கு நேர் எதிராகப் பெரிய ஜமீன்தான். அதன் ஜமீன்தாரான சுப்ரமணிய அய்யர் ஹோதாவிலும் தடபுடலிலும் ஜபர்தஸ்திலும் இருந்த அமர்க்களம்தான் மேற்படி கிழவரை மேலே கூறியபடி எல்லாரையும் ஆசீர்வாதம் செய்யத் தூண்டி இருக்க வேண்டும். பனங்குடி கோபால தீட்சிதர்தான் முப்பத்தைந்து வருஷங்களுக்குமுன் இந்த சுப்ரமணிய அய்யருடைய ஜாதகத்தையும் ஸ்ரீமதி காவேரி அம்மாள் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்து, “தாராளமாகக் கல்யாணம் செய்யுங்கள். திவ்யமான சத்புத்ரர்கள் பிறப்பார்கள். குடும்பமும் விருத்தியாகும்” என்று சொன்னாராம். அந்தப் புண்ணியவான் காதில் குண்டலங்கள் ஆட, கண்களில் மூக்குக் கண்ணாடிகள் ஜ்வலிக்கச் சொன்ன ஜோஸ்யம் உண்மையில் ஜாதகத்தைப் பார்த்துச் சொன்னதோ, அல்லது “பின்னால் நடக்கிறபோது இதை நினைவு வைத்துக் கொண்டு நம்மைக் கேட்டால் பார்த்துக்கொள்ளலாம்” என்று சொன்னதோ, யாருக்கும் தெரியாது; அந்தப் பெரியவரின் காலமும் ஆகிவிட்டது. சின்னவேலி ஜமீன்தாருக்கு, இரண்டு புருஷப் பிரஜைகள் ஜனனம் ஏற்பட்டது. மூத்த பிள்ளை கோபாலன் கும்பகோணம் கல்லூரியில் பி.ஏ. பாஸ் செய்துவிட்டு, ‘மூத்தது மோழை’ என்ற பழமொழியைப் பொய்யாக்க மனம் வராதவன் போல் வீட்டோடு உட்கார்ந்து கொண்டான். “ஆம்படையாளுடன் பேசிக்கொண்டிருக்க என் பிள்ளைக்கு அறுபது நாழிகையும் போறல்லை” என்று காவேரி அம்மாள் தன் பிள்ளை காதில் படாத இடங்களிலெல்லாம் சொல்லியிருக்கிறாள். அப்படியே அது கோபாலன் காதில் பட்டிருந்தால் கூட அவன் ஒன்றும் சொல்லியிருக்கமாட்டான். அதே வார்த்தையை அவன் நம்பி ரங்கராஜன் சொன்னால்தான் கோபம் வந்திருக்கும்! ரங்கராஜனுக்கும் கோபாலனுக்கும் எதற்கெடுத்தாலும், வாதம்தான், தர்க்கம்தான். தகப்பனார் சுப்ரமணிய அய்யர் இல்லாத சமயங்களில் சிறுபிள்ளைகளாக இரண்டு பேரும் எத்தனையோ தடவை சிண்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். “ரங்கராஜன் சொல்லி விட்டானோல்லியோ! அது நடக்காது!” என்பான் அண்ணன். “அண்ணாவாள் கொஞ்சம் தலையிடாமல் இருந்து பார்க்கிறதுதானே?” என்று ரங்கராஜன் தயங்காமல் பதில் சொல்லுவான். “ஏண்டா சண்டை போட்டுக்கிறேள்? சுந்தோபசுந்தாள் மாதிரி வந்து பிறந்தீர்களே, பிள்ளைகளா!” என்பாள் காவேரி அம்மாள். “ஏன்னா? அவர் வழிக்கு நீங்க ஏன் போறேள்? அப்புறம் ஏதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு சொல்லுவார்” என்று கோபாலன் மனைவி கல்யாணி பாதி இரைந்தும் பாதி இரகசியமாகவும் தன் புருஷனை அடக்குவாள். ரங்கராஜன் என்னதான் அண்ணனுக்குப் பதில் பேசினாலும், எதிர்த்துச் சொன்னாலும் ஒரு வரம்பைத் தாண்டியதில்லை; அண்ணன் தம்பிகளின் தர்க்கம் வீட்டுக்கு வெளியேயும் வந்ததில்லை. ஆனால், இப்போது ரங்கராஜனும் படிப்பை முடித்துக்கொண்டு வீட்டோடு வந்து உட்கார்ந்ததும், தர்க்கங்கள் அதிகப்பட்டன. அதுவும் ஜமீன்தார் அடிக்கடி சென்னைப்பட்டணத்துக்கும் மதுரைக்கும் ஓடிக் கொண்டு அப்போது அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த முல்லைவாசல் ஜமீன் ஸூட்டில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளத் தொடங்கவே, இவர்களுக்குள் சண்டைகளுக்குக் கேட்க வேண்டியதில்லை. ஒழிந்த நேரங்களில் ரங்கராஜன் மோட்டரை எடுத்துக் கொண்டு சுற்றினான். அதை அக்கக்காக எடுத்துப் போட்டுவிட்டு மீண்டும் பூட்டினான். மோட்டாரில் பல வேடிக்கைகள் செய்யக் கற்றுக்கொண்டான். சின்னவேலி ஜமீன் பெண்கள், ‘சின்ன ஐயர்’ காத தூரத்தில் மோட்டாரில் வரும்போதே கதவைச் சாத்திக் கொண்டார்கள். தெருவில் நடந்தவர்கள் சிலர் பக்கத்திலிருந்த மரம், லாந்தல் கம்பங்கள் மீது அவசரமாக ஏறிக்கொண்டார்கள். இந்த முன் ஜாக்கிரதையெல்லாம் தேவையே இல்லை என்பதை நீரூபிப்பதே போல் ரங்கராஜன் மோட்டார் அடியில் ஒரு கோழிக்குஞ்சு கூட நாளது வரையில் அகப்பட்டுக் கொண்டதில்லை!
@jayaramansekar7584
@jayaramansekar7584 Ай бұрын
ஒரு நாள் மத்தியானம்; ஜமீன்தார் அப்போது மதுரைக்குப் போயிருந்தார். சாப்பாட்டுக்குப் பிறகு கோபாலனும் ரங்கராஜனும் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். என்றுமில்லாதபடி அபூர்வமாக அண்ணனும் தம்பியும் ரொம்ப சௌஜன்யமாக இருப்பதைக் கண்டு கல்யாணிக்குத் திகில் உண்டாயிற்று. ‘இது பெரிய சண்டைக்கு ஆரம்பமாய் இருக்கப்படாதே!’ என்று எண்ணினாள். அவள் நினைத்த மூன்றாம் நிமிஷம் அங்கே நிலவிய சாந்தியில் இடி விழுந்தது. “உன்பாடு குஷி, அப்பா! மோட்டார் விட்டுக்கொண்டிருந்தால் எல்லாம் ஆகிவிடும் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்! வேறே ஒண்ணும் கவனிக்க வேண்டாம்!” என்றான் அண்ணன்காரன். “எல்லாம் நீங்கள் பெரியவாள் கவனிக்கிறபோது நானும் என்னத்துக்கு புகுந்து புறப்படணும்?” என்று பதில் சொன்னாள் ரங்கராஜன். “அவர் பாட்டுக்கு இருக்கட்டும்னா! நீங்க பேசாமல் இருங்கோ!” என்று கல்யாணி குறுக்கிட்டு, விஷயம் முற்றாமல் பார்த்துக் கொள்ள முயன்றாள். ஆனால், ஒரு கல்யாணி அல்ல. பதினாயிரம் கல்யாணிகள் சேர்ந்துகொண்டு கோபாலன் வாயைப் பொத்தியிருந்தாலும் கூட அவனை அடக்கியிருக்க முடியாது. “நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்... நீ ‘டயரி’ எழுதிக் கொண்டிரு!” என்று சொல்லி விட்டான். அந்த ஒரு வார்த்தை ரங்கராஜனுக்கு அவ்வளவு தூரம் கோபமூட்டியிருக்குமென்று கோபாலன் எதிர்பார்த் திருந்தானானால், ஒரு கால் அதைச் சொல்லியிருக்கவே மாட்டான். “நான் ‘டயரி’ எழுதுகிறேன். சும்மா இருக்கிறேன். உனக்கென்ன? அது என் வேலை!” என்று உஷ்ணமாகச் சீறினான் தம்பி. “நீ இப்போ சொன்னயே, ரொம்ப சரி! உனக்கு ஒருத்தன் வேலை வேறே கொடுப்பானா? உன் மாதிரி ஆசாமிகளுக்கு அப்பா ஜமீன்தார் மிட்டாதார்களாக இருந்தால்தான் பிழைப்பு. ஓர் இடத்தில் ஒரு நாள் உடம்பு வணங்கி வேலை செய்ய முடியுமா?” என்று பேச்சுக்கு மேலே பேச்சாகக் கோபாலன் சொன்னான். “அடே! உனக்காகவானாலும் நான் வேலை செய்து காட்டுகிறேன். சம்பாதித்துக் காட்டுகிறேன்... இந்தச் சிங்கம்…” “இந்தச் சிங்கம் நல்ல சாப்பாடாக இருந்தால் வெளுத்து வாரும்... யாராவது நிறையச் சொத்து வைத்தால் அதை அழித்துக் காட்டும்!” என்று சளைக்காமல் முடித்தான் கோபாலன். ரங்கராஜனுக்கு நிஜமாகவே கோபம் வந்துவிட்டது. எழுந்திருந்து விட்டான். “இன்னிக்கே நான் இங்கிருந்து போகிறேன். உன் கண்ணெதிரில் என் சம்பாத்தியமாகச் செய்து பிழைத்துக்கொள்ளுகிறேன்... அப்போ உன் மூஞ்சியை...” இந்த இரைச்சல் கேட்டுக் காவேரி அம்மாள் ஓடி வந்தாள். “நன்னாயிருக்குடா, அண்ணன் - தம்பி என்கிற மரியாதை இல்லாமல் உங்கப்பா வந்தால் என்ன சொல்லுவார்...? ஏண்டா கோபாலா, உனக்குத்தான் வயசாகலையா, அந்த இரண்டுங்கெட்டானோடே...” என்று ஆரம்பித்தாள்.
@jayaramansekar7584
@jayaramansekar7584 Ай бұрын
மூலையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்த குமாஸ்தா ராமய்யர் மெள்ள எழுந்து, இந்த அசந்தர்ப்பமான வேளையில் இருக்கக் கூடாதென்று புத்திசாலித்தனமாக வாசல் பக்கம் நழுவி, வேறு யாரும் உள்ளே வராமல் பார்த்துக் கொண்டார். “நீ சும்மா இரு, அம்மா! இவனுக்கு எப்பவுமே என்னைக் கண்டால் ஆகிறதில்லை... அலட்சியம்தான்! நான் ஒரு நாழி இங்கே இருக்க மாட்டேன். இத்தனை நாளாக நான் ஹாஸ்டலில் இல்லையா?” என்றான் சின்னப்பிள்ளை ரோஷத்துடன். “ஏன்னா உங்களுக்கு? நாளைக்கு மாமனார் வந்தால்” என்று கல்யாணி அடக்கினாள் புருஷனை. “உன் மாமனார்தான் வரட்டுமே! பிள்ளை வளர்ந்திருக்கிற அழகைப் பார்க்கட்டுமே!” என்றான் கோபாலன். “அப்பா ரங்கராஜா! உங்கப்பா வந்தப்புறம் சண்டை போடுடா!” என்று தாயார் சின்னப் பிள்ளையைக் கெஞ்சினாள். “அப்பா வந்தப்புறம் எல்லாத்தையும் நீ சொல்லிக்கொள்! அதுவரைக்கும். இவன் மூஞ்சியைப் பார்த்துக் கொண்டு நான் இருக்கப் போகிறதில்லை! என் துணிமணிகளை எடுத்துக்கொண்டு...” என்று படபடப்பாகப் பேசிய ரங்கராஜனைக் குறுக்கிட்டுக் கோபாலன், “ஞாபகமாக உன் ‘டயரி’யையும் எடுத்துக்கொண்டு போ!” என்றான். இரண்டாம் முறையாக ‘டயரி’ குறிப்பிடப்பட்டபோது ரங்கராஜனின் ஆத்திரம் பன்மடங்கு அதிகமாயிற்று. ரகசியம் என்று எண்ணி, மனத்தில் தோன்றியதையெல்லாம் எழுதி வைத்திருக்கும் ஒன்றை இவன் பார்ப்பதாவது, படிப்பதாவது என்று சீறினான். “வெட்கக் கேடு, ஒருத்தர் ‘டயரி’யை ஒருத்தர் படிப்பது” என்றான். “அதில் இருக்கும் சமாசாரம் அதைவிட வெட்கக் கேடாக இருக்கே!” என்று சளைக்காமல் கோபாலன் கேட்டான். “ஐயோ பிள்ளைகளா! உங்களுக்குப் புத்தி உலக்கைக் கொழுந்தா? ஒருத்தொருத்தனுக்கு நாலு குழந்தை பிறக்கற வயசாச்சு!” என்று தாயார் கூவினாள். “அதிகமாய் வேண்டாம்! இதோ கிளம்பிவிட்டேன்... முதல் சம்பளத்தை நான் ‘மணியார்ட’ரில் அனுப்புகிறேன் அண்ணா, உன் விலாசத்துக்கு அனுப்புகிறேன்!” என்றான் ரங்கராஜன் எகத்தாளமாக. “அதை வைத்துக்கொண்டு நான் அசுவமேத யாகம் பண்ணுகிறேன்!” “அதெல்லாம் வேண்டாம். அண்ணா! ஒரு ‘டீ பார்ட்டி’ கொடுத்து ஒரு பட்டம் சம்பாதிச்சுக்கோ. உனக்கிருக்கிற அபார மூளைக்கு ஒரு பட்டம் குறைச்சலாக இருக்கப்படாது.” தன் மனைவியின் எதிரில் இவன் அப்படிப் பேசியது சுள்ளென்று தைக்கவே, “சி நாயே! நாக்கை அடக்கிண்டு வெளியே போ!” என்றான் கோபாலன். “உங்கள் எச்சிற்கலைகள் வேண்டாமென்றுதான் இந்த தாய் போகிறது! நாய்கள்கூட எத்தனையோ மனுஷாளைவிடப் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதுண்டல்லவா?” என்றான் ரங்கராஜன். “இங்கே நின்னியோ...” என்று பாய்ந்த கோபாலனின் ஒரு கையைக் கல்யாணியும் ஒரு கையைக் காவேரியுமாகப் பிடித்துக் கொண்டார்கள். ரங்கராஜன் அதற்குமேல் நிற்கவில்லை. அடுத்த ஐந்து நிமிஷங்கள் அவனுடைய அறை அல்லோலகல்லோலப்பட்டது. வேண்டாதவற்றை ஒரு மூலையில் எறிந்தான் ஒரு சின்ன சூட்கேஸை எடுத்து ஒழித்து நாலு ஷர்ட்டுகள், சில வேஷ்டிகள், அரை டஜன் துண்டுகள், சில கைக் குட்டைகள், டயரி, பழைய பவுண்டன் பேனா இவைகளை அள்ளிப்போட்டு மூடிக்கொண்டு, மணிபாக்சைத் திறந்து பார்த்தான். அவன் பணமாக நூறு ரூபாய் இருந்தது. திரும்ப மணிபாக்சைப் பையில் போட்டுக்கொண்டு வாசலில் வந்தான். மோட்டார் டிரைவர் துரைசாமி தூங்கிக்கொண்டிருந்தான். ரங்கராஜன் தட்டினதும் திடுக்கிட்டு விழித்தான்.
@jayaramansekar7584
@jayaramansekar7584 Ай бұрын
“எடு வண்டியை தஞ்சாவூர் ஸ்டேஷனுக்கு விடு” என்று உத்தரவு கொடுத்தான், அவன் ஏறும்போது அது வரை வாசலில் ஒண்டிக் கொண்டிருந்த ராமய்யர் வந்து, “மன்னிக்கணும்... பட்டணத்திலே மாமா டி.வி.எஸ். அய்யர் வந்திருக்காரே, அங்கே போறேளோ?” என்று கேட்டார் உள்ளூறப் பயத்துடன், “உமக்கென்னங்காணும் அது?” என்றான் ரங்கராஜன் வெடுக்கென்று. “இல்லை, கேட்டேன்!” “அதைத்தான் உமக்கென்னன்னு நான் கேட்கிறேன்! உள்ளே போய்ப் பெரியவருக்குக் காலைப் பிடியும், போம்! அவருக்குக் குதிச்சுக் குதிச்சுச் சுளுக்கு ஏற்பட்டிருக்கு!” ராமய்யர் ஒதுங்கிக்கொண்டார். மேலே பேசியிருந்தால் ரங்கராஜன் தனக்கு இருந்த கோபத்தில் எதுவும் செய்யத் தயங்கியிருக்கமாட்டான் என்பதைத்தான் அவர் அப்போது தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தஞ்சாவூர் ஸ்டேஷனிலே கொண்டுவந்து விட்ட டிரைவர், ரங்கராஜனிடம் விடை பெற்றுக் கொண்டும் தயங்கித் தயங்கி நின்றான். ரங்கராஜன் சென்னைக்குப் போகிறான் என்பதைக் கண்டு பிடித்த பிறகுதான் திரும்பினான். சொந்தத்தில் ஏதாவது வேலை சம்பாதித்துக் கொண்டு, முதல் சம்பளத்தைத் தன் அண்ணாவுக்கு அனுப்ப வேண்டுமென்ற உறுதியுடன் வந்த அதே ரங்கராஜன்தான் சென்னையில் வந்து இறங்கி யிருந்தான். வந்த சூட்டோடு சூடாக பெட்டியைக் கெட்டுப் போக்கியதுதான் தெரிந்த விஷயமாகப் போயிற்று. சென்னைக்கு வந்தவுடனேயே பரங்கிமலையில் இருந்த தன் தாய் மாமனைப் பார்க்கலாமென்று அவனுக்கு ஓர் ஆசை உண்டு. சமீபகாலம் வரை சர்க்கார் உத்தியோகத்தில் பல இடங்கள் மாறி, இப்போது மாஜிஸ்டிரேட்டாக அவர் சென்னையில் இருப்பது அவனுக்கு தெரியும். அவரைத்தான் டி.வி.எஸ். அய்யர் என்று குமாஸ்தா ராமய்யர்கூடக் குறிப்பிட்டார். ஜமீன்தாருடன் வெகு நாள் முன்பு ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, அவர் பல வருஷங்களாகவே சின்னவேலிக்கு வந்ததில்லை. ரங்கராஜன் சென்னைக்கு எவ்வளவோ தடவைகள் வந்திருந்தும் அந்தச் சமயங்களில் டி.வி.எஸ். அய்யர் வீட்டிற்குச் சென்றதில்லை. இப்போதும், கைப்பெட்டி காணாமல் போன பிறகு, மாமா வீட்டிற்குப் போவதென்பதை அவன் மனத்தைவிட்டு அடியோடு தள்ளிவிட்டு ஒரு பெண்ணை வியாஜமாகக் கொண்டு பிரணதார்த்தியின் மோட்டார் டிரைவராக வந்திருக்கிறாள். பெயரையும் மாற்றி ராஜாராமன் என்று வைத்துக்கொண்டிருக்கிறான். சென்ற அத்தியாயத்தில் நடந்த சம்பவங்களுக்கு மறுநாள் காலை பிரணதார்த்தி ரங்கராஜனைத் தமது குடும்பத்துக்கு அறிமுகப்படுத்தினார். பிரணதார்த்தியின் மனைவி பாக்கியம். அப்போது புதிதாகச் செய்து வந்திருந்த முத்து வளையலில் சிரத்தையாக, புது டிரைவரை அதிகமாக லட்சியம் செய்யவில்லை. “ஏண்டாப்பா உன் பேருதான் ராஜாராமனோ?” என்று கேட்டாள் தமக்கை, தன் பெரிய விழிகளை உருட்டி விழித்து, “ஆமாம், அம்மா!” என்றான் அவன். “இதுக்கு முந்தி எங்கேயெல்லாம் டிரைவராயிருந்தே?” “எங்கேயும் இருந்ததில்லை. முதல்லே இங்கேதான் இருக்கப்போறேன்.” “என்னது...! ஏண்டா பிரணதார்த்தி! வேலை தெரியாதவனாயிருந்து...” “இல்லை. அம்மா! நான் வேலைக்கு இருந்ததில்லையே ஒழிய, வேலை தெரியாதவன் இல்லே! நன்னா மோட்டார் ஓட்டுவேன்... நீங்க உங்க தம்பியைக் கூப்பிட வேண்டாம்!” தமக்கைக்குச் சொரேர் என்றது. இவன் வெடுக்கும் துடுக்குமாக இருக்கிறானே; நம் தம்பிக்குச் சரிப்படுமா என்று சந்தேகப்பட்டாள். பிடிக்காவிட்டால் எதற்கும் பழைய வழி இருக்கிறதென்று எண்ணி, “நீ வேலைக்கு இரு. பார்க்கலாம்! இந்த வீட்டிலே நகைகளும் வெள்ளிப் பாத்திரமும் துணி மணிகளும் இறைப்படும். ‘கை நீளம்’கள் இங்கே சரிப்படாது... உன் வேலையுண்டு. நீ உண்டு என்று நீ இருந்தால், என் தம்பி உனக்கு நாலு இடத்திலே சிபாரிசு செய்வான், உனக்கும் அதிர்ஷ்டம் இருக்கணுமே?” என்றாள். “அது சரிதான்! அப்புறம் நான் உங்க தம்பிக்கு நல்ல டிரைவரா சிபாரிசு செய்யணும்!” தமக்கைக்கு இவன் பேச்சே புதிராக இருந்தது. அதற்குள் அங்கே வந்த பிரணதார்த்தி, “என்ன ராஜாராமன், வண்டியை எடுக்கிறயா?” என்றார். “அது முடியாதுன்னு சொல்லத்தான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!” என்றான் ரங்கராஜன் கண்டிப்பாக. “ஏன்?” என்றார் பிரணதார்த்தி திடுக்கிட்டு. “வண்டி ரொம்பக் கெட்டுக் கிடக்கிறது. சார்! இன்னிக்குப் பூராவும் ‘கிளீனிங்’தான். நாளைக்கு எங்கே வேணாலும் போகலாம்...” பிரணதார்த்தி யோசித்தார். “சரி! ‘கிளீன்’ செய். நான் இன்னிக்கு எப்படியாவது பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று சொல்லி விட்டு, உடனேயே பஸ் ஸ்டாண்டுக்குக் கிளம்பினார்.
@jayaramansekar7584
@jayaramansekar7584 Ай бұрын
காரேஜில் வேலை செய்து கொண்டிருந்த ரங்கராஜனுடைய கண்கள் அடிக்கடி பங்களாவின் பின்புறத்தையே நோக்கித் திரும்பின. இன்னும் அவள் வெளிப்படவில்லையே ஏன்? அவளுடன் தனித்துப் பேச இதைவிடப் பெரிய சந்தர்ப்பம் எங்கே கிடைக்கப் போகிறது? ரங்கராஜன் துடியாய்த் துடித்தான். இரண்டு மணி நேரம் ஓடிவிட்டது. இனிமேல் அவள் வரப்போவதில்லை என்று அவன் சோர்வடைந்து வேலையைக் கவனிக்கப் போன சமயம் அவன் குரல் அமிர்தவர்ஷம் போல் அவள் காதில் கேட்டது. “அடே பாலு! நீ கண்ட இடத்துக்கு ஓடினயோ அப்புறம் அடிப்பேன்!” என்று சொல்லிக் கொண்டு அவள் வந்தாள். பாலு என்ற சின்னப்பையன், ஓர் அணில் பிள்ளையைத் துரத்தி வந்தவன், சட்டென்று நின்று, “சரி, அக்கா! அத்து மீறி நடப்பவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். அப்படித்தானே?” என்றான். “ஆமாம்! அதோ அங்கே அந்த மாமா மோட்டார் ரிப்பேர் செய்யறா! அதைப் பார்க்கலாம், வா!” என்று பையனை அழைத்துக்கொண்டு அவள் காரேஜுக்குச் சற்றுத் தூரத்தில் வந்து நின்றாள். முதல் நாள் அவளுக்கு உதவி செய்தது ஒன்று, அவள் கையால் அடி வாங்கியது ஒன்று ஆகிய இரு சம்பவங்களுக்குப் பிறகு தாராளமாகப் பேசலாம் என்ற தைரியம் ரங்கராஜனுக்கு உண்டு. சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாதென்று, “நீங்கள்தான் எஜமானருடைய பெண்ணா?” என்று கேட்டு விட்டான். “இல்லை!” என்றாள் அவள். ரங்கராஜன் ஒரு பெருமூச்சு விட்டான். “ஒவ்வொரு வண்டியும் புறப்படுவதற்கு அரை மணிக்கு முன் இங்கே டிக்கெட்டு கொடுக்கப்படும்” என்றான் பாலு மடமடவென்று. புரியாமல் விழித்த ரங்கராஜனிடம், “இந்தப் பிள்ளை இப்படித்தான் பேசும். எங்கே எந்த நோட்டீஸ் எழுதி ஒட்டியிருந்தாலும் அதை நெட்டுருப் பண்ணி வைத்துக் கொண்டு சமயாசமயம் பார்க்காமல் ஒப்பிக்கிறது” என்றாள் அவள். “நீங்கள் இவர் பெண் இல்லையென்றால் வேறு...” “எச்.டி. பெருங்காயத்தையே எப்போதும் உபயோகியுங்கள்” என்றான் பாலு. “நான் இங்கே யாருக்கும் உறவில்லை. கொஞ்ச நாள் தங்கியிருக்கலாமென்று வந்திருக்கிறேன். எங்கப்பாவும் இந்த வீட்டு எஜமானரும் பழைய நாளைய சிநேகிதர்கள். என் தகப்பனார் டில்லிக்கு ஓர் அவசர காரியமாகப் போனபோது. இங்கே என்னை விட்டுவிட்டுப் போனார்...?” “உங்கள் தாயார்?” அதைக் கேட்டதுமே அவள் கண்கள் கலங்குவதைக் கண்டு, “நான் புரிந்துகொண்டு விட்டேன்... மன்னிக்கணும்... அவர் காலமாகி எத்தனை வருஷமாகிறதோ?” என்று கேட்டான் ரங்கராஜன். “இரண்டு வருஷம் ஆகப்போகிறது. அவள் சிராத்தத்துக்கு அப்பா வந்தாக வேண்டும். அதுவரை இங்கேதான் இருப்பேன்.” “உங்கள் பெயர்?” “கோமதி.” “கோமதிஹி - கோமதீ - கோமதயஹ” என்றான் பாலு. “அடே! சும்மா இருக்கணும், தெரியுமா? இல்லாட்டா மாமா கோவிச்சுக்குவார் அப்புறம்!” என்று அவனை அதட்டிவிட்டு, “இவனுக்கு இதுவே பெரிய பயித்தியமாப் போச்சு!” என்றாள்.
@jayaramansekar7584
@jayaramansekar7584 Ай бұрын
ரங்கராஜனுக்குச் சின்னப் பயல்கள், அதுவும் சூட்டிகையான பயல்கள் என்றால் அத்யந்தப் பிரேமை. பாலு குறுகுறுப்பாகவும் வெகு துடியாகவும் இருக்கவே, அவனைப் பக்கத்தில் இழுத்து அணைத்துக் கொண்டு, “எலே! எனக்கும் இது மாதிரி எத்தனையோ தெரியும். சொல்லித் தரேன், கேளு: ‘துப்பு இங்கே’, ‘அபாய அறிவிப்பு’, ‘வண்டியை நிறுத்தக் கைப்பிடியை இழு’, ‘இடது பக்கம் போ’, ‘ஆட்ட காலச் சட்டத்தை அனுமதிப்பதே முறை’, ‘உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது’, ‘வகுப்பு மாறி உட்காருபவர்களிடம் இரட்டிப்பு சார்ஜ் வசூலிக்கப்படும்.’ போதுமா, இன்னம் வேணுமா?” என்றான். பாலு திணறினான். “இந்த மாமா கெட்டிக்காரராக இருக்காரே!” என்று தன் அபிப்பிராயத்தையும் தெரிவித்தான். “நேற்றுச் சாயந்தரம் ஓர் ஆள் ஒளிந்து கொண்டானே...” என்று ரங்கராஜன் விசாரிக்கத் தொடங்கின போது கோமதி, “அவன் கிடக்கிறான்... அவன்தான் இந்த வீட்டுக்காரர் பிள்ளை. சர்வ அசடு. அவனுக்குப் போட்டியா ஒரு பெண் வேறே இருக்கு. நாலு நாளா அவள் டவுனுக்குச் சித்தி வீட்டுக்குப் போயிருக்கா. நீங்கள் கூட நேற்று அவனை விரட்டிக்கொண்டு சிரமப்பட்டிருக்க வேண்டாம். நானே அவனுக்குச் சூடு கொடுத்து” என்று நிறுத்தினாள். “இந்த வீட்டில் நான் இருக்கும் வரைக்கும் உங்களுக்கு அந்தச் சிரமம் வேண்டாம்” என்றான் இளைஞன். கோமதி புன்னகை செய்து, “நீங்கள் இங்கே அதிக நாள் இருக்க வேண்டுமே!” என்றாள். “ஏன், அது ரொம்ப சிரமமோ?” “போகப் போகத் தெரிய வேண்டும். அதுவும் நான் சொன்னதாகத் தெரிய வேண்டாம்.” “பார்க்கலாமே! எதற்கும் வயிறு ஒன்று இருக்கிறதே? அதற்காக எங்கேயாவது உழைத்துத்தானே ஆக வேண்டும் அது கிடக்கட்டும், இங்கே உங்களுக்காவது அசௌகரியமொன்றும் இல்லாமல் இருக்கிறதல்லவா?” “சௌகரியம், அசௌகரியம் பார்த்து முடியுமா? புருஷர்களைப்போலவே பெண்களுக்கும் வயிறு ஒன்று இருக்கிறதல்லவா?” என்று கோமதி சொல்லிவிட்டுச் சிரித்தாள். ரங்கராஜன் அவளை எவ்வளவோ கேட்க வேண்டுமென்று திட்டம் போட்டிருந்தான். அவளை நேரில் கண்டவுடன் ஏனோ எல்லாம் மறந்து விட்டன. அவன் யோசித்தபோதே, வீட்டின் இரண்டாங்கட்டில் பிரணதார்த்தியின் குரல் கணீரென்று கேட்டது. “அக்கா! அக்கா! ஒரு விஷயம்னா! நம்ம சாரதாவுக்குப் ‘பஸ்டு கிளாஸ்’ வரன் ஒண்ணு வந்திருக்கு!” என்று சொல்லிக்கொண்டு வந்தார் அவர். “எந்த ஊரு? பிள்ளைக்குச் சொத்திருக்கா? எத்தனை இருக்கும்?” “தஞ்சாவூரே! நம்ப பக்கம்தான்! நாகநாத முதலியார்தான் பையனைக் காண்பித்தார். பையனே நாளைக்கு வருவான் இங்கே! கொள்ளை கொள்ளையாகச் சொத்து இருக்கிறது!” “அவனுக்குப் பிராப்தம் இருக்கணும் இங்கே வர! ஏண்டா, பிள்ளை யாருன்னு சொல்லல்லையே?” “பிள்ளையா? சின்னவேலி ஜமீன்தாருடைய இரண்டாவது பிள்ளையாம்! பேரு ரங்கராஜனாம். பார்க்கிறதற்கு ராஜா மாதிரியிருக்கான். கிடைக்கணும், சாரதா அதிர்ஷ்டம்!” என்றார் பிரணதார்த்தி. பிரணதார்த்தியின் கடைசி வார்த்தைகளைக் கேட்ட ரங்கராஜன் பிரமித்துப் போய் நின்று விட்டான்!
@jayaramansekar7584
@jayaramansekar7584 Ай бұрын
பிரணதார்த்தி என்று சொல்லுங்கள் பிளீஸ்.... கேட்க அருமையாக இருக்கும் சமயத்தில் “”பானகத் துரும்பு”” போல் இருக்கு.....
@KathaiCharam
@KathaiCharam Ай бұрын
👍
gomathiyin kathalan -3  by Devan
37:11
KathaiCharam
Рет қаралды 470
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 19 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 83 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 9 МЛН
Aanai k Wehshi Aadamkhor || Horror story || Urdu Hindi Kahani
48:17
mohana silai-5 by sandilyan
34:19
KathaiCharam
Рет қаралды 180
mohana silai-6 by sandilyan
24:02
KathaiCharam
Рет қаралды 74