Рет қаралды 2,727
அருள்மழை பொழிவாய் ரஹ்மானே
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே
அண்ணல் நபியை தந்தோனே
அருள்மழை பொழிவாய் ரஹ்மானே
_____________________________________________________________________
கவிஞர் ஸாயிர் அப்துர் ரஹீம் (மதிதாசன்) அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "அருள்மழை பொழிவாய் ரஹ்மானே" பாடல் அல்ஹாஜ் S.M.அபுல் பராக்காத் அவர்கள் குரலில்.
____________________________________________________________________
Lyrics
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே
அண்ணல் நபியை தந்தோனே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
மகத்துவம் ஓங்கும் அர்ஷின் தலைவா
மாண்பு மிகுந்தவன் நீயே
மகத்துவம் ஓங்கும் அர்ஷின் தலைவா
மாண்பு மிகுந்தவன் நீயே
நிகரில்லாத தனியோன் நீயே
நேர்மையாளனும் நீயே
இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே
இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே
எங்கள் முகம் பார்ப்பாயே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
ஆகுக என்னும் குன் என்ற சொல்லால்
அனைத்தையும் படைத்தவன் நீயே
ஆகுக என்னும் குன் என்ற சொல்லால்
அனைத்தையும் படைத்தவன் நீயே
வாகுடன் குர்ஆன் வேதம் தந்த
வாய்மையாளனும் நீயே
அனுதினம் உன்னை மறவாதிருக்கும்
அனுதினம் உன்னை மறவாதிருக்கும்
ஆற்றல் நீ தருவாயே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
ஆதம் நபியின் பிழைதனை பொறுத்தே
அன்பை சொரிந்தவன் நீயே
ஆதம் நபியின் பிழைதனை பொறுத்தே
அன்பை சொரிந்தவன் நீயே
நீதி நபியாம் இபுறாஹீமை
நெருப்பினில் காத்தவன் நீயே
நலம் பெற எங்கள் பாவங்கள் போக்கி
நலம் பெற எங்கள் பாவங்கள் போக்கி
நன்மை வாழ்வளிப்பாயே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
பாவம் பொறுத்தே பண்புடன் ஆளும்
பான்மை கஃபூரும் நீயே
பாவம் பொறுத்தே பண்புடன் ஆளும்
பான்மை கஃபூரும் நீயே
மேவும் துன்பம் யாவும் நீக்கும்
மேன்மை ஸஃபூரும் நீயே
அறமுடன் எங்கள் கண்ணீர் துடைத்து
அறமுடன் எங்கள் கண்ணீர் துடைத்து
அடைக்கலம் நீ தருவாயே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
எல்லா புகழும் உனக்கே சொந்தம்
அல்லா ஏற்றுக் கொள்வாயே
எல்லா புகழும் உனக்கே சொந்தம்
அல்லா ஏற்றுக் கொள்வாயே
நல்லார் நெஞ்சில் என்றும் வாழும்
வல்லமையாளனும் நீயே
பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று
பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று
பாவம் பொருத்தருள்வாயே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே
அண்ணல் நபியை தந்தோனே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே...
***********************************************************************