ஒருவர் இறந்து இத்தனை மாதங்களாகியும் குற்றவாளியை கண்டு பிடித்து தண்டனை கொடுக்காமல் ஏதோ நாங்கள் நடவடிக்கை எடுத்து கொண்டு தான் இருக்கிறோம் என்று காட்டி கொள்வதற்காக சும்மா அவ்வப்போது தகவல்களை தந்து கொண்டு இருக்கிறமாதிரி தெரிகிறது.... கணவனை பறிகொடுத்த அந்த சகோதரிக்கு அரசாங்கம் செய்கிற நன்றி கடனா ? இது...... நாங்கள் தற்போது ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறவங்களுக்குத் தான் ஓட்டு போட்டு வருகிறோம்.. ஆனால் தொடர்ந்து கொலைகள் நடப்பதும் குற்றவாளிகளை சீக்கிரம் கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்காமல் தாமதப் படுத்துவதும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை எங்கள் மத்தியில் குறைந்துவருகிறது...... அடுத்த முறை ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கனவு காணாமல் தயவுசெய்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள பாருங்கள்...உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு தயவுசெய்து நன்மை செய்யுங்கள்... நீங்கள் நினைக்கிற மாதிரி வெற்றியை எளிதாக பெறமுடியாது ஏதோ ஒரு கூட்டமக்கள் நன்மை பெறுகிறார்கள் என்பதை வைத்து 2026 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று தயவு செய்து நினைக்காதீர்கள்.. மக்களின் மனநிலை மாறிவருகிறது என்பதே உண்மை நிலவரம்