Рет қаралды 1,809
#Partnership இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கே, வரும் 15ம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
17ம் தேதி வரை இங்கு இருக்கும் அவர், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்த உள்ளதாக, இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வரும் திசநாயக்கே, டில்லியில் நடக்கும் தொழில் மாநாட்டில் பங்கேற்கிறார்.
அங்கு நம் நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களை சந்திக்கும் திசநாயக்கே, இலங்கையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து இரு நாட்டு தலைவர்கள் பேச்சு நடத்துவர் எனவும் தெரிகிறது.
இலங்கை அதிபர் திசநாயக்கே கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்டவர். சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என அவர் பதவியேற்ற போதே பல்வேறு கருத்துகள் வெளியாகின.
இருப்பினும் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதே என் பிரதான நோக்கம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயார் என, திசநாயக்கே கூறியிருந்தார்.
சில தினங்களுக்கு முன், இலங்கை சென்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் திசநாயக்கேவுக்கு, ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி சார்பில் வாழ்த்துக்களை சொன்னார். இந்தியா வரும்படியும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்ற திசநாயக்கே, தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருநாட்டு உறவு, தொழில், வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் படிக்கும் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு சீன அரசின் சார்பில் சீருடைகள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் இந்த உதவியை இலங்கை பிரதமர் ஹரிணி வரேவற்றுள்ளார்.#SrilankaPresident #Dissanayake #Srilanka #dinamalar