Рет қаралды 417
வனவாசத்தில் பதினெட்டு வருடங்கள் தன்னைப் புதைத்துக்கொண்ட ஒரு சாமியார், மீண்டும் உயிர்த்தெழுந்து சமூகத்தின் மனவாசனையை நுகர வந்தால் என்ன ஆகும்? ஆழி சூழ் உலகு அவனை விட்டுத் தனியே சுழன்றுகொண்டிருக்கும். இச்சூழலில் அவனுக்குள் காதல் ஒன்று சூல் கொண்டால்? வரலாற்றை, கிறித்துவுக்கு முன் - பின் எனப் பிரிக்கலாம். மனிதனை, காதலுக்கு முன் - பின் எனப் பிரிக்கலாம். ஆசையை ஒழி' என்று ஆன்மிகத்தில் கலந்தவன், 'ஆசையே ஒளி' என்று காதலில் கரைய ஆரம்பித்தால்.... காவியும் காதலும் கவிப்பேரரசரின் வார்த்தைகளில் இங்கே காவியமாகின்றன.
#vairamuthu #vairamuthukavithaigal #tamilnovels