கோவில்பட்டி தேவேந்திரகுல இளைஞருக்கு நடந்தது என்ன? டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி விடம் தாயார் கண்ணீர்

  Рет қаралды 1,645

PT Media

PT Media

Күн бұрын

#devendrakulavelalar #drkrishnasamy #puthiyatamilagam #krishnasamy #கிருஷ்ணசாமி #தேவேந்திரகுலவேளாளர்
புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி Dr Shyam Krishnasamy
தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் மீது தொடரும் கொலைவெறி தாக்குதல்.!
(23.09.2024) கோவில்பட்டி - செண்பகப்பேரி பாண்டியராஜன் கொலை!
செப்டம்பர் 30 -ஆம் தேதி கோவில்பட்டியில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்.!
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதியில் நிலவி வந்த தீண்டாமைக் கொடுமைகளைத் தொடர்ந்து, தியாகி இமானுவேல் சேகரனார் படுகொலை மற்றும் 8, 11 கட்டளைகள் மூலமாக தென் தமிழக தேவேந்திர வேளாளர்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்பட்டன; அதனுடைய நீட்சியாக 1979 - 80களில் இராமநாதபுரம் மாவட்ட கலவரமும்; 1989 போடி மீனாட்சிபுரம் கலவரமும்; மீண்டும் 1995-ல் நெல்லை மாவட்டம் வீரசிகாமணியில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் வரையிலும் கலவரம் பரவியது.
தேவேந்திரகுல வேளாளர் மற்றும் மறவர் சாதியினரிடையே நடைபெற்ற இந்த மோதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பலமுறை சட்டமண்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பியுள்ளோம். 1997-ல் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகத்திற்கு கொடுக்கப்பட்ட எதிர்ப்பை தொடர்ந்து, உருவாகிய ஜாதி மோதலுக்கு பிறகு, ஏறக்குறைய 15 ஆண்டுகள் பெரிய மோதல் எதுவும் இல்லாமல் இருந்தது.
ஆனால், கடந்த நான்கைந்து வருடங்களாக தேவேந்திர குல வேளாளர் மக்கள் வாழும் கிராமங்களில் தாக்குதல்கள் அதிகரித்து, 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி,தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்துமனோ என்ற இளைஞர் சிறை வளாகத்திற்குள்ளேயே ஜாதி வெறியோடு அடித்துக் கொல்லப்பட்டார். நாங்குநேரி அருகே வாகைக்குளம் கிராமத்தை சார்ந்த தீபக் பாண்டியன் என்ற இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் பட்டப்பகலில் திருநெல்வேலி கே.டி.சி நகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.
தீபக் ராஜாவின் கொலை வழக்கு குற்றப்
பத்திரிக்கையை 90 நாட்களுக்குள்ளாக தாக்கல் செய்திருந்தால், குற்றவாளிகள் பிணையில் வெளியில் வந்திருக்க முடியாது. ஆனால், குற்றவாளிகளுக்கு உதவக்கூடிய வகையில் காவல்துறை அதிகாரிகள் மெத்தனத்துடன் செயல்பட்டதின் வாயிலாக கைது செய்யப்பட்ட 14 பேரும் கீழமை நீதிமன்றத்திலேயே விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கைகள் பெருத்த சந்தேகங்களை கிளப்புகின்றன மற்றும் குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. இதன் விளைவாகவே தென் தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
நேற்றைய தினம் (23.09.2024) கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் என்ற 27 வயது இளைஞர் அதிகாலை 07.30 மணிக்கு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கிராமத்தில் பத்து குடும்பங்கள் மட்டுமே தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.
நான்கு வருடங்களுக்கு முன்பு, அக்கிராமத்தைச் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுகத்தைச் சார்ந்த ஒரு இளைஞரும், மறவர் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணும் நின்று பேசியதை கூட தாங்க முடியாமல் அந்த பையனின் தந்தையின் காலை வெட்டி இருக்கிறார்கள். சில நாட்களிலேயே கட்டாயப்படுத்தி வழக்கையும் வாபஸ் வாங்க வைத்திருக்கிறார்கள். எனினும் ஜாதி வெறி அடங்காமல் நேற்றைய தினம் (23.09.2024) முன் விரோதமோ, முன் மோதலோ இல்லாத நிலையிலும் ஒரு டிப்ளமோ படித்த பட்டதாரியான பாண்டியராஜனை அப்பட்டமான ஜாதி வெறியோடு அதே கிராமத்தை சார்ந்த மறவர் சாதியை சார்ந்த சதீஷ் என்பவன் தலைமையில் ஒரு பெரிய கும்பல் இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளது.
இச்செய்தியை அறிந்து அனுதாபத்துடன் சுற்றுவட்டார தேவேந்திர குல வேளாளர் மக்கள் கூடி விடக்கூடாது என்ற குறிக்கோளுடன் காவல்துறை அவசர அவசரமாக செயல்பட்டு மணிமுத்தாறு காவல்துறையில் பணிபுரியும் பாண்டியராஜனின் உறவுக்காரரான காவலரை பயன்படுத்தி கணவரை இழந்த பாண்டியராஜனின் தாயாரிடம் கையெழுத்து பெற்று அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அதிகாலையில் அடக்கம் செய்து விட்டார்கள். ஒட்டு மொத்தமாக விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென்மாவட்டங்களில் காவல்துறையின் நடவடிக்கைகள் ஒரு தலைப் பட்சமானதாகவும், தென் தமிழகத்தில் மீண்டும் ஒரு சாதிய மோதலை தூண்ட தூபமிடுவதாகவுமே இருக்கிறது .
காவல்துறையின் இந்த ஒரு தலைப்பட்சமான செயல் குற்ற பின்னணி கொண்ட ஒரு கும்பலை தொடர்ந்து குற்றம் செய்ய தூண்டவும், அவர்களின் வன்செயல்கள் தேவேந்திர குல இளைஞர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதாகவுமே தோன்றுகிறது.
காவல்துறையின் இந்த ஒருதலைப் போக்கை கண்டிக்கும் வகையிலும், பாண்டியராஜனின் கொலைக் குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வாங்கித் தர வலியுறுத்தியும் வருகிற செப்டம்பர் 30- ஆம் தேதி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்து கொள்கிறேன்.
டாக்டர்.க.கிருஷ்ணசாமி
நிறுவனர்- தலைவர்
புதிய தமிழகம் கட்சி
24.09.2024.

Пікірлер: 9
@ruby-uy5fd
@ruby-uy5fd 7 сағат бұрын
குற்றவாளி தண்டிக்கபட வேண்டும்
@DevendranToday
@DevendranToday 7 сағат бұрын
டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி 🔥
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 2 сағат бұрын
போராளி தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள்
@dhavamanirajan7773
@dhavamanirajan7773 7 сағат бұрын
தயவுசெய்து பெண்களிடம் கருத்து கேட்காதீங்க இவங்களால சமூகத்தில் உள்ள நிறைய பிரச்சனைகள் உருவாகுது
@PANTIYAN-vp6fz
@PANTIYAN-vp6fz 6 сағат бұрын
குற்றவாளிகள் என் கவுண்டர் பண்ண வேண்டும் காவல்துறை
@MUNIYARAJANAMUNi
@MUNIYARAJANAMUNi 6 сағат бұрын
🙏🙏🙏
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 7 сағат бұрын
வெட்டுனவன் குடும்பம் அழிந்து போகும் கடவுலே
@GuruSamy-pg1oy
@GuruSamy-pg1oy 5 сағат бұрын
என் சமுதாயத்தின் தலைவர் ஐயா டாக்டர் ஐயா தேவேந்திரன் அவர்கள் கழக இந்த ஜாதி வெறி கும்பல்களை சும்மா விடக்கூடாது அதாவது சட்ட ரீதியாக நம் சமுதாயத்தை தொட்டால் என்ன நடக்கும் என்று இவர்களுக்கு காட்ட வேண்டும் சங்கரன்கோவில் கோனார் சமுதாயத்தை சார்ந்த அதன் ஒரு பேருக்கு ஆயுள் தண்டனை தூக்கு தண்டனை மரண தண்டனை கொடுத்தார்கள் மறுபடியும் இவர்களுக்கு வாங்கி கொடுக்க வேண்டும் இந்த மரபு வசந்த வயதுக்கு வாங்கி கொடுக்க வேண்டும் வன்கொடுமை சட்டத்தில் இவர்களை பதிவு செய்து இவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் இவர்கள் திருந்த மாட்டார்கள்
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 46 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 36 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН