முரசொலி அறக்கட்டளை தோற்றம் , வளர்ந்த விதம் அறிந்தவர்கள் அந்த அறக்கட்டளை வழங்கிய விருதை ஞானபீட விருதைவிடச்சிறப்பான விருது என்று கூறியிருக்கும் ஜெயகாந்தன் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. காலம் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளனை எவ்வாறு மாற்றிப்போட்டிருக்கிறது என்பதை எண்ணும்போது மிகவும் வருந்த வேண்டியுள்ளது.
@elumalaia1843 Жыл бұрын
போட்டி போட்டு பண்பாட்டை வளர்க்கும் முயற்சிகள் கருத்து பேதங்களினால் பிளவுபடாத வலிமையான நட்பை உண்டாக்குவதாலும், மக்களின் வியப்பாலும் இந்த முரசொலி விருது சிறப்பு பெறுகின்றது என்ற ஜே.கே யின் பதில் மிகவும் கூர்மையானது. ❤❤❤❤❤
@georgestephen87603 жыл бұрын
கருத்துக்களால் மட்டுமே முரண்படுகிறோம், நட்பு வாழ்க ,இன்றைக்கும் இவை போன்ற உயர்ந்த சிந்தனை வளர்த்தெடுக்கபடவேண்டும்.
@crselvakumar3 жыл бұрын
அருமையான பதிவு. காலத்தால் பொருத்தமான பதிவு. நன்றி.
@subramanianmariyappan86712 жыл бұрын
நெஞ்சில் திறம் நேரில் அறம் பாரதியை படித்தவராய் மட்டுமல்லாமல் அவராய் வாழ்ந்தவர் 🙏
@kalkithirunavu88263 жыл бұрын
குறிப்பிடத்தக்க நேர்காணல். முரண்பாடுகளுடனும் உடன்பாடு கொண்டு செயல்பட்டவர் கலைஞர். அது வேறு விஷயம். வீடியோ கிளிப்பிங்ஸ்ல் ஒரு காட்சி. கலைஞரைப் பார்த்து கரம் குவித்து வணக்கம் தெரிவிக்கிறார் ஜேகே. ஒரு காலகட்டத்தில் ஒரு மேடையில் கலைஞர் அமர்ந்திருக்கிறார். அதே மேடையில் பேச அழைக்கப்படுகிறார் ஜேகே. மைக் முன்பாக ஜேகே உதிர்த்த வார்த்தைகள் இது தான். "இந்த மேடையில் நான் வணங்கத்தக்க யாருமே இங்கு இல்லை" என்கிறார் ஜேகே. சபையிலே அனைவர்க்கும் ஒருவித முகஞ்சுளிப்பு. ஜேகேயின் அந்த வார்த்தைகள்... அவருக்கு அவரது எழுத்ததிகாரம் வாரி வழங்கியிருந்த திமிர். அடுத்து பேச கலைஞர் மைக் முன்பாக. ஜேகேயின் பேச்சைத் தொட்டுக் காட்டி... "ஜெயகாந்தன் பேசும் போது... அவர் வணங்கத் தக்கவர் யாரும் இங்கு இல்லை என்றார். ஆனால்... நான் அவரை வணங்குகிறேன். அவர் தமிழ் மொழியில் சிறந்த எழுத்தாளர் என்பதற்காக அல்ல. இந்த நாட்டின் கோடானு கோடி வாக்காளர்களில் அவரும் ஒருவர் என்பற்காக ஜெயகாந்தனை நான் வணங்குகிறேன்." என்றார் கலைஞர். இது கலைஞரின் "கடிதோச்சி மெல்ல எறிதல்"ன் கனிவு.
@asokanashok83972 жыл бұрын
👏👏soooper reply given Kalaighar!!🌹
@Dhanapal-vr3zr7 ай бұрын
Oru veedu oru ulagam.oru odai oru nadhi sun flower day night writter
@aramudhanchellappa.2683 жыл бұрын
👍 ilaya perumal!
@jagadeesankrishnan18453 жыл бұрын
மொக்க கேள்விகள்... Opportunity was wasted
@fuhrermr3 жыл бұрын
It's not easy to ask question to Mr.JK... bcoz you can't predict 😏 him at any point... That's why.. the opportunity was not utilized properly by the Interviewer.