கருவாய் செவலை - ஆவணப்படம் | Kombai dog documentary | kanni | Rajapalayam | Chippiparai | UrumiTV

  Рет қаралды 35,008

உறுமி URUMI TV

உறுமி URUMI TV

Күн бұрын

#kombai #kanni #rajapalayam #chippiparai
டாக்டர் ஒமர் சாகித்
Anubys farm, காயல்பட்டினம். 99443 29493
ரமணன்,
வழக்குரைஞர், மதுரை. 9500535209
மிராசு தோப்பு
தனபால் மலையாண்டி. லெ
9942124008
9842650103
சுந்தர்.சி
8072046087
கருவாய் செவலை - ஆவணப்படம் | Kombai dog documentary
• கருவாய் செவலை - ஆவணப்ப...
கறிசோறு கடல் நீச்சல் வேட்டைநாய் வாழ்வியல்
• கறிசோறு கடல் நீச்சல் வ...
சுத்தமான வேட்டைநாய் சிறுத்தை பாய்ச்சல் காட்டும்
• சுத்தமான வேட்டைநாய் சி...
வேட்டைநாய் இனவழி வரலாறு 2
• வேட்டைநாய் இனவழி வரலாற...
வேட்டைநாய் உடற்கட்டு | Muscular dog
• வேட்டைநாய் உடற்கட்டு |...
ராஜபாளையம் நாய் ஏமாளிகள் | Rajapalayam dog facts
• ராஜபாளையம் நாய் ஏமாளிக...
இனவழி வரலாறு 1 | வேட்டை பரம்பரை வகையறா | dogs lineage
• இனவழி வரலாறு 1 | வேட்ட...
வீட்டுத் துணைவன் | வேட்டைநாய் | சிப்பிப்பாறை
• வீட்டுத் துணைவன் | வேட...
சுத்தமான கோம்பை நிறம் உருவம் குணநலன்
• சுத்தமான கோம்பை நிறம் ...
கருவாய் செவலை
தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டு நாயினம் கோம்பை.
அலங்கு, மலையேறி, செங்கோட்டை, மாங்கிரல், மண்டை, கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி, கட்டைக்கால், ராஜபாளையம் இப்படி நம்மூர் நாட்டு நாய்கள் பட்டியல்ல பல ரகம் இருக்குது.
இப்படி நாட்டு நாய் வகையில தெரு நாய்கள் போல சாதாரண இருக்கும் கோம்பை நாய்களுக்கு ரவுடி நாய்கள்னு ஒரு பேரும் இருக்கு.
நாட்டு நாய்கள்ல வேட்டை நாய்கள், காவல் நாய்கள்னு ரெண்டு வகை இருக்கு. காவல் நாய்கள் பொதுவா முழுநேர வேட்டைக்காரனா இல்லாட்டியும், காவல் காப்பது, புலனாய்வு, மோப்ப சக்தி, வேகம் இப்படி பல தனித்திறன்களோடு இருக்கும்.
ஒரு வெளிநாட்டு வகை நாய் நம்மளோட கட்டளைக்கு கட்டுப்படும், ஆனா, நாட்டு நாய்கள் நாம சொல்ற கட்டளைகளை ஏற்றாலும், அந்த சூழ்நிலைகளையும் புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரியான முடிவுகளை எடுக்கும்.
மலையடிவாரக் கிராமங்கள்ல கால்நடைகளை அடைச்சு வைக்கிற மாட்டுப்பட்டிகளுக்கு காவல் நம்ம கோம்பைதான். வன விலங்குகள், நச்சுப் பாம்புகள், கள்வர்கள்ட இருந்து காவல் காக்கிறதுக்காக இத வளர்த்து வந்தாங்க. இப்போ தோட்டக் காவல், பண்ணைக்காவல், வீட்டுக் காவலுக்காக அதிகம் பயன்படுத்துறாங்க.
இரவு நேரக் காவலுக்கு கோம்பை நாய்கள் விழிப்போட இருக்கும், பொதுவா அதிகாலையில தோட்ட வேலைக்குப் போறவங்க நாய்களை கூடவே அழைச்சிட்டுப் போவாங்க, நாம அந்த நாய்களை வெளியில கூட்டிட்டுப் போகும் போது, நமக்கு முன்னாடியே நடந்து பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்யும். ஏதாவது ஆபத்தை உருவாக்கும் பூச்சிகள், விலங்குகள் இருந்தால் குரல் கொடுத்து எச்சரிக்கை செய்யும்.
இப்போ காட்டு விலங்குகளை வேட்டையாடுவது சட்டவிரோதம், ஆனா கடந்த காலங்கள்ல தமிழ்நாட்டின் மலையடிவாரக் கிராமங்கள்ல பாரிவேட்டைன்னு போட்டியே நடக்கும், காட்டுப் பன்றிகளையும், முயல்களையும் நாய்களின் துணையோட வேட்டையாடுவாங்க. அதுல கோம்பை நாய்களும் பங்கெடுக்கும். அதனால வேட்டைக்காரன் பட்டமும் கோம்பைக்கு உண்டு.
பிரபலம் ஆனாலே புதுப்புது கதைகளும் உருவாகும், கோம்பைக்கும் அப்படியான உண்மை கலந்த கதைகளும் உண்டு. வரலாறும் உண்டு. வெட்டும்புலி தீப்பெட்டி விளம்பரத்துல இருக்கிறது கோம்பை போன்ற நாய்தான்னு சொல்வாங்க.
ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற கள்வர்களிடம் இருந்து மீட்கப் போராடிய வீரனுக்கு திருவண்ணாமலை பகுதி எடுத்தனூர் கிராமத்துல நடுகல் வைச்சிருக்காங்க. வேடியப்பன் சாமின்னு அதை வணங்கவும் செய்றாங்க. அந்த நடுகல்லுல நாயோட உருவமும், கல்வெட்டு வாசகங்களும் இருக்கு.
கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் (James Welsh) என்ற ஆங்கிலேயரின் குறிப்புகள்படி, மருது சகோதரர்கள் காவல் படையில் கோம்பை நாய் இருந்தது பிரிட்டிஷ்காரங்க படையெடுத்து வந்தப்போ, காளையர்கோயில் கோட்டையைக் காக்கும் பணியில நாய்கள் முக்கியப் பங்கு வகிச்சதுன்னும், ஆங்கிலேயர் காலத்துல திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே பாதுகாப்புப் படையில் கோம்பை இருந்ததுன்னும் மேற்கோள்காட்டி, ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் சொல்லிருக்காரு.
ஜேம்ஸ் ஹென்றி நெல்சன் (James Henry Nelson) அப்படிங்கிற ஆங்கிலேய அதிகாரியும் 1868ஆம் ஆண்டிலேயே கோம்பை நாயின் குணநலன்களை தெரிவிச்சதாகவும் தியோடர் பாஸ்கரன் எடுத்துச் சொல்றாரு.
அதே போல, இந்திய நாட்டு நாய்கள் பத்தி எழுதுன மேஜர் டபிள்யூ.வி.சோமன் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகள்லயே கோம்பை நாய்களைப் பற்றிய குறிப்புகளை சொல்லியிருக்காரு. அன்றைய ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்துல கோம்பை நாய்களை அடையாளப்படுத்தியிருக்காரு.
இப்போ நாட்டினங்களைக் காக்கும் வகையில Indian Council of Agricultural Research-National Bureau of Animal Genetic Resources அமைப்பு கோம்பை நாய்கள் பத்தின ஆய்வுகளை நடத்துறாங்க.
கோம்பை நாய்களுக்கான உணவு முறைகளும், வைத்திய முறைகளும் எளிமையானது. ஆனாலும், இன்றைய காலத்துக்கு ஏற்ப பராமரிப்பும் தேவைப்படுது.
வெறும், நிறத்தையும், அடையாளத்தையும் மட்டுமே வைச்சு கோம்பை குட்டிகள் வாங்க முடியாது. அதனோட குணநலன்களைத் தெரிஞ்சுக்க ஒன்பது மாசங்கள் வரைக்கும் கூட ஆகலாம். அதனால குட்டி வாங்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்.
காட்டுயிர்கள் தங்களுக்கான இடங்களை அடையாளப்படுத்தும். ஆளுகை செய்யும். காவல் காக்கும். அந்தப் பண்பு கோம்பைக்கும் இருக்கு.
//
#UrumiTV, #Urumi TV, #UrumiChannel, Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.

Пікірлер: 26
@sarvanana2612
@sarvanana2612 11 ай бұрын
கோம்பையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த வீடியோ நல்ல ஒரு உதாரணமான வீடியோ
@NagarajNagaraj-jy2mk
@NagarajNagaraj-jy2mk 9 ай бұрын
எங்க நாம வாங்கி வளர்க்கலாம்ன்னு நினைச்சா அதிகமா விலை எப்படி நாட்டு நாய்கள வளர்க்க முடியும்.
@anilkeerthi
@anilkeerthi 11 ай бұрын
Excellent video. Most detailed review of the Kombai dog. Awesome work by the team.
@jeevarathnam8593
@jeevarathnam8593 11 ай бұрын
Super anna
@aravindhsweharjith-pq4rl
@aravindhsweharjith-pq4rl 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு 💯 இது போன்று சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், ஆவனப்படத்தையும் எதிர்பார்க்கிறோம் 😊
@SenthilKumar-k5l
@SenthilKumar-k5l Ай бұрын
@prithviabish7607
@prithviabish7607 11 ай бұрын
Kombai nalla dog than ...ana rodesian ridge back kuda kalapadam pandranganu sldradhu uruttu...yena rodsn ridg back oda prz avlo 70 k ...so 10 thousn kombai oda cross pani adhoda markt ah mudichikka mataanga
@sankaralingam8384
@sankaralingam8384 10 ай бұрын
கோம்பை குட்டி யின் விலை என்ன
@urumitv
@urumitv 10 ай бұрын
அதில் உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@prabhuvn
@prabhuvn 11 ай бұрын
Sir, Ramanathapuram native dogs are also called Kombai locally... some people wrongly call those dogs as Mandai....but local call as Kombai.....The name is contradictory
@prabhuvn
@prabhuvn 11 ай бұрын
Again kalaiyar Kovil is in Ramanathapuram region..so marudhu brother war dogs should be from that region dogs. This dog is from Theni region..This statement increases the doubt name Kombai.
@tamilan6631
@tamilan6631 10 ай бұрын
Champion dog video podunga
@kumarangl2013
@kumarangl2013 6 ай бұрын
I just got into this video by searching about native dogs. Really excellent work and the way u made this documentary my making the real doctors and breeders of the dog to speak directly is awesome. Before getting a dog i need to know whether i can get any assistance from the persons in the video that actually i can raise a dog or not. The reason is all the people in our home are working and we leave our house at morning and return around 5pm. So till then i think i must not hurt my dog by making him/her feel alone. I just need an practical assistance for it or a guide on how to take care in my routine. Is that possible? Pls reply ❤ Finally the work of yr and the breeders are fantastic. Im loving it with great affection. salute for u.
@jessymathews974
@jessymathews974 5 ай бұрын
Kombai puppy available aano. What is the price of 6 months puppy.
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 11 ай бұрын
அருமை பிரதர்
@arthurpremkumarpremkumar9334
@arthurpremkumarpremkumar9334 11 ай бұрын
Super sir
@merroosemusicals
@merroosemusicals 11 ай бұрын
Super
@Prasath-kw8gl
@Prasath-kw8gl 11 ай бұрын
Ellam naaium toilet velila dhan da pogum. Street dog vallathu paru adhu toilet enga poguthunu
@carolinmohan1413
@carolinmohan1413 6 ай бұрын
Sir puppy kedaikkuma
@rajhanravi
@rajhanravi 4 ай бұрын
@30.30 goosebumps moments
@venkadeshyadav2778
@venkadeshyadav2778 5 ай бұрын
Location
@manmathan1781
@manmathan1781 5 ай бұрын
Great Effort
@arjunm1356
@arjunm1356 11 ай бұрын
Gsd and kombai sethu valaka mudiyuma
@tamilan6631
@tamilan6631 7 ай бұрын
Kombai dominant panna try pannum and possessive. Fight expect pannalam
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee 11 ай бұрын
கோம்பை குட்டி விலை என்ன
@urumitv
@urumitv 10 ай бұрын
அதில் உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Yennai Arindhaal Full Movie HD in Tamil | 1080p50
2:48:39
balivni
Рет қаралды 241 М.
Kombai dogs // native breed
18:13
Village Farmer
Рет қаралды 214 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН