Рет қаралды 25
#ஔவையார்#கொன்றை வேந்தன் #தமிழ்
கொன்றை வேந்தன்
ஔவையார் பாடல்
1.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2.ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3.இல் அறம் அல்லது நல் அறம் அன்று
4.ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5.உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7.எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8.ஏவா மக்கள் மூவா மருந்து
9.ஐயம் புகினும் செய்வன செய்
10.ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11.ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12.ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13.அஃகமும் காசும் சிக்கெனத் தேடு