Рет қаралды 614
தென்னாடுடைய மாசிவனாரே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் ஒன்பது குன்றுக்கு உயர்ந்த குன்றில் தவமிருக்கும்
கொல்லிமலை மாசி பெரியண்ணரே போற்றி போற்றி போற்றி...!!!
மாசி அண்ணனாருக்காக,
மனதில் எண்ணங்களை எழுத்தாகவும்
எழுதியதை குரலில் பாடலாகவும்
பாடலை காணொளியாகவும் தயார் செய்து
அண்ணனார் தளத்தில் பதிய அனுமதியளித்த,
நம் அண்ணன் கோட்டூர் மந்திகருப்பண்ணனார் வழித்தோன்றல் அய்யா
திரு ஹரி (தேவகோட்டை) அவர்களுக்கு நன்றிகள்.
அண்ணனார் குன்று உயர்வதுபோல அவர்கள் தலைமுறை உயர அருள வேண்டுமென மாசி பெரியண்ணனாரையும், மந்தி கருப்பண்ணனாரையும், கொல்லியுறை நம் அறுபத்திரு தெய்வங்களையும் வேண்டுகிறோம்.
தென்னாடுடைய மாசிவனாரே போற்றி போற்றி போற்றி...!!!