Рет қаралды 412
”ஜி.எஸ்.டி குறித்து அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்” -புத்தகம் - அறிமுகம்
இந்த புத்தகத்தின் தொகுப்பாசிரியர் சு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள். கடந்த 50 ஆண்டுகளாக பிரபல நிறுவனங்களுக்கு வரி ஆலோசகராகவும், தமிழ்நாடு தழுவிய அளவில் நூற்றுக்கணக்கான பயிலரங்களில் ஜி.எஸ்.டி குறித்த வகுப்பு எடுக்கிற ஆசிரியராகவும் இருக்கிறார். சென்னையில் வரி ஆலோசகர்களுக்கென GSTPS என்ற சொசைட்டி ஒன்றை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் இருந்துவருகிறார்.
புத்தகம் 53 தலைப்புகளில் கோர்வையாக தொகுக்கப்பட்டுள்ளன. என்னென்ன தலைப்புகள் என்பதையும் தனிப்படங்களாக கீழே இணைத்துள்ளோம். பாருங்கள்.
ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதன் சாரத்தை, கேள்வி பதில் வடிவத்தில் எளிய வடிவில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதியுள்ளார். ஆகையால் வரி ஆலோசகர்கள் மட்டுமில்லாமல், வணிகர்களும் புரிந்துகொள்ளமுடியும்.
55வது ஜி.எஸ்.டி கவுன்சில் (21/12/2024) கூடுவதற்கு முன்பு வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
பக்கங்கள் 567
விலை ரூ. 600 தபால் செலவு ரூ. 100 மொத்தம் ரூ. 700
ஜிபே மூலம் அனுப்புங்கள் சு. செந்தமிழ்ச்செல்வன் 9841226856
பணம் அனுப்பிய ஸ்கீரின் ஷாட்டுடன், உங்களுடைய முழு முகவரியையும், பின்கோடுடனும், தொலைபேசி எண்ணையும் என்னுடைய வாட்சப் எண்ணுக்கு அனுப்புங்கள்.
R. Muniasamy - 9551291721
மேலே சொன்ன செந்தமிழ்ச்செல்வன் அவர்களுடைய எண்ணுக்கு பணம் அனுப்புவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் (மட்டும்), என்னுடைய எண்ணுக்கு அனுப்புங்கள்.
மூன்று வேலை நாட்களில் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் அழையுங்கள்.
நன்றி.
இரா. முனியசாமி,
9551291721
சில குறிப்புகள் :
புத்தகம் தொடர்பாக பணம் அனுப்பிய அனைவருக்கும் புத்தகங்களை அனுப்பிவைத்துவிட்டோம். பொங்கலை ஒட்டிய சில நாட்கள் நூலில் ஆசிரியருக்கு வாட்சப்பில் சில பிரச்சனை இருந்தது. ஆகையால், யாருக்கேனும் புத்தகம் வராது விட்டு போயிருந்தால், மீண்டும் ஒருமுறை அனுப்பிய ஸ்கீரின் ஷாட்டுடனும், உங்கள் முகவரியுடனும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.
பணம் அனுப்பியவர்களின் பட்டியலை கவனிக்கும் பொழுது சில விசயங்களை கவனிக்க முடிந்தது.
தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இருந்து தொடர்புகொண்டிருக்கிறார்கள்.
வாங்கியவர்களில் பலர் தணிக்கையாளர்களாக, வழக்கறிஞர்களாக இருந்ததும் சிறப்பு. அவர்கள் ஆங்கிலத்தில் படிக்க ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் என நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழிலும் படிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என புரிந்கொள்ளமுடிந்தது.
எளிய கேள்வி பதில் வடிவத்தில் புத்தகம் இருப்பதால், வணிகர்களும் பலர் வாங்குகிறார்கள்.
தமிழ்நாடு தழுவிய அளவில் பல வரி ஆலோசகர்கள் சங்கங்களும் தங்களுடைய உறுப்பினர்களுக்காக தொடர்பு கொண்டு வருகிறார்கள். மதுரையில் பூரண செல்வகுமார் தலைமையில் 25/01 அன்று நடைபெற்ற நேரடிக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். அங்கு 20 புத்தகங்கள் விற்பனையாகின என்ற செய்தி கேள்விப்பட்டோம். மகிழ்ச்சி.