சில திக்ருகள் ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத் தரக்கூடிய நாவிற்கு எளிதான சில திக்ருகள் இந்த திக்ருகளை மொழிவதில் நம்முடைய நாவைத் திளைக்க செய்தால், ஏராளமான நன்மைகள் பெற்று மறுமை வாழ்வை வளமாக்கலாம். இறைவன் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக._ 1) சுப்ஹானல்லாஹ் (100 முறை) பொருள்: அல்லாஹ் தூயவன். சிறப்பு: ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன. நூல்: - முஸ்லிம் 5230 2) அல்ஹம்துலில்லாஹ் பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. சிறப்பு: (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். நூல் : - முஸ்லிம் 381 3) சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி பொருள்: அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. சிறப்பு: வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும். நூல்: - முஸ்லிம் 381 4) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (100 முறை) பொருள்: அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன். சிறப்பு: கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும். நூல்: - புஹாரி 6405 5) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன். சிறப்பு: நன்மை தீமை நிறுக்கப்படும் மீஜான் என்னும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை. நூல்: - புஹாரி 7563 6) அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன். சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன. நூல்: - முஸ்லிம் 1052 7) லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (100 முறை) பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். சிறப்பு: 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும். மேலும், 100 நன்மைகள் எழுதப்படும். 100 தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் இருக்கும். நூல்: - புஹாரி 3293 8) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ். பொருள்: இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப்புகழும், அவன் மிகப்பெரியவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும். நூல்: - முஸ்லிம் 1302 ➡ நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன். நூல்: - முஸ்லிம் 5272
@r.l.gkidsfashion45242 жыл бұрын
Jazakkallahu haira.
@MoideenMoideen-ng2pm Жыл бұрын
இது போதும்.அல்லாஹ் இது போதும்.முஹம்மது ரஸீன் Thank you.இறைவன் உங்களுக்கு மருமையில் சிறந்த இருப்பிடத்தை தரட்டும்.
@IbrahimIbrahim-sl8my Жыл бұрын
யா அல்லாஹ் நாங்கள் தனிமையிலும் உன்னைப்பற்றி பயந்து நடக்க கிருபை செய்வாயாக! பகிரங்கத்திலும் அந்தரங்கத்திலும் உண்மையாக இருக்க அருள் புரிவாயாக யா அல்லாஹ்! மறுமைநாளில் நன்மைகளை இழந்து விடாமல் இருக்க கிருபை செய்வாயாக யா அல்லாஹ்! 😭😭😭♥️♥️♥️🤲🤲🤲
@zaidhahamed80002 жыл бұрын
Subahaanallah allah emmai mannippaanaga 😪
@mohamednajeeb18652 жыл бұрын
அல்லாஹ் நம் குற்றங்களை மறைத்து மன்னித்து சொர்க்கத்தில் மேன்மையான இடத்தை அளிப்பானாக
இஸ்மாயில் புளியரை திருநல்வோலி தமிழ் நாடு சவுதியில் தம்மாம்
@mp.41753 жыл бұрын
kzbin.info/www/bejne/pp_Pg6Cgoa2ola8
@IslamicTamilDawah4 жыл бұрын
மறக்காமல் இந்த லிங்க் கிளிக் செய்து SUBSCRIBE செய்து கொள்ளவும் kzbin.info SUBSCRIBE செய்ய தெரியாதவர்கள் கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் kzbin.info/www/bejne/j3qTpmp5p7tonqc எங்கள் பயான்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழே உள்ள வாட்ஸாப்ப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள் !! WhatsApp Group : (ஆண்கள் மட்டும்) rebrand.ly/d36rmje
@fathimanagoor61552 жыл бұрын
ĎU
@jawharanoohu44633 жыл бұрын
L0p
@ibrahimmehardeen94293 жыл бұрын
This guy is rented by Jewish company, beware of him