சின்ன வயசா இருக்கும் பொழுது எங்க நகர்ல இருக்கும் கோவில புதுப் பெரியவா விஜயம் செய்த போது அவர் முன்னால வேத ஷூக்தங்கள் சொல்ல ஒரு சந்தர்பம் கிடைச்சு அவரோட அனுக்கிரகம் கிடைச்சது... அதுக்கப்புறம் சென்னைல 1990s நான் வேல பார்த்த பொழுது புதுப் பெரியவா மற்றும் பாலப் பெரியவா சேர்த்து தரிசனம் செஞ்ச மற்றொரு சந்தர்பம் கிடைச்சது. அதுக்கப்புறம் வெளிநாடு சென்று வேலைக்கு வந்ததால அடிக்கடி போகும் சந்தர்பமில்லாம இருந்தது... ஆனா பெரிய பெரியவாள தரிசனம் செய்ய சந்தர்பம் கிடைக்கல... 6-7 வருஷத்துக்கு முன்னால Experience with Maha Periyava என்று சிவராமன் சார் வெளியிட்ட பல வீடியோ youtubeல ராத்திரியான வழக்கமா பார்ப்பதுண்டு... ஒவ்வொரு நாளும் பெரிய பெரியவாளோட அனுக்கிரகம் கிடைக்கலையே என்று மனசுல ரொம்ப வருத்தம் இருந்தது. ஒரு நாள் அது போல ஒரு காணொளிய பார்த்துட்டு அது ரொம்பவே கூடி போய் அப்படியே நல்ல A/C காத்லு தூங்கி போய்ட்டேன்... அப்போ எனக்கு ஒரு சொப்பனம் வந்தது... காஞ்சி மடத்ல பெரியவாள பார்த்து தீர்த்த பிரசாதம் வாங்கிரதுக்கு பெரிய line இருக்கு... நானும் அந்த lineல நின்னின்டிருந்தேன்... என்னோட turn வந்ததுமே, பெரியவாள்ட்ட நான் சொன்னது.. நான் ஒரு புதுக் car வாங்கிண்டு உங்கள்ட்ட Car காண்பிச்சிட்டு பெரியவாள Carல உட்கார்த்தி வச்சி ஒரு Round அடிச்சிட்டிச்சு காட்ட ஆசப்பட்டு ஆசிர்வாதம் வாங்க நேர இங்க வந்திருக்கேன் என்று புழங்காங்கிதம் பட்டேன்... பெரியவாளும் Car சாவிய வாங்கிண்டு தன் பக்த்ல வச்சின்ட்டு... நான் வரேன்.. ஆனா எனக்கு நீ ஒன்னு வாங்கித் தரயா என்று பீடிகை போட்டா!!! நான் வரேன் என்று சொன்னவுடன் மனசு லேசாகி என்னவோ நான் காத்ல பரக்கர சந்தோஷம்... நீங்க என்ன கேட்டாலும் வாங்கித்தரேன் பெரியவா நான் சொன்னவுடன்... பெரியாவா சொன்னது... வேர ஒன்னுமில்ல... நான் பூஜ பண்ரதுக்கு ஒரு ராதே கிருஷ்னா விக்கிரகம் வாங்கித்தரிவியா!!! ஆஹா... கரும்பு தின்ன கூலியா என்று இரண்டு சந்தோஷம் அடஞ்சேன்... சரி பெரியவா என்னோட Car வாங்கோ நான் இப்பவே வாங்கி தந்துவிடுரேன் என்று சொல்லிட்டேன்... அதுக்கப்புரம் Car ஏறினாரா என்றெல்லாம் சொப்பனத்ல வர்ல... ஆனா கொஞ்ச தூரத்ல ஒரு Boutique காண்பிச்சு இங்கதான் இருக்கு என்று சோல்லி அந்த கடைக்குள் போனதும் பெரியவா ஒரு அரையடி உள்ள சிவப்பு மரத்தாலான ராதே கிருஷ்ணா விக்கிரகத்த காண்பிச்சா... அத வாங்கி கொடுத்துட்ட அந்த படி கட்டல கிழே இறங்கி வரும் பொழுது அங்கே ஒரு மாட்டு கொட்டாய்ல ஒரு பசு மாடும் கன்னும் நின்னிறன்டுருந்தது... அது பக்த்ல இரண்டு மூன்று பித்ல குடத்ல தண்ணி இருந்தத பார்த்துட்டு பெரியவா, பக்த்ல இருந்த பாலு மாமாட்ட கை காட்டி அத எடுத்து கொண்டு வா சைகைல காண்பிச்சா... நான் நினைச்சது பெரியவா என்க்கு தீர்த்த பிரசாதம் தான் கொடுக்கப் போரா என்று நினைச்சுகிண்டு நமஸ்காரம் பண்ணி முட்டி கால் போட்டுண்டு கைய குழிவா காண்பிச்சேன்... ஆனா அங்கு எனக்கு நினைச்சு பார்க்க முடியாத ஒன்ன பெரியவா பண்ணா... அது என்னவென்றால் பாலுமாமா கையில இருந்த குடத்த வாங்கி தண்ணிய அப்படியே என் தலைல கொட்டினார்... அதுக்கும் மேல பெரியவா வாயால சொன்னது... நீ பண்ண பாவம் எல்லாம் இத்தோட தொலஞ்சு போச்சுடா... என்று சொல்லி அனுக்கிரகம் செஞ்ச பொழுது திக்கு முக்காடி போய் இந்த லோகத்லதான் இருக்கோமா அல்லது தேவ லோகத்ல இருக்கோமா என்ற தெறியாமல் போனது... என்னோட உடம்ல தண்ணி பட்ட உணர்வு வந்ததும் சொப்பனம் கலைஞ்சு படுக்கை, போட்டிருந்த சட்டயெல்லாம் தொப்பலா நனைஞ்சிருக்கு... சரி வெட்கசூட்லதான் படுக்க சட்டயெல்லாம் நனைஞ்சிருக்கா பார்த்தா மேல AC full speedல சுத்திண்டிருக்கு... சரி பெரியவா தான் நேருலேய வந்து அனுகிரகம் பண்ணி இருக்கார் என்று பிரவி கடன் தீர்ந்தது போல இருந்தது... நான் மனசால பெரியவாள நேர்ல பார்த்து அனுக்கிரகம் வாங்கலயே என்று ஏங்கியதன் விளைவு... அதைக் காட்டிலும் 1000மடங்கு அனுக்கிரகத்த செஞ்சுட்டார்... பெரியவா இந்த இழி பிரவிகளாகிய நம்ம கரை சேக்கிரதுக்காவே இந்த பூலோகத்ல அவதாரம் எடுத்திருக்கார்... நம்பிக்க வச்சா தேடித் தேடி வந்து அனுகிரகம் செய்யரா... ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர... பெரியவா சரணம்... இந்த நிகழ்வுக்கிடையில் பெரியவா எனக்கு வேரொரு பாடமும் புகட்டினார்... மற்றொரு சந்தர்பத்ல அத பகிருகிரேன்...