எங்கள் அன்பு சகோதரன் குமரனே, குமரனின் குழுவினரே இலங்கையில் இருந்து கர்நாடகா வந்து வாசிக்கும் உங்களது புகழை பார்க்கும்போது உள்ளம் பூரிக்கிறது. திறமை ஒன்றே மனிதனை மேன்மையாக்கும். மென்மேலும் உலகம் முழுக்க உங்களது திறைமை பயன்படவேண்டும். இசை வழியாக தமிழன் பல்வேறு இனங்களுக்கிடையிலான உறவிற்கு பாலமாக அமைய வேண்டும். நாளைய மிகப்பெரிய நாதஸ்வர வரலாற்றை இன்று நாம் கண்குளிர காண கிடைத்த பாக்கியம் மிக பெரியது. இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. வாழ்க சகோதரர்களே!