இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்ட வன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி பற்று ஆசைகள் அற்றவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இறைவனையும் பக்தியையும் கடந்து ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் பார்வையில் பாபிகள் பேதம்கள் இல்லை இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.