"மெய்க்காட்டிட்ட படலம் (30) திருவிளையாடற்புராணம். கூடற்காண்டம்.

  Рет қаралды 102

Sivaya Nama

Sivaya Nama

Ай бұрын

மெய்யன்பன் ஒருவனுக்காகத் தெய்வமே வீரனாக வந்து நின்றதும் சேனை வெள்ளத்தைக் காட்டியதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் . சுந்தரசாமந்தனுக்கும் பாண்டியன் குண பூடணனுக்கும் நெருங்கிய உறவு மேலும் வளர்ந்தது. பொய்யை மெய்யாகக் காட்டிய இறைவன் திருவிளையாடல் அதனை நினைத்து இறைவன் பெருமையைப் பேசி மகிழ்ந்தனர்.
திருவிளையாடல் புராணம் பாடல். 1664
பாவம் என வடிவு எடுத்த படிற்று அமணர் பழித்து அழல் செய்
தேவ வரு மறப்பசுவை ஏறு உயர்த்தோன் விடை நந்திக்
காவலனை விடுத்து அழித்த கதை உரைத்தும் அட்டாலைச்
சேவகன் மெய்க் காட்டிட்டு விளையாடும் திறம் உரைப்பாம்.
பொருள்.
பாவம் என முடிவு எடுத்த படிற்று அமணர் -
பாவமே என்னும்படி வடிவந்தாங்கிய வஞ்சனையையுடைய
சமணர்கள், பழித்தழல் செய்து ஏவவரும் - பழி வேள்வி செய்து
(தோற்றுவித்து) ஏவ வந்த, மறப்பசுவை - கொலைத் தொழிலை
யுடைய பசுவினை, ஏறு உயர்த்தோன் - இடபக் கொடியுயர்த்திய
சோமசுந்தரக் கடவுள், விடை நந்திக் காவலனை விடுத்து அழித்த
கதை உரைத்தும் - இடபவுருவினையுடைய திரு நந்தியாகிய
காவலனை ஏவி வதைத்தருளிய திருவிளையாடலைக் கூறினோம்;
அட்டாலைச் சேவகன் - (இனி) அட்டாலைச் சேவகனாகிய
அவ்விறைவன், மெய்க்காட்டிட்டு விளையாடும் திறம் உரைப்பாம் -
மெய்க் காட்டிட்டு விளையாடின திருவிளையாடலைக் கூறுவோம்.

Пікірлер: 2
@raginik6957
@raginik6957 Ай бұрын
சிவாய நம
@sivayanama4665
@sivayanama4665 Ай бұрын
மெய்க் காட்டிட்ட படலம் (Mei Kaatita Padalam) இறைவரான சொக்கநாதர் தனது அடியவரான சுந்தர சாமந்தனுக்காக சேனை வீரராக வந்து படை பலத்தைக் காட்டியதை விளக்கிக் கூறுகிறது. சுந்தர சாமந்தனின் சிவத்தொண்டு, சொக்கநாதர் சிவகணங்களோடு பெரும்சேனைகளாக உருவெடுத்து மதுரைக்கு வந்து சுந்தர சாமந்தனின் துயரைப் போக்கியது பற்றி கூறுகிறது.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 15 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 41 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 22 МЛН
பஞ்ச புராணத்தில் முதல் பாடல்கள்
3:58
பழனி பக்தன்
Рет қаралды 41 М.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 15 МЛН