Рет қаралды 786
படித்ததில் பிடித்த கதை
முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சர்வரிடம் சாப்பாட்டின் விலை என்ன? என்று கேட்டார். சர்வர் சாப்பாடு 50 ரூபாய் என்றார். முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார். கொஞ்சம் குறைந்த சாப்பாடு இல் லையா? எனக் கேட்டார். எரிச்சலடைந்த சர்வர் பெருசு... தயிர் இல்லாம சாப்பிடுறியா? 45 ரூபாய் தான் என்றார். பெரியவர் சம்மதித்து சாப்பிட்டார். சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில் வைத்தபோது சர்வர் ஏளனமாக பார்த்தார். மீதி 5 ரூபாயை சர்வர் கொடுத்தபோது முதியவர் சொன்னார்... வெச்சிக்கோ... உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை என்று...