Рет қаралды 3,365,528
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
நண்டு ரசம்
தேவையானவை
நண்டு கால்கள் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
ஒரு முழு பூண்டு
ரசப் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, எண்ணெய் - தாளிக்க
செய்யும் முறை
நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து அம்மிக் குழவி அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பூண்டையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை ரசத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
புளிக் கரைசலில், ரசப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, தட்டி வைத்திருக்கும் நண்டு கால்கள், பூண்டு விழுது ஆகியவற்றைப் போடவும்.
ரசத்தை தாளித்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
நண்டு வெந்து, ரசம் கொதித்ததும் கொத்துமல்லி, கறிவேப்பிலை தழைகளைப் போட்டு இறக்கவும்.
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
#KATRATHUKAIALAVU