சுண்ணாவைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காகத்தான் இமாமகள் முரண்பட்டார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் ஒரு இமாமுக்கு கிடைத்த ஹதீஸ் மற்ற இமாமுக்குக் கிடைக்காததால் முரண்பட்டதாக இவர் சொல்கின்றார் - kzbin.info/www/bejne/kJDTkGRpiZeNnKs
@jafarullah72 Жыл бұрын
குர்ஆன் சுன்னாவில் , , , , நான்கு மத்ஹப்கள் ஏன் ? வந்தது என்று கேட்பதே குழப்பம் விளைவிக்கும் செயல் மத்ஹப் என்பது தமிழ் வார்த்தை இல்லையே , , . குர்ஆன் சுன்னாவில் நான்கு விளக்கம் ஏன் ? வந்தது என்று திருத்தவும்
@s.mohameds.mohamed48136 ай бұрын
நான்கு இமாம்களின் எச்சரிக்கைகள்! 1 - இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்) கூறுகிறார்கள்: اذا صح الحديث فهو مذهي ஹதீஸ் சஹீஹாக (அதாரப்பூர்வமாக) கிடைக்கும் போது அதை பின்பற்றுவதே எனது வழியாகும். (ஆதாரம்: ஹாஷியா இப்னுல் ஆபிதீன், பாகம் 1, பக்கம் 63, ரஸமுல் முப்தீ பாகம் 1, பக்கம் 4, ஈகாழுல் ஹிமம் பக்கம் 62 )
@s.mohameds.mohamed48136 ай бұрын
2 - இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: إنما أنا بشر أخطيء و أصيب فانظروا في رأيي فكل ما وافق الكتاب و السنة فخذوه و كل ما لم يوافق الكتاب و السنة فاتركوه 1.நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய சராசரி மனிதன்தான். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள், குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள். (ஆதாரம்: ஜாமிவு இப்னி அப்தில்பர்- பாகம் 2 பக்கம் 42, உஸூனுல் அஹ்காம்-பாகம் 6 பக்கம் 149, ஈகாழுல் ஹிமம்-பக்கம் 62 ) ليس أحد بعد النبي صلى الله عليه و سلم إلا و يؤخذ من قوله و يترك إلا النبي 2.நபி (ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும், எடுக்கத்தக்கவையும் உண்டு, விடப்படக்கூடியவையும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் சொல் மட்டுமே முற்றாக பின்பற்றப் பட வேண்டியவை. (ஆதாரம்: இர்ஷாதுஸ்ஸாலிக்-பாகம் 1 பக்கம் 227, ஜாமிவு இப்னி அப்தில்பர்-பாகம் 2 பக்கம் 91, உஸூலுல் அஹ்காம்- பாகம் 6 பக்கம் 145 ) (இதே வார்த்தையை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக இமாம் தகியுத்தீன் சுபக்கீ அவர்கள் தனது ‘ஃபதாவா‘வின் பாகம் 1 பக்கம் 148-ல் குறிப்பிடுகிறார்கள் )
@s.mohameds.mohamed48136 ай бұрын
3 - இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள் ما من أحد إلا و تذهب عليه سنة لرسول الله صلى الله عليه وسلم و تعزب عنه فمهما قلت من قول أو أصلت من أصل فيه عن رسول الله صلى الله عليه و سلم خلاف ما قلت فالقول ما قال رسول الله صلى الله عليه و سلم و هو قولي 1.எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனம் (சில) தவறி விடத்தான் செய்யும், நான் ஏதேனம் ஒரு சொல்லைச் சொல்லும் பொது அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத்தரும்போது. அல்லாஹ்வின்திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால்,ரசூல் (ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையாகும் ( ஆதாரம்: தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3 பக்கம் 15, ஈகாழுல் ஹிமம் பக்கம் 100 ) أجمع المسلمون على أن من استبان له سنة عن رسول الله صلى الله عليه و سلم لم يحل له أن يدعها لقول أحد 2.ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை என்று முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்து ஏற்றுள்ளனர் (ஆதாரம்: ஈகாழுல் ஹிமம் பக்கம் 68 ) إذا وجدتم في كتابي خلاف سنة رسول الله صلى الله عليه و سلم فقولوا بسنة رسول الله صلى الله عليه و سلم و دعوا ما قلت ‘وفي رواية‘ فاتبعوها و لا تلتفوا إلى قول أحد 3.எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துக்கு மாற்றமானதைக் கண்டால் ரசூலுடைய சுன்னத்தையே (மக்களிடம்) சொல்லுங்கள், என் கூற்றை விட்டு விடுங்கள் (ஆதாரம்: அல்மஜ்மூவு (நவவீ) பாகம் 1 பக்ககம் 63, இப்னு அஸாகிh 9,10,15, ஈகாழுல்ஹிமம் பக்கம் 706, அல் இஹ்திஜாஜ் பகாம் 2 ) اذا صح الحديث فهو مذهي 4.ஆதரப்பூர்வமான ஹதீஸ் இருக்கும்போது அதைப் பின்பற்றுவதே எனது வழி (ஆதாரம்: அல்மஜ்மூவு (நவவீ) பாகம் 1 பக்கம் 63, மீஸான் ஷஃரானி பாகம் 1 பக்கம் 57, ஈகாழுல் ஹிமம் பக்கம் 107 ) (இதை நான்கு இமாம்களும் கூறியதாக இமாம் இப்னு ஹஸ்மு அவர்களின்கூற்றை இமாம் ஷஃரானி பாகம் 1பக்கம் 57-ல் குறிப்பிடுகிறார்கள்)
@s.mohameds.mohamed48136 ай бұрын
4 - இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள். لا تقلدني و لا تقلد مالكا و لا الشافعي و لا الوزعي و لا الثوري و خذ من حيث أخذوا என்னையோ, மாலிக், ஷாஃபியீ,அவ்ஸாயீ, ஸவ்ரீ (போன்ற இமாம்களையோ) பின்பற்றாதே,அவர்கள் எதிலிருந்து எடுத்துக் கொண்டார்களோ அதையே (அந்த குர்ஆன், ஹதீஸிலிருந்து) நீயும் எடுத்துக்கொள்) (ஆதாரம்: ஈகாழுல் ஹிமம் பக்கம் 113 ) رأي الأوزعي و رأي مالك و رأي أبي حنيفة كله رأي و هو عندي سواء و إنما الحجة في الاثار அபூ ஹனீஃபா, மாலிக், அவ்ஜாயீ ஆகியோரின் கருத்துகள் அவர்களின் அபிப்பிராயமே, உண்மையான ஆதாரம் நபி தோழர்களின் சரியான அறிவிப்பில்தான் உண்டு (ஆதாரம்: ஜாமிவு இப்னி அப்தில்பர் பாகம் 2 பக்கம் 149 ) من رد حديث رسول الله صلى الله عليه و سلم فهود على شفا هلكة நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை நிராகரிப்பவன் அழிவின் விளிம்பிலே இருக்கிறான் (ஆதாரம்: இப்னுல் ஜவ்ஸி பக்கம் 182, 30-32 )
@jafarullah725 ай бұрын
பல ஹதீஸ்களை எடுத்துக் காட்டியுள்ளீர்கள் , , , , ஹதீஸை ஒருபோதும் நிராகரிக்கவே மாட்டோம் , , , , ஹதீஸூக்கான உங்களுடைய விளக்கத்தை தான் நிராகரிக்கிறோம் , , , ஹதீஸூக்கான மத்ஹப் இமாம்களின் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோம் அவ்வளவு தான்