ஹரே கிருஷ்ணா. மிகவும் அருமை. தமிழ் உபன்யாசங்களை அதிக வரவேற்கின்றோம்
@jeanveldurai609915 сағат бұрын
🙏🙏🙏 HARE KRISHNA 💙 DANDAWAD PRANAM PRABU JI 💙 ❤️ ♥️
@sriramj.87443 сағат бұрын
கடவுள் மறுப்பாளர்கள் விஞ்ஞானம் கூறுவதை மட்டும் ஏற்பதை பார்க்க முடிகிறது🎉
@ramamanibalaji63432 күн бұрын
தெளிவான உபன்யாசம்! நன்றி! தமிழில் உபன்யாசம் இயற்கையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் அது அன்னியமாகப் படுகிறது. இது என் கருத்து. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது கட்டாயமில்லை.
@mallikarjunan27062 күн бұрын
Awesome lecture prahu, I wish god shows mercy to everyone by creating opportunity to listen to this podcast. Hare Krishna!
@dawagiammah-pm4os2 күн бұрын
🙏👌👍
@sudhakarmercy29312 күн бұрын
உபன்யாசம் அருமையாக இருந்தது அண்ணா. மீண்டும் தமிழில் இதுபோன்று உபன்யாசம் செய்யவும். ஆங்கிலம் வேண்டாம் அண்ணா.
@kavic19822 күн бұрын
Thankyou very much swamy
@sundaramramasamy67279 сағат бұрын
ஒரு ‘இம்மி’ அளவேயான ஆன்மாதான் இங்கு பிறவி எடுத்துள்ளது!உனக்கு உரிமையானது அந்த ‘இம்மி’ அளவேயான ஆன்மா மாத்திரம்தான்!இந்த உடம்புக்கூட உனது உரிமை அல்ல!இந்த உடலை சுற்றியுள்ள எந்த வஸ்துவும் உனதல்ல!எந்த வஸ்துவுக்கும் நீ உரிமை கொண்டாடவும் முடியாது!இந்த நிதர்சன உண்மை நிலையை நீ உணராமல் நீ எதை எதையெல்லாம் உனது உடமை என்று எண்ணிக்கொண்டு சேர்த்து வைத்திருக்கிறாயோ அதுவே உனது தீவினை கர்ம சொத்து ஆகும்! இதுவே கர்மா என்பதன் விளக்கம்!ஆன்மாவைத்தவிர ஏனைய அனைத்தையும் என்றைக்கு நீயாக முன் வந்து துறக்கிறாயோ அன்றுதான் உனது ஆன்மாவிற்கு விடுதலை!
@sundaramramasamy67279 сағат бұрын
மனிதப்பிறவியான நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆன்மாவிற்குரிய வாழ்க்கையா?இந்த உடலுக்கான வாழ்க்கையா?இந்த உடலுக்கான வாழ்க்கைதான் என்றால் ஒரு சமயத்தில் இந்த உடலை நாம் உகுத்துவிட்டு வேறு ஒரு உடல் எடுத்துக்கொள்கிறோம்!வேறு ஒரு உடலை எடுத்த பின் இந்த உடலுக்கான வாழ்க்கையில் நாம் வந்து கலந்துக்கொள்ள முடிகிறதா?இந்த உடலுக்கான வாழ்க்கை இந்த உடலோடு போயிற்று அடுத்த உடலுக்கான வாழ்க்கை அந்த உடலோடு போகப்போகிறது!அப்படியெனில் இந்த வாழ்க்கை உடலுக்கான வாழ்க்கையாக இல்லை என்பது நிரூபணமாகிறது! இந்த உடலை எடுத்து இந்த உடலைக்கொண்டு பலவிதமான அனுபவங்களைப்பெற்று வாழ்ந்துவிட்டு ஒரு நாள் இந்த உடலை உதறிவிடுகின்றது ஆன்மா!ஆன்மாவிற்குத்தான் நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கின்றது!இந்த ஆன்மா பல்லாயிரம் பிறவிகளை எடுத்து இளைத்துவிட்டது என்று முன்னோர்கள் பாடி வைத்துள்ளனர்! புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்! என்பதனால் அறிக. உயிர்கள் இத்தனை வகைப் பிறப்புகளை எடுத்து உழல்கின்றன என்பதை விளக்க, "பிறந்து இளைத்தேன்," என்றார்.இவற்றால் உயிர்களின் பிறப்பு வகைகள் கூறப்பட்டன. இப்பொழுது நமக்கு ஐயம் திரிபற நாம் வாழ்வது ஆன்மாவிற்கான வாழ்வே அன்றி இந்த உடம்புக்கான வாழ்வு அல்ல என்பது விளக்கம் ஆகிவிட்டது!
@sundaramramasamy67279 сағат бұрын
இந்த "நான் "என்கிற தனித்தன்மை உணர்வும் இந்த உடலுக்கோ,மனத்திற்கோ சொந்தமானதல்ல அது ஆன்மாவிற்கே உரித்தானது என்பதனை ஸ்ரீ ரமண மஹரிஷி அவர்கள் நான்யார்?என்கிற பகுப்பாய்வு செய்து விளக்கியுள்ளார்! தவிரவும் நிறைய ஆன்றோர்கள்,சான்றோர்கள் மனிதப்பிறவி என்பது மிக மிக முக்கியமான பிறவி!தேவர்கள் விரும்பினாலும் கூட கிடைக்க அறிய பிறவி என்று சொல்கின்றனர்!அப்படி எனில் இந்த மனிதப்பிறவியின் மகத்துவத்தை தீர ஆராய்ந்து அறிந்துக்கொள்ளுங்கள்! இப்படிப்பட்ட மிகவும் மகத்தான இந்த மனிதப்பிறவியில் இங்கு நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம்?நமக்கான வாழ்க்கை ஆன்மாவிற்கானதா?இந்த தேகத்திற்கானதா?என்றுக்கூட அறியாமல் இந்த தேக இச்சைகளுக்காக பிரம்ம பிரயத்தனங்கள் செய்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம்!இந்த அவலத்தையும் நமது முன்னோர் ஒரு பாடலில் சொல்லியுள்ளனர்! நாப்பிளக்க பொய் பேசி நவதிரயம் தேடி நலமொன்றும் இல்லாத நாரியரைக்கூடி பூப்பிடிக்க வருகின்ற புற்றீசல்போல பொலபொலன கலகலென புதல்வர்களை பெறுவீர் காப்பாற்ற வழியறியீர் கை விடவும் மாட்டீர் கவர் பிளந்த மரத்துளையில் வால் நுழைத்துக்கொண்டே ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப்போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே! இந்த உடலை நான் என்றும் இந்த மனதை நான் என்றும் கருதி வாழும் வாழ்க்கை இந்த உடலோடு மடிந்து போகும்!இந்த வாழ்க்கை ஆன்மாவிற்கானது என்பதனை அறிந்து இந்த ஆன்மாவை பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தவும்,இந்த ஆன்விற்கு உரிமையாளர் சாட்சாத் அந்த பேரான்மாவான இறைவனே என்றும்,இந்த நான் எனும் அகங்காரத்திற்கும் உரிமையாளன் அந்த இறைவனே என்றும் மனப்பூர்வமாக உணர்ந்து அந்த இறை சக்தியின் பாத திருக்கமலத்தில் நம்மை சரண் செய்து இறைவன் கொடுக்கிற வாழ்க்கையை வாழ்ந்து இனிதே இருப்போமாக!