#நாடா

  Рет қаралды 4,553

Meera Ramesh

Meera Ramesh

Күн бұрын

Ragam: Shanmukhapriya
Angha Talam: sankeerna chapu- 4 1/2 aksharas (2, 1 1/2, 1)
Sthalam: Chidambaram
Music by A S Raghavan guruji
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி ...... வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன ...... தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை ...... யருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
தோழா கடப்பமல ...... ரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு ...... மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.
nAdA piRappumudi yAthO venakkaruthi
nAyE naratrumozhi ...... vinaiyAyin
nAthA thiruchchabaiyi nERAthu chiththamena
nAlA vakaikkumuna ...... tharuLpEsi
vAdA malarppathavi thAthA enakkuzhaRi
vAypA RiniRkumenai ...... aruLkUra
vArAy manakkavalai theerAy ninaiththozhuthu
vArE nenakkethirmun ...... varavENum
chUdA maNippirabai rUpA ganaththavari
thOlA sanaththiyumai ...... yaruLbAlA
thUyA thuthiththavargaL nEyA vemakkamirtha
thOzhA kadappamala ...... raNivOnE
EdAr kuzhaRchurupi gnAnA thanaththimigu
mErAL kuRaththithiru ...... maNavALA
eecA thanippulisai vAzhvE surarththiraLai
eedERa vaiththapugazh ...... perumALE.

Пікірлер: 32
@rajendrand8313
@rajendrand8313 4 ай бұрын
உருகி ஓடும் பனிமலை... இவர் உணர்ந்து பாடும் இசைக்கலை.. அரிய மாயம் செய்ததோ... நெஞ்சில். அமுத மழைதான் பெய்ததோ. சண்முக ப்ரிய ராகமே... கவின். தமிழைத் தழுவும் மோகமே.. தாள லயத்தில் ஆடுமே... என் தனிமை இனிமை ஆகுமே. கனிந்து மிளிரும் பாவனை... பாடும் காரிகை செய் சாதனை.. நனைந்த மேக ஊர்வலம்... ராகம் நலுங்கு வைக்கும் மோகனம். விருத்தம் இங்கே பாடலா... நெஞ்சை உருக்கும் இசையின் தூவலா.. பொருத்தம் இவர்க்கே ஆனது... தெய்வப். பொலிவில் பாடல் மின்னுது. வெண்பா....... தண்மை மிகுசண் முகப்பிரிய ராகத்தின்.. உண்மை உருவம் கிளர்ந்தொளிர..... மென்மை.. குழைந்தூறப் பாடும்பூங் கோதையார் நாவில்.. வழங்கோசை வையம் பெறும். முருகா சரணம்.
@meeraramesh5165
@meeraramesh5165 4 ай бұрын
அருமையான கவிச் சித்திரம் அய்யா.. மிக்க நன்றி☺️
@sgomathisundari4207
@sgomathisundari4207 Күн бұрын
அருமை🙏🙏🙏
@sundarimanimurugan1077
@sundarimanimurugan1077 4 ай бұрын
மனத்தை உருக்கும் கந்தர் அலங்காரப் பாடலுடன் புலிசை வாழ் முருகனிடம் வாராய் , மனக்கவலை தீர்த்து வாடாமலர்ப் பதவி தந்நு அருள் புரிய வேண்டும் என்றிறைஞ்சும் இப்பாடல் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. நன்றி. ❤🙏🏻🌷
@meeraramesh5165
@meeraramesh5165 4 ай бұрын
நன்றி அம்மா🙏
@bavanisundar5022
@bavanisundar5022 4 ай бұрын
Very nice🎉🎉Muruga Sharanam 🙏
@balasingamthujayanthan1289
@balasingamthujayanthan1289 4 ай бұрын
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி நாயே னரற்றுமொழி ...... வினையாயின் நாதா திருச்சபையி னேறாது சித்தமென நாலா வகைக்குமுன ...... தருள்பேசி வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும் சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி தோலா சனத்தியுமை ...... யருள்பாலா தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த தோழா கடப்பமல ...... ரணிவோனே ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு மேராள் குறத்திதிரு ...... மணவாளா ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நாடா ... நாடித் தேடி ஆராய்ந்து பார்த்து, பிறப்புமுடி யாதோ வெனக்கருதி ... இந்தப் பிறவித் தொழிலுக்கு முடிவே கிடையாதோ என்று எண்ணி, நாயேன் அரற்றுமொழி ... அடியேன் ஓலமிட்டு அலறும் இந்த மொழி, வினையாயின் ... என் முற்பிறவி வினையின் காரணத்தால், நாதா திருச்சபையி னேறாது சித்தமென ... நாதனே, உன் திருச் சந்நிதியிலோ உன் மனத்திலோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை யான் உணர்ந்து, நாலா வகைக்கும் உனது அருள்பேசி ... பலவிதமாக உன்னுடைய திருவருளின் பெருமையே பேசி, வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி ... என்றும் வாடாத உனது திருவடி மலர் என்னும் முக்தியைக் கொடுத்தருள் கொடுத்தருள் என்று குழறி, வாய்பாறி நிற்குமெனை ... வாய் கிழிபட்டு நிற்கும் எனக்கு அருள்கூர வாராய் ... உன் கிருபை கூடும்படி வந்தருள்வாயாக, மனக்கவலை தீராய் ... என் மனத்துயரங்களெல்லாம் தீர்ப்பாயாக, நினைத்தொழுது வாரேன் எனக்கு ... உன்னைத் தொழுது வருதல் என்பதே இல்லாத எனக்கும் எதிர் முன்வரவேணும் ... நேர் எதிரிலே முன்பு எழுந்தருளி வர வேண்டுகிறேன். சூடா மணிப்பிரபை ரூபா ... தெய்வமணியின் ஒளி விளங்கும் உருவத்தாளும், கனத்த அரி தோல் ஆசனத்தி ... பெருமை வாய்ந்த சிங்கத்தின் தோலை ஆசனமாகக் கொண்டவளும் ஆகிய உமை அருள்பாலா ... உமாதேவி பார்வதி அருளிய குழந்தையே, தூயா துதித்தவர்கள் நேயா ... பரிசுத்த மூர்த்தியே, துதித்து வணங்குபவர்களின் நேயனே, எமக்கமிர்த தோழா ... அடியேனுக்கு அமிர்தம் போல் வாய்த்த அருமைத் தோழனே, கடப்பமலர் அணிவோனே ... கடப்ப மலரினை அணிபவனே, ஏடார் குழற்சுருபி ... மலர் நிறைந்த கூந்தலை உடைய வடிவழகியும், ஞான ஆதனத்தி ... ஞானம் என்ற ஆசனத்தை (பீடத்தை) உடையவளும், மிகு மேராள் ... மிக்க கம்பீரமானவளும் ஆன குறத்தி திரு மணவாளா ... குறமகள் வள்ளியின் அழகிய கணவனே, ஈசா தனிப்புலிசை வாழ்வே ... ஈசனே, ஒப்பற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழ்கின்ற செல்வமே, சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் பெருமாளே. ... தேவர் கூட்டத்தை வாழ்விக்கச் செய்த புகழ் கொண்ட பெருமாளே.
@manivannanmeenakshi
@manivannanmeenakshi 4 ай бұрын
மிகவும் அருமை. அற்புதம். தெய்வீக ராகம். ஆரம்ப கீர்த்தனை நல்லதொரு வைப்ரேஷன் தரும் வண்ணம் உள்ளது. மிக்க நன்றி 🙏🙏
@jayanthiprasath4921
@jayanthiprasath4921 4 ай бұрын
Muruga Sharanam 🙏🙏🙏👌👌👌 Divine singing , explantion 👌👌👌🙏🙏🙏
@mlkrishnamoorthi7677
@mlkrishnamoorthi7677 4 ай бұрын
Very blessed to hear beautiful rendition of shanmugapriya ragam . Very divine 😢 Muruga Saranam 🙏
@balasingamthujayanthan1289
@balasingamthujayanthan1289 4 ай бұрын
அருமை எல்லா புகழும் இறைவனுக்கே
@Mangalamnurani
@Mangalamnurani Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rangaparthasarathy2874
@rangaparthasarathy2874 4 ай бұрын
Wonderful Amma Ennum 100 andugal irunthu anaithu Thirupugalaiyey Nee padavendum amma Prof. Ranganathan Parthasarathy USA
@meeraramesh5165
@meeraramesh5165 4 ай бұрын
Yes sir.. I really wish and pray that I should do all thiruppugazhls alankarams andhadhi vrittams in this janma.. praptham irundaal nadakkum.. seeking Murugan Arul and guru Arul thank u ☺️🙏
@rangaparthasarathy2874
@rangaparthasarathy2874 4 ай бұрын
@@meeraramesh5165 Nitchayam Nadakum En Kanmani Theivamey
@banubalachandran8375
@banubalachandran8375 4 ай бұрын
Amazing. Full package of a divine presentation. Muruga charanam.
@SunithaRupesh
@SunithaRupesh 4 ай бұрын
Muruga Sharanam mam💐🙏🏻Super 🫶🏻Awesome ❤️🙏🏻
@subhalakshmik.s2373
@subhalakshmik.s2373 4 ай бұрын
Awesome!!Ma'm👌👏👏🙏😍💐 Muruga Sharanam
@narthaniananthakrishnan751
@narthaniananthakrishnan751 4 ай бұрын
மீதமிருக்கும் எல்லாபாடலூமே ஒன்னொன்றாக பாடிதாருங்கள்
@narthaniananthakrishnan751
@narthaniananthakrishnan751 4 ай бұрын
Rombha அருமை❤🙏🏻🙏🏻
@rajendrand8313
@rajendrand8313 4 ай бұрын
வாராவாரம் மெருகுகூடுகிறது. ஆம்.. இன்று நீங்கள் பாடிய கந்தரலங்காரப் பாடல்கள் தேன்மழையேதான். செந்தமிழ்ப் பாடல்தான் தேன்மழை ஆனதோ... என்று பாடுவதுதான் பாக்கி. அப்புறம் பாடும்பாவனை... அற்புதம்.. அதன்அழகை சொல்லால் விளக்கமுடியாது. நொந்து.. நொந்து.. இங்கே... அப்பா... யாருக்கும் தோன்றவில்லையே.. இந்தக் கற்பனை. அத்தனைக்கும் ஆதாரமாய் அமைந்தது குரலினிமை. கொட்டிக்கிழங்கு விற்கும் பெண்ணின் குரலினிமையை வியந்து பாராட்டுவானே அம்பிகாபதி.. வழங்கோசை வையம் பெறும்... என்று. அது நூற்றுக்கு நூறு உங்களுக்கும் பொருந்தும் எனத்தோன்றியது. அதன்விளைவாக எழுந்த வெண்பாப்பாடலை கமென்ட்கவிதைக்குக் கீழே கொடுத்திருக்கிறேன். முருகா சரணம்.
@meeraramesh5165
@meeraramesh5165 4 ай бұрын
நன்றி அய்யா😊🙏
@gauthamanandh8194
@gauthamanandh8194 4 ай бұрын
🙏🏾
@rameshsankaran6780
@rameshsankaran6780 4 ай бұрын
ஆஹா ஆஹா
@lalitharajagopal3575
@lalitharajagopal3575 4 ай бұрын
We have blessed to hear this song. Nice explanation. Murugha Sharanam.
@kannang1553
@kannang1553 4 ай бұрын
நன்றி!
@jayasankarmridangam9797
@jayasankarmridangam9797 4 ай бұрын
Great....!!!
@ramaranishankar54
@ramaranishankar54 4 ай бұрын
Awesome
@Shanthisubramanian549
@Shanthisubramanian549 18 күн бұрын
முருகா சரணம்! மிகவும் அருமை அம்மா கந்தர் அலங்காரம் ஒவ்வொன்றாக டெலிகிராமில் கற்றுத் தர முடியுமா அம்மா
@meeraramesh5165
@meeraramesh5165 18 күн бұрын
It’s manodharma can’t teach like thiruppugazhl
@Shanthisubramanian549
@Shanthisubramanian549 18 күн бұрын
@@meeraramesh5165 முருகா சரணம் அம்மா திருவடி சரணம்
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 17 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,7 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
Suprabatham | Tamil Devotional | Full Length | Traditional
53:31
Bakthi FM
Рет қаралды 15 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 17 МЛН