Рет қаралды 644,946
#whatittakes #vilvahstore #vilvahkruthikainterview #vilvahgoatmilkshampoo #bestskincareproducts #besthaircareproducts #successfulbusinessstories #successstoriesintamil @VilvahStore
’வில்வா’ என்ற ஒற்றை நிறுவனம் மூலம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கிருத்திகா. சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கிருத்திகா, வில்வா என்ற தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க முக்கிய காரணம், அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அவரது தாயார்தான்.
தனது தாயார் தோல் தொடர்பான பிரச்னைகளை சந்தித்து வந்துள்ளதை சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்துள்ளார் கிருத்திகா. அதற்காக பல்வேறு மருந்துகளையும் அவரது தாயார் எடுத்துள்ளார். ஆனால், இந்த மருந்துகள் பின்னாளில் அவரது சிறுநீரகத்தை பாதித்துள்ளது. தோல் பிரச்னைகளால் அவதிக்குள்ளான தனது தாயாரின் வலியே கிருத்திகாவிற்கு தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதுவே பின்னாளில் வில்வாவாகவும் உருவெடுத்துள்ளது.
சாதாரண இல்லத்தரசியாக வீட்டிலேயே, சோப்புகளை தயாரித்து இணையவழி வியாபாரத்தைத் தொடங்கிய கிருத்திகா, பின்னர் 1500 சதுர அடியில் சிறிய நிறுவனமாகத் தொடங்கி இன்று 30,000 சதுர அடியில் பெரும் லாபம் ஈட்டும் நிறுவனமாக, 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கும் நிறுவனமாக வில்வாவை வளர்த்துள்ளார். இந்தியாவின் முதல் பால் சார்ந்த தோல் மற்றும் முடி பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரை பெற்று, புகழின் உச்சியில் இருந்தாலும், மகளின் சாதனையை பார்க்க தனது தாயார் இல்லையே என்ற வருத்தமும் கிருத்திகாவின் மனதில் இன்றும் இருக்கிறது.
Sultan Refai Success Story - • "வெறும் 9 ரூபாய்க்கு D...
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.