Рет қаралды 25,345
சுத்தம் என்பது அழகை சார்ந்தது மட்டும் அல்ல.
நோயில்லாத அறிகுறியும் கூட. ஏனெனில் விரல் நகங்களை கொண்டே என்னவிதமான பிரச்சனைகள் என்பதை கண்டறிந்துவிட முடியும் என்பதால் நகப்பராமரிப்பின் மூலம் நோய் அறிகுறிகளையும் கண்டறிந்துவிட முடியும்.
இதனால் கால் ஆணி, கால்களில் பூஞ்சை தொற்று, கிருமிகள் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் மூலம் நோய் வராமல் தவிர்க்கலாம். கிருமிகளை அவ்வபோது சுத்தம் செய்து வந்தாலே அவை தங்காமல் வெளியேறிவிடும். பாதங்களும் பளிச்சிடும்.
தொற்றுக்கிருமிகள் அண்டாது
உடல் சுத்தமாக இருந்தால் நோய்க்கிருமிகள் அண்டாது என்று சொல்வார்கள். அதே போன்று உடலினுள் கிருமிகளும் நகங்கள் வழியாகவே செல்கிறது. இது கைவிரல் நகங்களுக்கு மட்டும் அல்லாமல் கால்விரல் நகங்களுக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு முறை பெடிக்யூர் செய்யும் போது நகங்களை சுத்தம் செய்கிறோம். நகங்களை சீராக வெட்டி விடுகிறோம். விரல் நகங்களைச் சுற்றிலும் சுத்தம் செய்கிறோம். விரல் நகங்கள் வழியாக தொற்று நோய் வரும் அபாயத்தை பெருமளவு நீக்குகிறது பெடிக்யூர் சிகிச்சை. கால் பாதங்களில் அழுக்கை நீக்கி சுத்தமாக வைத்திருப்பதால் பூஞ்சை தொற்று நேராமல் காக்கிறது.
இறந்த செல்களை அகற்ற உதவுகிறது
சருமத்தில் இருக்கும் செல்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு இறந்து புதிய செல்களை உண்டாக்கும். இறந்த செல்கள் அவ்வபோது வெளியேற்றிவிட்டால் சருமம் பொலிவடையும். இது முகத்துக்கு மட்டும் அல்ல உடல் சருமம் முழுவதுக்கும் பொருந்தும்.
பெடிக்யூர் செய்யும் போது பாதங்களை ஸ்கரப் செய்கிறொம். இதனால் இறந்த செல்கள் வெளியேற்றப்படுகிறது. பாதங்கள் கடினமாக இல்லாமல் மென்மையாகிறது. ரத்த ஓட்டம் தடையின்றி செல்கிறது ஒவ்வொரு முறை பெடிக்யூர் செய்யும் போதும் இறந்த செல்கள் அழிவதால் பாதங்கள் மென்மையாகிறது. இறந்த செல்கள் பாதங்களில் இருந்தால் கால்கள் கடினமாவதோடு வலியை உண்டாக்கும். பாதங்கள் நடக்கும் போது அதிக கனமாவது போன்று இருக்கும்
வெடிப்பு இல்லாமல் பாதுகாக்கிறது.
பாதங்களில் வெடிப்பு ஏற்பட காரணம் கால்கள் வறண்டிருப்பதால் தான். கால்களுக்கு ஈரப்பதம் குறையும் போது வறண்டு, கொப்புளங்கள் உண்டாகி, விரிசல் போன்றவற்றை உண்டாக்குகிறது.
பெடிக்யூர் செய்வதால் கால் பாதங்களுக்கு போதுமான ஈரப்பதமும் உரிய பராமரிப்பும் கிடைக்கிறது. இதனால் குதிகால் வெடிப்பு, வறட்சி, வெண்மையான தோல் போன்ற பிரச்சனையின்றி பாதங்கள் அழகாக பாதுகாக்கப்படுகிறது.
மன இறுக்கத்தை போக்குகிறது
எப்போதும் பணி என்று இருக்கும் சூழலில் மனதில் அமைதி தேவை. பெடிக்யூர் செய்யும் போது பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஊறவைப்பதுண்டு. இதை செய்யும் போது நல்ல ரிலாக்ஸ் உணர்வீர்கள், மன அழுத்தம் குறைவதையும் நன்றாகவே உணரமுடியும். கால்களில் மசாஜ் செய்யும் போது இறுக்கம் குறைந்து , ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
Chennai azhagi beauty academy
9944324045
முகம் பளபளக்க இயற்கை பானங்கள்! ட்ரை பண்ணுங்க நிச்சயம் ஜொலிப்பீங்க!
இவ்வளவு பயன்கள் கிடைக்கும் போது பெடிக்யூர் செய்வதை தொடர்ந்து செய்யலாம்.