No video

Rudrashtakam Tamil - ருத்ராஷ்டகம் தமிழ் - Rudhrashtakam

  Рет қаралды 18,958

sunsoft30

sunsoft30

5 жыл бұрын

ஸ்ரீ ருத்ராஷ்டகம்
You can download slogam pdf: drive.google.com/file/d/1XBQb...
You can download meaning pdf: drive.google.com/file/d/1zPr-...
நமாமீ ஸ மீஸாந நிர்வாண ரூபம் விபும் வ்யாபகம் ப்ரஹ்ம வேதஸ்வரூபம் |
நிஜம் நிர்குணம் நிர்விகல்பம் நிரீஹம் சிதா காஸ மாகாஸ வாஸம் பஜேஹம் 1
1. எல்லோருக்கும் தலைவரும், மோக்ஷ ஸ்வரூபரும், மேலானவரும், எங்கும் வியாபித்திருப்பவரும், பிரம்மஸ்வரூபரும், வேதமே உருவானவரும், ஈசானன் என்ற பெயருடைய வருமான சிவபெருமானை நான் நமஸ்காரம் செய்கின்றேன். ஸத்தியதுவம், குணங்களுக்கு அப்பாற்பட்டவரும், வேறுபாடுகள் அற்றவரும். இச்சைகள் அற்றவரும் ஞானகாய வடிவானவரும், ஆகாயத்தை ஆடையாகவுடையவருமான ஈசனை நான் பஜிக்கின்றேன். (பஜித்தல் - ஸேவைசெய்தல், வழிபடுதல்).
நிராகார மோங்கார மூலம் துரீயம் கிராஜ் ஞாந கோதீத மீஸம் கிரீஸம்|
கராலம் மஹா கால காலம் க்ருபாலம் குணாகார ஸம்ஸார பாரம் நதோஹம் 2
2. உருவமற்றவரும், பிரணவம் எனப்படும் ஓங்காரத்திற்கு மூலமானவரும், மும்மூர்த்திகளுக்கும் மேற்பட்ட நான்காவது மூர்த்தியும், வாக்கு - அறிவு - ஐம்புலன்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவரும், தலைவரும், கயிலைமலையில் வசிப்பவரும், நீயோர்க்குப் பயங்காரமானவரும், காலனாகிய யமனுக்கும் காலத்தைச்செய்பவரும், தயையுடையவரும், நற்குணங்களுக்கு இருப்பிடமானவரும், தயையுடையவரும், நற்குணங்களுக்கு இருப்பிடமானவரும், பிறப்பிறப்பென்னும் ஸம்ஸாரச்சூழலுக்கு அப்பாற்பட்டவருமான ஶ்ரீ பரமேஸ்வரரை நான் வணங்குகிறேன்.
துஷா ராத்ரி ஸங்காஸ கெளரம் கபீரம் மநோ பூத கோடிப்ரபா ஶ்ரீஸரீரம் |
ஸ்புரந் மெளலி கல்லோலிநீ சாரு கங்கா லஸத் பால பாலேந்து கண்டே புஜங்கா 3
3. பனிமலையாகிய இமயத்துக்கு ஒப்பான வெண்மை நிறமும் கம்பீரமும் உடையவரும், கோடிக்கணக்கன மன்மதர்களின் ஒளியும் அழகும் அமைந்த திருமேனியை உடையவரும், அலைகளையுடைய அழகிய கங்காநதி தலையினில் விளங்க நெற்றியில் பிறைச்சந்திரனைச்சூடிக் கழுத்தில் பாம்புடன் உள்ளவருமான (ஈசனை வணங்குகின்றேன்).
சலத்குண்டலம் ஸுப்ரநேத்ரம் விஸாலம் ப்ரஸந் நாநநம் நீலகண்டம் தயாலம் |
ம்ருகா தீஸ சர்மாம்பரம் முண்டமாலம் ப்ரியம் ஸங்கரம் ஸர்வநாதம் பஜாமி 4
4. காதுகளில் அசையும் குண்டலங்களும், அழகுபொருந்திய விசாலமான திருவிழிகளுமுடைய மகிழ்ச்சி ததும்பும் திருமுகமுடையவரும் நீலகண்டரும், கருணாமூர்த்தியும், சிம்மத்தின் தோலை ஆடையாகத் தரித்தவரும், கபாலமாலை அணிந்தவரும், அனைத்துயிர்க்கும் பிரியமானவரும், உலகிற்கு நன்மையைச் செய்பவருமான ஸர்வேசுவரனை பஜிக்கின்றேன்.
ப்ரசண்டம் ப்ரக்ருஷ்டம் ப்ரகல்பம் பரேஸம் அகண்டம் அஜம் பாநுகோடிப்ரகாஸம்|
த்ரய ஸூல நிர்முலநம் ஸூலபாணிம் பஜேஹம் பவாநீபதிம் பாவகம்யம் 5
5. பேராற்றலுடையவரும், பரமேசுவரரும், முழுமையானவரும், பிறப்பற்றவரும், கோடிசூர்யப் பிரகாசம் உடையவரும், (ஆணவம், கன்மம், மாயை) என்ற மூன்று வகையான விலங்குகளை உடைத்தெறியவரும், முத்தலைச் சூலத்தையேந்திய திருக்கரத்தையுடையவரும், மெய்யன்புடைமையால் அடையக்கூடியவரும், பவானீதேவியின் கணவருமான சிவபெருமானைப் போற்றி வணங்குகின்றேன்.
கலாதீத கல்யாண கல்பாந்தகாரீ ஸதா ஸஜ் ஜநாநந்த தாதா புராரீ |
சிதாநந்த ஸம்தோஹ மோஹா பஹாரீ ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ மந்மதாரீ 6
6. கலைகளுக்கு அப்பாற்பட்டவரும், மங்கள வடிவினரும், கல்பங்களுக்கு முடிவை (பிரளயத்தை)ச்செய்பவரும், எப்பொழுதும் ஸாதுகளுக்கு ஆனந்தத்தையளிப்பவரும், முப்புரங்களை அழித்தவரும், சச்சிதானந்தஸ்வரூபரும், அஞ்ஞானத்தை அகற்றுபவரும், மன்மதனை எரித்தவருமான பிரபுவே (எங்களிடம்) மகிழ்ச்சியுடன் அருள்புரிவீராக, மகிச்சியுடன் அருள்புரிவீராக.
ந யாவத் உமாநாத பாதாரவிந்தம் பஜந்தீஹ லோகே பரே வா நராணாம் |
ந தாவத் ஸுகம் ஸாந்தி ஸந்தாப நாஸம் ப்ரஸீத ப்ரபோ ஸர்வ பூதா திவாஸ 7
7. உமாநாதனே! எதுவரையில் உமது திருவடித்தாமரைகளை மக்கள் தொழவில்லையோ, அதுவரையில் இந்த உலகத்திலோ அல்லது பரலோகத்திலோ அவர்கள் சுகத்தையோ அமைதியையோ அல்லது துக்கநாசத்தையோ அடையமாட்டார்கள். அனைத்து உயிர்களின் ஹ்ருதயங்களில் வாஸம் செய்யும் பிரபுவே! எங்கட்கு அருள் செய்வீராக.
ந ஜாநாமி யோகம் ஜபம் நைவ பூஜாம் நதோஹம் ஸதா ஸர்வதா ஸம்பு துப்யம்|
ஜரா-ஜந்ம-து: கெள கதா தப்ய மாநம் ப்ரபோ பாஹி ஆபந் நமாமீஸ ஸம்போ 8
8. நான் யோகம் அறியேன்; ஜபம் பூஜை இவைகளையும் நானறியேன். எப்போழுதும் சம்புவான உம்மையே நமஸ்காரம் செய்கிறேன். பிரபோ, சம்போ, ஈசா, முதுமை - பிறப்பு (இறப்பு) ஆகிய துன்பங்களால் வெந்து தவித்துக் கொண்டிருக்கும் துக்கமடைந்தவனான என்னை (அவைகளினின்றும்) காப்பாற்றியருள்வீராக.
ருத்ராஷ்டகமிதம் ப்ரோக்தம் விப்ரேண ஹரதுஷ்டயே |
யே படந்தி நரா பக்த்யா தேஷாம் ஸம்பு: ப்ரஸீததி ||
9. சிவபெருமானின் திருப்திக்காக பிராமணர் மூலமாகக் கூறப்பட்ட இந்த ருத்ராஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தை எவர்கள் பக்தியுடன் படிக்கின்றார்களோ அவர்களிடம் சம்புவான பரமேச்வரன் மகிழ்ச்சியடைகின்றார்.
இவ்வாறு துளசி தாஸர் இயற்றிய ராமசரித மானஸ் என்ற ஹிந்தி ராமாயணத்தில் உத்தர காண்டத்தில் உள்ள ஶ்ரீ ருத்ராஷ்டகம் என்னும் சிவஸ்துதி தமிழ் உரையுடன் முற்றிற்று.

Пікірлер: 1
@Editing359
@Editing359 5 жыл бұрын
can i get mp3 format?
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 29 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 32 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 51 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 29 МЛН