விருப்பத்தினால் எதனுடனும் ஒன்றிணையலாம் இதையே தியானம் என்கின்றனர். ஆனால் தொடர்ந்து எந்நேரமும் அதிலே இருக்க முடியாது. மேலும் எண்ணங்களை கொண்டே இது செய்யப்படுவதினால் பல எண்ணங்களுக்கு ஊடே அல்லது இடையே தான் இதை செய்ய முடியும். காரணம் மனம் என்பது பல எண்ணங்களின் கூட்டமே ஆகும். ஆகவே ஒரே எண்ணத்தில் யாராலும் இருக்க முடியாது. மன மற்ற நிலை என்பதும் கிடையாது ஏனெனில் மனம் இல்லை எனில் நீங்கள் இல்லை. ஆனால் நீங்கள் இல்லாத போதும் மனம் இருக்கும் அதாவது உங்களை பற்றிய எண்ணம் இல்லாத போதும் மனம் இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் மனமே நான் என்பதும் ஆகும்.