Please comment In which way Kalaignar or through which particular schemes of Kalaignar you have personally benefited and felt empowered and also kindly list out your favourite achievements of Kalaignar! கலைஞர் அவர்கள் எந்த வகையில் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பங்களித்திருக்கிறார் ? அல்லது கலைஞரின் எந்த ஒரு திட்டத்தினால் நீங்கள், உங்கள் குடும்பம் நேரடியாக பயனடைந்தீர்கள் என்பதை இங்கே பதிவிடவும்! கலைஞரின் சாதனைகளாக நீங்கள் கருதுவதையும் இங்கே பதிவிடலாம் ! @facebook.com/wowdaofficial
@isaiselvam17955 жыл бұрын
அருமையான பதிவு. தலைவரை தரக்குரைவாக பதிவிடுவோர் தயை கூர்ந்து இதில் உங்கள் கைவண்ணத்தை காட்ட வேண்டாம்.
@AhamedAnaz5 жыл бұрын
Plz pin this comment
@sivavelayutham72785 жыл бұрын
Chennai yil irunthu Baranur varai IT CORRIDOR IT policy (Govt) amaiththavar OMR 4VAZHI RAJIV Gandhi.peyarittathu KALAIGNARE!!
@sivavelayutham72785 жыл бұрын
Kudumbaththil mudhal pattatharikku kalvi ilavasam( Idhil Ida vothukkeedu illai ; yealai brahmins payan petranar! 2011 il archagargal pension announced.
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால், அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.
@letusspeakpolitics99165 жыл бұрын
I am first generation graduate.. - BE from a reputed engineering college. - Working in leading firm. - Got education loan. - despite from poor background dad is retired driver, grandfather was garden worker. - I am from a colony. I could reach where I am because of 3 people - Periyar, Anna, Kalaignar.
@pettaparak35154 жыл бұрын
You forgot Dr. B R Ambedkar
@diwanriazz32144 жыл бұрын
Yes
@mohankumar192364 жыл бұрын
@@pettaparak3515 Ambedkar India எல்லாத்துக்கும் சேத்து தான் சட்டம் எழுதுனாரு ஆனா இந்தியால மத்த மாநிலம் எல்லாம் அப்படியே தான் இருக்கு தமிழ்நாடு மட்டும் தான் சமுக நீதி மேல இருக்கு
@__nda_channel4 жыл бұрын
Namma Thatha
@Trekandtripper Жыл бұрын
Super ❤all the best yr future
@sivaep6226 Жыл бұрын
கலைஞரை போன்ற ஒரு தலைவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் அவரை நேரில் சந்தித்து அவரின் பேச்சை கேட்டு வளர்ந்தோம் என்பதே நாம் பெற்ற பெரும் பேறு. இவ்வுலகில் தமிழ் உள்ள வரை கலைஞர் என்ற பெயர் என்றும் ஒலித்து கொண்டே இருக்கும் 🎉❤
@ramkumar-xm9fk5 жыл бұрын
Yaaru edit panninga nu therla . Aana vera level .I am a doctor , doing my residency in one of the prestigious hospitals in india. I got my mbbs and pg in open competition. Wen i was so proud about getting selected in oc category ,one moment shook me .wen one of my colleagues came behind me in a academic event , he couldn't digest it and openly accused me of getting a seat in reservation .That moment i realised wat kalaignar had done .wat a man .Proud of a Dravidian stock
@kratosshri5 жыл бұрын
ram kumar yaaru ji athu ¿?
@ramkumar-xm9fk5 жыл бұрын
@@kratosshri ji , inga en senior oruthan , oru conference presentation la rendu perum present pannom , enakku award kidaichathu , avanuku kidaikala , appo ethuvume kamikilla , oru naal party la posukunu neenga tn la irunthu , neenga lam inga reservation la vanthu , award vanguringa nu soltan .He very well knew i came in open and our institute seats are not reserved in category .It was a plain casteist slur .
@kratosshri5 жыл бұрын
Hmm... Inu thirunthala ivanungala...
@logarajans79965 жыл бұрын
@@kratosshri epothum thiruntha matanga
@Vitality9174 жыл бұрын
Which college bro...?
@channelallaccess5 жыл бұрын
கட்டை விரலோ தலையோ, இந்நாளில் எவனும் கேட்டால்... பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை எரியும் ! #ThugLifeThalaivar
@asarudn1235 жыл бұрын
🔥 🔥
@Aiera2025 жыл бұрын
Mass
@RAJESHKUMAR-dq5os5 жыл бұрын
Arumai
@simsonselvaraj63644 жыл бұрын
Came back thalaiva
@simsonselvaraj63644 жыл бұрын
Nade narakamake kidakkirathu
@stanlytrichy86154 жыл бұрын
பெரியாரை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்ற நிலை கடந்து. அண்ணாவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்ற நிலை கடந்து. கலைஞரை கடந்து அரசியல் செய்ய முடியாது என்ற நிலை நிலவுகிறது... வாழ்க கலைஞர் புகழ்..
@RajKumar-yf9lv Жыл бұрын
Watched more than 100 times from his death.. still can't control my tears✨ Credits to the editor 💥🔥
@BBADevprasath Жыл бұрын
Yes 💯🥺❤️
@prakashb6652 Жыл бұрын
Same feeling here too. He was visionary ❤
@Iqcalmdown25711 ай бұрын
பெருமையா சொல்றோம் நாங்க உபிஸ் தான் வரலாறு மிகப்பெரியது ... எங்கள் தலைவன் வழியில் நாங்கள்
@AB-tf6tn5 жыл бұрын
நாடி நரம்புல கலைஞர் வெறி ஊரி போன உடன்பிறப்பால் தான் இப்படி ஒரு மாஸ் வீடியோ பண்ண முடியும்.
@selvarajp5 жыл бұрын
Tamizhan Dravidan கண்டிப்பா
@DD-cf2sk5 жыл бұрын
♥️❤️♥️👌🏿👌🏿👌🏿
@aravindhanselvaraj8505 жыл бұрын
Correct ya
@santhoshwill5 жыл бұрын
This is vera level nanba
@shivapal13554 жыл бұрын
True True..........
@ramkumar-xm9fk5 жыл бұрын
My grand father was a illiterate .My father's village head man taunted my father, asking him to discontinue studies and learn driving to become his driver .My father's hero kalaignar made him to revolt , finish his higher studies , retired from government service as a government officer and came home in a government car .The same kalaignar made my father respect my mother and made her a teacher .My brother is a team lead in US for a leading company .I am a doctor specialising in nuclear medicine in one of the leading hospitals in india , sir gangaram hospital , delhi . my sister is a doctor training in pediatrics .We can't owe this to anyone except kalaignar . Any one can verify the facts contacting me .
@Ve.for.victory.5 жыл бұрын
Woow!! Super bro
@MrAppu9915 жыл бұрын
Goosebumps.. ❤❤ திராவிடத்தால் வாழ்ந்தோம்..😍
@yousaymyname51745 жыл бұрын
வாவ்!!! This is what Kalaignar is.
@raffieqs77255 жыл бұрын
Kindly spread this to next generation, i am also the witness ..,
@jamalmydeen11585 жыл бұрын
Super..
@yuvarajv41345 жыл бұрын
Today I am engineer because of you Dr. Kalaignar, I am thankful to DK, DMK till my last breath.
@jamalmydeen11585 жыл бұрын
கலங்கரை விளக்கம்.
@fazhilahmubarak92745 жыл бұрын
ஓவ்வொரு நாளும் கல்லூரி செல்லும் வழியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை கடந்து தான் செல்வேன் அது எப்போது தலைவர் கலைஞரை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். #Thankyoukalainar
@Myself_444 жыл бұрын
நீங்க எந்த ஊர் தோழர் ?
@vijendran11515 жыл бұрын
2011ல என் அம்மாக்கு கிட்னில கல் இருக்குனு ஸ்கேன் ரிப்போர்ட்ல வந்ததும் ஆப்ரேஷன்க்கு ரெடி பன்ன சொல்லிட்டாங்க.. அந்த சமயம் அப்பாக்கு பிஸ்னஸ் செம லாஸ்.. எனக்கு காலேஜ் பீஸ் தம்பிக்கு ஸ்கூல் பீஸ்னு இருந்தத எல்லாம் கட்டிட்டு கைல பைசா சுத்தமா கிடையாது.அப்ப தான் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இருக்கு அதுல ஆபரேஷன் பன்னலாம்னு தெரிய வந்து அதுக்கு அந்த மருத்துவமனையிலையே(தனியார்) ரெடி பன்னிட்டு ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சிது.. மொத்த செலவும் அதுல அடங்கிருச்சு.. மாத்திரை செலவு முதற்க்கொண்டு. எங்க அம்மா இன்னிக்கு உயிரோட இருக்க காரணம் திராவிட பேரரசன் ஐயா கலைஞர் அவர்களால தான்.. சாவுர வரை நன்றியோட இருப்பேன்.. நீ வாழ்க எம்மான்🙏 பி.கு: அம்மா எங்க ஊர்ல மக்கள் நலப்பணியாளரா இருந்தவங்க தான்.. அந்த திட்டத்தை கொண்டு வந்ததும் ஐயா கலைஞர் அவர்கள் தான்..
@sivavelayutham72785 жыл бұрын
Idho oru NANRI THAMIZHAN!!
@MrYuvyuvi3 жыл бұрын
Iniki tamilnatla Iruka ovvoruthanum Kalaignar oda edo oru thitathala payan adanjavanga dan. Aana adula 80% peruku NANRI ye kedayadu.. ungala nenacha perumaya iruku.. ungala madiri elarum irundurnda Kalaignar 69 larndu Sagara vara CM ah irundurparu.. TN vera level la irundurkum.. maanangeta poi koothadi kum koothadiyoda koothiyalukum vote potu TN ah nasamakanadu inda nanri keta makkal daan
அவர் மறைந்து விட்டார் என வருந்தி உட்கார்ந்து விடாதீர்கள். அவர் கண்ட சமூக நீதி கனவுகளை நனவாக்கிட உழைப்போம். இன்னும் நிறைய பெரியார், அண்ணா, கலைஞர் உருவாகுங்கள்...
@mohamedismail81735 жыл бұрын
ஒரு பெரியார் ஒரு அண்ணா ஒரே கலைஞர் இது போல் இனி ஒரு திராவிடத்தின் தலைவர்களை காண்பதரிது... Am proud
@karthickking81695 жыл бұрын
இந்த கிழவன்னுக்கு ஏன்யா என் கண்ணுல இப்புடி கண்ணீர்ரா வருது
@yuvaraj28265 жыл бұрын
Enakum nanba
@kaleesa64605 жыл бұрын
🥰
@simsonselvaraj63644 жыл бұрын
Ne maniethan nanpa
@ShivaShankar-zn5zp3 жыл бұрын
தமிழினத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க..!! 🌄🌄🌄🙏🙏🙏
@lakshmimurali80644 ай бұрын
கிழவன் என்றால் தலைவன் என்று ஒரு பொருளும் உண்டு.
@prakashjp94585 жыл бұрын
மிக சிறப்பான தொகுப்பு.. கலைஞர் தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை சிறப்பாக தொகுத்துள்ளார்கள்.. ஏகலைவனின் கட்டைவிரலை இனியும் ஆதிக்க துரோணாச்சாரியார் வெட்ட சொல்ல முடியாது.. அப்படிக் கேட்டால் அவனுடைய பட்டை உரியும்..
@prav11025 жыл бұрын
வெரி தனமான வீடியோ. எடிட்டிங் அண்ட் மிக்ஸிங் மிக நேர்த்தி. கடைசி சில நிமிடங்களில் கண்ணில் வழிந்தது ஓடிய கண்ணீரை அடக்க முடியவில்லை. வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்.
@simsonselvaraj63644 жыл бұрын
Ne valka nanpa
@MrYuvyuvi5 жыл бұрын
Whenever i feel low.. i watch Kalaignars video or speech.. it gives me strength of 1000 elephants 😪😪😪
@AbdullaMuraffik945 жыл бұрын
I'm a big fan of Kalaignar, from Sri Lanka! Much love for the great leader! வாழ்க தமிழ்! ❤
@mohankumar192364 жыл бұрын
Bro Sri Lanka la kalaignar ah thititu irupangale neenga ena solringa
@@AbdullaMuraffik94 yes bro seeman pathi ena nenaikuringa
@AbdullaMuraffik944 жыл бұрын
@@mohankumar19236 Not worth to talk bro
@mohankumar192364 жыл бұрын
@@AbdullaMuraffik94 super bro
@gurudhevrathnavel95795 жыл бұрын
Yovvv 🔥🔥🔥🔥sathiyama sollara ini oruthan nala itha Vida better video pannave mudiyathu.... Paka paka kannu kalanguthu Neraya edathula goosebumps pinnitaya romba arumaya iruku..... Avaru pesara dialogues ku sub titles um potuta north India varaiku reach iruku 🔥🔥🔥🖤❤
@atgvet18895 жыл бұрын
Myself and my spouse are now govt doctors because of thailvar kalaignar..he lifted Tamil Nadu common entrance exam in 2006, and ordered medical & engineering admissions based only on 12 th standard marks alone..we both are first graduates of our generation's. Periyar, Anna, kalaignar..
@vigneshs34275 жыл бұрын
Having many controversial thoughts against him but I strongly believe that he is the legend behind making of Tamil Nadu.... Stronger man in Tamil earth
@senthilsgv5 жыл бұрын
கலங்கி கதற வச்ச கலைஞரின் காதலர்களுக்கு மிக மிக நன்றி 😢
@-yktamilchannel15085 жыл бұрын
கலைஞர் என்றும் மறையமாட்டார் , நம்முள் வாழ்ந்துகொண்டே இருப்பார் ..மிகச்சிறந்த காணொளி ..நன்றிகள் பல .
@thamaraiselvan67615 жыл бұрын
எத்தனையோ tribute edited video பாத்துருக்கேன் இது வேற லெவல்..அழ வெச்சிச்சுட்டிங்கயா
@chandraprakash-uf5mn5 жыл бұрын
வெறித்தனம் யாதெனில் கலைஞரை பற்றிய இந்த வீடியோ ஒரு சான்று. ஒரு பெரியார் ஒரு அண்ணா ஒரே கலைஞர் இது போல் இனி ஒரு திராவிடத்தின் தலைவர்களை காண்பதரிது...
@arunaro2011 Жыл бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் போதவில்லை.. ஒவ்வொரு முறையும் சிலிர்க்கிறது.. நன்றிகள் பல.. 👍💐🙏🫡
@manikandaprabhuranjith38645 жыл бұрын
இந்த காணொளியை தயாரித்தவரின் தோலில் அல்ல உங்கள் பாதங்களில் என் கரங்கள் பூமாலையாக விழும்.. ஒரு சமூக நீதி தலைவனை சிறப்பித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே..
@d1986n5 жыл бұрын
தரமான படைப்புக்கு நன்றி. திராவிட சிந்தனைகளை தலைவர்கள் வழி தொகுத்தவிதம் அருமை. தமிழகத்திற்கு தலைவர் கலைஞரின் பங்களிப்பு அளப்பரியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அவரது சமூக நீதி பயணம் அவர் இல்லாத நிலையிலும் காலத்திற்கும் நினைவுகூறப்படும். இந்த காணொளி ஒரு ஆகச்சிறந்த வரலாற்று பதிவு. சமூக நீதியில், தன்னாட்சி அதிகாரத்தில் பல இடர்களை தமிழகம் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இளைய தலைமுறையினரிடம் இப்பதிவு அதிகளவு சென்று சேர வேண்டும். Kudos to the creator, selection of background songs and synced with memoirs are top notch. KEEP ROCKING!!
@Justin.edits5865 жыл бұрын
தமிழ் இவருக்கு என்றென்றும் கடமைபட்டது...!
@KarthikSubburaj-il5px5 жыл бұрын
திராவிடம் தமிழ் வெல்லும் நம் தலைவன் கலைஞர் என்னும் சகாப்தம்♥♥♥
@RamKumar-hf9wm5 жыл бұрын
dravidam or tamil.say only one
@virtualworld6075 жыл бұрын
Goosbumps! ❤️🖤 I wish DMK IT cells should hire you guys.
@br-eu7wd5 жыл бұрын
இன்று இவர் போன்ற தலைமை இல்லாதது பேரிழப்பு தான், ஆனால் திராவிட இயக்கம் விதைத்து சென்ற பல்லாயிரக்கணக்கான விதைகள் சமூக நீதிக்காக தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும், உயிரையும் கொடுக்கும்! வாழ்க திராவிடம், வாழ்க பெரியார், வாழ்க அண்ணா...
@ArunPandiyan65 жыл бұрын
It is our duty to take the Dravidian ideology to the youth of Tamil Nadu, today. They are going behind rhetorics and blatant lies of Seeman. Without Periyar and DMK, we are nothing. Today, we are what we are because of the ideology itself.
@AhamedAnaz5 жыл бұрын
True fact.... DMK must realise that that need to strong their student wing and spread the principles of dravidam to today's students.... Else it's done
@murugesana37314 жыл бұрын
Same bro TN was improved becoz of dravidam ideologies not a something else..
@immanimmanuel69413 жыл бұрын
Well said bro..
@mohankumar192364 жыл бұрын
இங்க கமெண்ட்டுல வந்து ஒவ்வொருத்தவரும் அவங்க கலைஞரால கிடைத்த நன்மைகள சொல்றாங்க இந்த மாறி வேரு எந்த ஒரு தலைவனுக்கும் கிடைக்காது ஒரு மனிதன் இறந்ததுக்கு அப்புரம் தான் அவர் அருமை தெரியும் கலைஞர் நால தான் இன்னைக்கு நான் Engineer ஆகிருக்கேன் அவர் தந்த 3% இட ஒதுக்கிட்டால தான் இன்னைக்கு Engineer ஆக முடிந்தது இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது கலைஞருக்கு மிக பெரிய நன்றி
@AntoBruno5 жыл бұрын
கலைஞர் எம்மான் ! வாழிய வாழியவே! The name is Kalaingar ! To the passionate team who made this , kindly accept my heartfelt appreciation and thanks!
@aynseye78015 жыл бұрын
Whoever Made this. you owe me. I thank you till my lifetime
@balakrishna-ro1cc5 жыл бұрын
It's I owe you.
@arthisheela37635 жыл бұрын
இறுதியில் கலைஞரின் சாதனைகள் 🔥🔥🔥🔥🔥
@rpvinoth35645 жыл бұрын
அருமை அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்.! வாழ்க கலைஞர் புகழ்.!
@chennaionlychennai78724 жыл бұрын
I studied with Udhay Nidhi. Long before that my parents were hardcore Mr.Karunanidhi followers. If any tamil people hate Mr.Karunanidhi they only know half the story. Long live KK Ayya. Love you
@snr6734 жыл бұрын
👌👌👍👍
@kabilanentertainment75983 жыл бұрын
Tear rolling down, Best edit of Kalaignar 🖤❤️. என்னா மனுஷன் யா 🖤❤️
@kapilarasan21734 жыл бұрын
Whenever I feel low. I'll watch this video. Thanks for this video. I'm a first generation learner. I always thought Kalaignar, Anna, Periyar have major role in my education not only mine but for all the students from village like me. If you're reading this please study. Study as much as you can. Don't let anyone to fool you. Education is very important. It's our rights. Study and use that to help others if possible. All the best.❤️
@abap3998 Жыл бұрын
Same here bro
@barathram68985 жыл бұрын
Really a good tribute to one and only Thalaivar.. Especially his old speeches. He is the one who raised the standard of TN & TN people irrespective of caste, religion. மானமிகு சுயமரியாதைக்காரன்.
@raffieqs77255 жыл бұрын
ஆம் ! இவர்களால் ( பெரியார் , அண்ணா , கலைஞர் மற்றும் திராவிடத்தால் ) வளர்ந்தவர்களில் நானும் ஒருவன் ..,நன்றி
@farookansari66705 жыл бұрын
வெறித்தனமான வீடியோ. த நேம் ஈஸ் கலைஞர்
@seekknowledgefromthecradle29004 жыл бұрын
kzbin.info/www/bejne/nGK6qGadh9ColZo
@udhayak19085 жыл бұрын
My hearty thanks for this team. King of Diravidam. தமிழ் தலைவர் எங்கள் கலைஞர்.
@immanimmanuel69414 жыл бұрын
யோவ் யாருயா அந்த எடிட்டரு!!!!! பட்டைய கெளப்புது 👏👏👏 Really loved it!! The Best tribute !!! Well-done!!
@vig19843 жыл бұрын
My Dad came from a poor backward family became a senior level govt officer,myself a dentist and my brother an engineer all because of these three leaders(Periyar,Anna and kalaingar)...if not these three leaders we still live as sudras...
@selvarajp5 жыл бұрын
பார்ககும் ஒவ்வொரு முறையும் சிலிர்பபு, கண்ணில் கண்ணீர். 😍😔
@sppsarathy5 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் கண்களிலிருந்து நீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. நன்றி கலைஞர் ஐயா.
@Krishna_rationalist5 жыл бұрын
கலைஞர், ஆளுமை மிக்க ஒரே தலைவர்.... அருமையான பதிவு....👍👍👍
@jayraj48255 жыл бұрын
The man who stood with his ideology till his last breath 🙏 .. pure dravidian , Anna's real successor
@muhendranm32645 жыл бұрын
Great work by WOWDA team. memorable one.thanks
@karnasakthi5 жыл бұрын
கலைஞர் டிவி. டிவி 90-2000களின் குழந்தைகளை மகிழ்ச்சிக்கடலில் மிதக்கச் செய்த மிகப்பெரிய மாயாஜால உலகம். வெள்ளியிரவு ஒளியும்,ஒலியும், சனியிரவு இந்தி திரைப்படம், ஞாயிறு மாலை தமிழ்திரைப்படம் என வார இறுதிகளை வசந்தமாக்கித் தந்த அற்புதமான அறிவியல் ஒர் சாதனம்தான் டிவி. 95களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சி வருகையினால் வார இறுதியில் மட்டும் கிடைத்த வசந்தம் வாரம் முழுமைக்கும் கிடைக்கலாகிற்று. இந்த காலகட்டத்தில் நகரங்களில் டிவியைச் சொந்தமாக்கிக் கொள்ளும் விகிதாசாரம் 20 குடும்பங்களுக்கு ஒன்று என இருந்தது. அதாவது யாரோ ஒருவர் வீட்டில் வாங்கிய டிவியானது கதவு,ஜன்னல்,வாசல்,ஒலி என இத்தியாதி இடுக்குகள் வழியாக மீதம் உள்ள 19 குடும்பங்களை வந்தடைந்தது. இந்தக் கணக்கும் நடுத்தர குடும்பங்களை வைத்து மட்டுமே. அதுவே தலித்துகள் வாழும் காலனிகளில் இந்தக் கணக்கு 50 அல்லது 100 குடும்பங்களுக்கு ஒரு டிவி என்றாக இருந்தது. இதே கணக்கு கிராமப்புறங்களில் பஞ்சாயத்து டிவிகள் என்ற பெயரில் ஊருக்கு ஒன்றாக இருந்தது. நகர்புற சேரிகள் எனச்சொல்லப்படும் பகுதியில் 50களில் இருந்து இன்றுவரை இருக்கும் எங்கள் காலனியின் 95களில் டிவியானது 75:1 என்றாக இருந்தது. எங்கள் காலனியை அடுத்த கொஞ்சம் மேடாக இருக்கும் பகுதிகளில் கவுண்டர்கள், நாயக்கர்கள், என மற்றசாதியினர் பகுதிகள் இருந்தன. அந்தபகுதிகளில் 20:1 கணக்கில் டிவிகள் இருந்தன. அப்படி ஒரு வீடுதான் ஒரு கழுத்தொட்டிய நெக்லஸ் போட்ட ஒரு பாட்டியின் வீடு. அவர்கள் வீட்டு வாசல்களில் கால்வலிக்க நின்றபடி பார்த்துதான் எங்கள் பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகள் கழிந்தன. அப்படியாக ஒரு ஞாயிறன்று காலை 11மணி சமயத்தில் மகாபாரதம் என்று நினைவு. அந்த வீடு, அந்த மனிதர்கள் என மொத்தமும் டிவியில் ஆழ்ந்திருந்த சமயம் வாசலில் சிறுவர்களாக இருந்த எங்கள் கூட்டமும் டிவியில் ஆழ்ந்திருந்தது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தில் கதவையொட்டிய படிக்கட்டில் அமர்ந்த நான். பின்னாடி எனை அழுத்தியபடி நின்ற நண்பர்கள் சுமையைத் தாளாது ஒரு கையை நிலைவாசலைத் தாண்டி வீட்டுக்குள் ஊன்றினேன். அடுத்த நொடியில் விருட்டனெ எழுந்துவந்த அந்தப்பாட்டி என் கன்னத்தில் அறைந்து காதைப்பிடித்து கிள்ளி எனை வாசலில் தள்ளிவிட்டாள். அத்தோடு நிற்காமல் நான் கைவைத்த இடத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு தொலஞ்சி போங்கடா.. சேரி நாய்களா என சத்தமிட்டு துரத்தினாள். அவமானமும், அழுகையுமாக ஓடிவந்த நான் அதை எவரிடமும் சொல்லாமல் மறைத்தேன். பிற்பாடு சிறுவர்களுக்கே உண்டான அடுத்த மகிழ்ச்சியில் அதை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அக்கிழவி காதில் கிள்ளி வைக்கும்போது ஒரு சூட்டை உணர்ந்திருந்தேன். அந்த நிகழ்வை இப்போது நினைத்தாலும் அந்தச்சூடு நினைவிற்கு வரும். அது ஒரு வர்க ஒடுக்குதல், சாதிய ஒடுக்குதல், சாதிய வன்முறை எனத்தெரியாத, சாதி பற்றி எதையுமே அறிந்திராத என் வாழ்வில் நான் கண்ட முதக் ஒடுக்குதலே இந்த நிகழ்வு. பிற்பாடு வீட்டுக்குள் நுழைந்தது என் தவறுதான் என்று எண்ணி அந்தக்கிழவியின் வீடு இருக்கும் வழியில் கூட போகாமல் வேறு,வேறு வழிகளில் நுழைந்து திரிந்திருந்தேன். மாடு வண்டி வைத்து லோடடித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் ஜாமிண்ட்ரி பாக்ஸ் கேட்கவே வருத்தமாயிருக்கும் நிலையில், டிவியைக் கேட்பது என்பது நினைக்கவே முடியாத ஒன்றாக இருந்தது. பிற்பாடு காலனிக்குள்ளே ஒன்றிரண்டு டிவிகள் முளைக்க எல்லாமும் மறந்து.. மர்மதேசம், விடாது கருப்பு, நிஷாகந்திகள் என வாழ்வு நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது நடந்த தேர்தலில் திமுக வெற்றியடைந்திருந்தது. காலை நீட்டிப்படுக்வே சிரமப்பட்டுக்கொண்டிருந்த எங்கள் காலனியின் 10க்கு 8 அளவுடைய வீடுகளில் கலைஞர் டிவிக்கென அதீத மகிழ்ச்சியுடன் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அம்மாவும் நானும் அந்த அட்டைப்பெட்டியை வாங்கிக்கொண்டு வீடடைந்து பெட்டியைப் பிரித்து டிவியை உயிர்ப்பித்தோம். எல்காட் எனும் எழுத்துகள் மறைந்து "தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சி" எனும் எழுத்துகள் திரையில் எழுந்தன. டிவி என்றாலே காதில் பரவும் அந்த சாதிய ஒடுக்குதல் சூட்டிற்கு குளிர்ச்சியாக ஒத்தடம் கொடுத்ததைப் போன்ற அந்த உணர்வை என்னால் எந்த வார்த்தைகளாலும் கடத்திவிட முடியாது. எனைப் போன்ற பெரும்பான்மை தலித்துகள்/வர்க இடைவெளி வறியவர்களின் வாழ்வில் கலைஞர் (டிவி) பரப்பிய அந்த வண்ணம் மாபெரும் சுயமரியாதையின் வண்ணம்.
@cctamilentertainmentlovestu5 жыл бұрын
அருமை அருமை நீங்கள் பேச பேச என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.இதே அனுபவம் பிராமணர்களிடம் எனக்கு ஏற்பட்டது.
@mrtamil26963 ай бұрын
Superb ☀️
@MrAppu9915 жыл бұрын
தலைவாவாவாவாவாவா... எங்களின் கிழக்கு திசையே.. உன்னால் தான் வாழ்ந்தோம்.. உன்னால் தான் உயர்ந்தோம்.. வாழ்க எம்மான்.😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤😍😍😍😍
@MohanRaj-td1ff5 жыл бұрын
கண்ணில் நினைவுகள் சுரந்தது . கண்ணீர் என்று ஏன் பெயர் வைத்தனர் .... அனைத்தும் கண்ணீர் தானா ?? நன்றியுணர்வு-க்கும் கண்ணீர் தானா ??? ... வாழ்க தமிழ் வெல்க திராவிடம் 🖤♥️. மிகச்சரியாக , சிறப்பான காணொளி . மனிதம் வளர்ப்போம் . நீ வாழ்க பல்லாண்டு .
@foodiethozhan98994 жыл бұрын
என் அப்பா igcarல வேலை செய்தார் என்றால் அதற்கு காரணம் டாக்டர் கலைஞர் தான்..இப்போ நான் BE சமூகநீதி மூலம் கிடைத்தது..இப்போ நான் UPSCக்கு தயார் செய்து கொண்டு இருக்கேன்..அதற்கு எனக்கு பெரும் உதவியா இருப்பது சமூகநீதி மற்றும் டாக்டர் கலைஞர் போல திடமான கொள்கை தான்.. கண்ணிர் ஓட பதிவு செய்கிறேன் ஒரு நாள் UPSCயில் பணி செய்வேன் அப்போது சமூகநீதி அதிகம் ஊருக்கு செய்வேன்😎😍😍
@santhoshmohan84845 жыл бұрын
A bigggggg hug to the whole team!! Fantastic creation 👏👏👏
@dhandapaniarun15 жыл бұрын
அழவெச்சுட்டயா... 🙏
@neeluayyappan6765 жыл бұрын
வாழ்க கலைஞர் புகழ் நன்றியும் வாழ்த்துகளும் உருவாக்கிய உயிரினும்மேலான உடன்பிறப்புகளுக்கு.
@selva_raj5 жыл бұрын
Really cried so much after watching this video . Miss u Kalaignar ....editor take 2 yrs from my life - pinnita pa
@sinjuvadiassociates90125 жыл бұрын
கண்ணீருடன் பதிவு. எம்ஜியார் மட்டும் சினிமாவோடு நின்றிருந்தால் இன்று தமிழகம் சிங்கப்பூரின் வளர்ச்சியில் 90% அடைந்திருக்கும் நம் தலைவர் கலைஞரால்... அல்லது இருமுறை தொடர்ந்து ஆட்சியிலிருந்திருந்தால் சிங்கப்பூரின் வளரச்சியில் 75% தமிழகம் அடைந்திருக்கும். எத்தனை சதிகள், எத்தனை வசவுகள, எத்தனை துரோகங்கள்.... எப்படி தாங்கினீர்களோ... நெஞ்சு வெடிக்கிறது தலைவரே... 14 வயதிலிருந்து 94 வயதுவரை தமிழனனுக்காகவே வாழ்த தலைவா....பெரியாரின் தலைமகனே.... அமைதியாக ஓய்வெடுங்கள்.. தளபதி இருக்கிறார்...கோடானு கோடி உங்கள் உயிருனும் மேலான... உடனபிறப்புகள் இருக்கிறோம்....உங்கள் கனவை நனவாக்குவோம்.
@snr6734 жыл бұрын
நிதர்சனமான உண்மை.
@maruthupandiyan29363 жыл бұрын
Becoz of ADMK we are struggling .....😑😑😑😑 KALAINJAR IS GOD FATHER 🖤❤️
@dr.baskar95646 ай бұрын
முற்றிலும் உண்மை! Athu thaan aariya sathi. தமிழ் நாட்டில் sinthikka theriyaatha ariviligal 50 percent irupathinaal intha nilai.
@tamizhvp13705 жыл бұрын
Wonderful compilation!!! Kudos to the team behind this !!!👏👏👏👏👏👏
@MrYuvyuvi4 жыл бұрын
Iniki corona time la TN health dept no of doctors la thanithu vilangudu.. iduku vidai Kalaignar potadu.... Nanri ayya 😪😪😪
@samaran865 жыл бұрын
யோவ்😭😭 அழுகையை அடக்கிட்டு வெம்பிட்டு இருக்கேன்யா.
@manojsagayaraja42365 жыл бұрын
Vera level... Lot of inspiring punches... Kudos to the research team...
@sridharsamraj10165 жыл бұрын
௭னது தலைவர் கலைஞர் கருணாநிதியின் புகழை மேலும் வளர்க்க இது பயன்படும்... கலைஞரே... உம்மை காணாது, கேட்காது, உணராது இருப்பது கவலையளிக்கின்றது...
@immanimmanuel69414 жыл бұрын
பல பிற்போக்கு ஃபர்னிச்சர சுக்குநூறா ஒடச்சி நொறுக்குனவரு தான் கலைஞர். சமூகநீதி சிற்பி.!
@RAJESHKUMAR-dq5os3 жыл бұрын
கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை🙏🙏🙏 தலைவர் கலைஞர்❤️❤️😭😭
@Guitarista19925 жыл бұрын
This is THE best edit on Kalaignar, kudos to the team that made it. This man's life needs to be celebrated across the ends of the world as long as lofty ideals like justice, liberty and equality are valued by humanity. Vaazhga Periyar. Vaazhga Anna. Vaazhga Kalaignar.