இங்கே புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. திருமூலர் சுவாமி குறிப்பிடும் சிவம் என்பது, உருவக்கடவுள் கொண்டு போற்றி வணங்கும். சிவபெருமானை அல்ல.. திருமூலர் சுவாமி கூறும் சிவம் எது என்றால், ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை யாம் பாடக்கேட்டேயும் - மாணிக்கவாசகப் பெருமான் அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் (அருட்பெருஞ்ஜோதி) - வள்ளல் பெருமான் உற்று உற்றுப் பார்க்கையில் ஒளி விடும் மந்திரம் - திருமூலர் சுவாமி ஒத்தது அறியான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் - திருவள்ளுவர் (இதில் அந்த ஒத்தது என்பது உண்மைக் கடவுளாகிய "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே") புருவமத்தியில் இருக்கும் ஒளி வீசும் சிறசே "சிவம்" சி - சத்து வ - சித்து ம் - ஆனந்தம் சச்சிதானந்தப் பிளம்பாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியையே திருமூலர் கூறுகிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஆவார். மற்ற கடவுள்கள் அனைத்தும் தத்துவ உருவ சிலையே ஆகும். சிவம் என்றால் " உருவக் கடவுளாகிய சிவபெருமான்" அல்ல! சிவம் = அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 100%