நிறைவுப்பகுதி கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருநாமங்களின் விளக்கத்தை அளித்ததிலிருந்து - ராமனின் முன் அழகையும், பின் அழகையும் சேவித்து எனக்கு 25 வயது ஆகிவிட்டது கைகேயி என்னை மறுபடியும் முதியவன் ஆக்கி விடாதேஎன தசரதனின் கூற்றை முன்மொழிந்தார். அனந்த பத்மநாபனின் அவதாரம் முதலில் 3 ஊர்களை தாண்டி இருந்ததை கண்ட திவாகர் மகரிஷியின் தண்டத்தின் அளவுக்கு 3 வாசலுக்குள் பெருமானை சுருக்கிக் கொள்ள- உட்படுத்திக் கொள்ள கோர அதன் படியே பெருமானும் ஆகி தன்னை உட்படுத்திக் கொண்டார். அதே போல் அந்தமில்லா பெருமானை தனக்குள் அந்த மாக்கி ஆதிசேஷன் ஒடுக்கி விட்ட படியால் அனந்தன் என்ற பெயர் ஆதிசேஷனுக்கு ஏற்பட்டது. 110வது திருநாமம் சம: பெருமான் அனைவருக்கும் சமமாய் இருந்து அனைவரையும் சமமாக கொண்டாடுகிறார். சமோகம் ஸர்வபூதேஷு ....என்ற ப்ரமாணப் படி கண்ணனே சாதிக்கிறார் - பெருமான் பக்ஷ பாதமின்றி அனைவரையும் சமமாக நடத்துபவர் என்ற உண்மை நாம் அறிந்த அன்றே நாம் மோக்ஷம் போய்விடுவோம். இந்த உண்மை அறியாமல் நாம் பெருமாள் நம்மை சிரமப்படுத்துகிறார் என நினைக்கிறோம். ஏதோ ஒரு கர்மத்தை தொலைத்து தானே நம்மை அவர் கூட்டிக்கொள்ள முடியும் என சாதித்தார். பரிச்சித்த - தெரிந்தவர். அபரிச்சித்த ... சமஹ.அபரிச்சித்த - தெரியாதவர் தீவ்ரன் - தீவிரமாய் பக்தி செய்பவன் என தெரிந்தவன் தெரியாதவன் பல காலம் பெருமானை சேவிப்பவன், இன்று புதிய தாய் பெருமானை சேவிக்க வந்தவன் என அனைவரிடம் பெருமான் சமநோக்குடன் இருக்கிறார். தான் எல்லோருக்கும் சாம்யம் என்பதை உணர்த்த வே- அனந்த பதமநாபன் தன் நாபிக்கமலத்தில் ப்ரஹ்மாவிற்கும், தன் திருமுடியில் நித்ய சூரிகளுக்கும், தன் திருவடியில் நம் போன்ற அடியார்களும் சேவிக்கும்படி சேவை சாதிக்கிறார். கௌரவே சமயதி - தன்னை அடியார்களுக்கு கொடுப்பதில் சமத்துவத்தை கடைபிடிக்கிறார். 111வது திருநாமம் - அமோகம்-போக அமோக பெருமானின் உறவு வீணாகாது. அமோக: வீணாகாத தொடர்பை உடையவர். தேஷாம் அபிஜித் ஸ்பர்ச: இவர் ஸ்பரிசம் கிட்டினால் அந்த பக்தர்களுக்கு வீணாகாத தொடர்பை கொடுப்பவர். யதோ அமோகம் தர்சனம் ராம.. ஒளரா-ராமனை காண்பது வீணாகாது. யச்ச ராமோ .... விகரஹதே என்ற ராமாயண ஸ்லோகப்படி பல கோடி பேர்களை ராமன் பார்ப்பார். நாம் ராமனை பார்ப்பதை விட நமக்கு ராமனின் கடாக்ஷம் விழுந்தால் ஸுக்ருதம். நல்லது. நச மோஹ ஸ்தவ ஸ்தவ-பகவானை ஸ்தோத்திரம் பண்ணினாலோ கொண்டாடினாலோ அது வீண் போகாது. அது போல் கண்ணன் 2 இடத்தில் ப்ரதிக்ஞை செய்தார் - அபிமன்யு, உத்தரா, பரிக்ஷித் கர்ப்பமாய் பிடித்திருந்தார். அவாண்ட அஸ்த ப்ரயோகம் - எல்லோரையும் அழித்து விட்டது. உபபாண்டவர்கள் அனைவரையும் அழித்துவிட்டது. முடிவில் பாக்கி எஞ்சியுள்ளது - உத்திரையின் கர்ப்பத்தில் இருப்பது மட்டும் தான் - உத்தரை திரெளபதி கண்ணனிடத்தில் சரணாகதி செய்ய கண்ணன் அந்தகர்ப்பத்தை ரக்ஷிக்க - அது வெளியே கரிக்கட்டையாய் வந்து விழ, கண்ணன் தன் திருவடியால் அதை தீண்ட எது மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. ய தி மோப்ரஹ்மசர்ய -. எனது வங்கும் ப்ரமாணப்படி நான் ப்ரஹ்மச்சாரி என்பது உண்மையானால், நான் பொய்யே பேசாதவன் என்பது உண்மையானால், இந்தத் குழந்தை உயிர் பெற்று எழட்டும் என்று கூற உயிரற்றது உயிர் பெற்றது என்றார். பொய்மையும் வாய்மையிடத்தே .என்றபடி ஜீவராசிகளை ரக்ஷிப்பதற்கு அவர் பொய்யே சொன்னாலும் அது மெய்யாக சத்யமாக கருதப்படும். அமோகம் - குறைவற்ற செல்வம் உடையவர். வாக்கு பொய்க்காது. காட்சி பொய்த்தாது. இவர் தொடர்பு எப்போதும் பொய்க்காமல் இருக்கும். ஒரு தடவை வஸீதே வன் கர்ம விசாரம் புரியும் போது ரிஷிகள் மெளனியாய் தலை குனிந்து நிற்க, பின் வஸீதேவன் அதன் காரணத்தை வினவ, ரிஷிகள் உன் தர்மபத்தினி தான் இந்த பிரபஞ்சத்தையே கர்ப்ப வாசம் செய்தாள் இக்கர்மத்தை ஒழிக்க வே பெருமாளின் அவதாரம் என கர்மவிசாரத்தை விளக்க அவசியமே கிடையாது எனக் கூறினர். எப்பேர்பட்ட நெருங்கிய உறவுகளும் இத்தாத்பர்யத்தை புரிந்து கொள்ளாமல் அழிகிறார்கள். ஆனால் எங்கேயோ இருக்க நாகப் பழக்காரியும், ததிபாண்டமும் இதை புரிந்து மோக்ஷம் போகிறார்கள் .என்று கூறி இத்திருநாம விளக்கத்தை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@varshinisudharsan4873 Жыл бұрын
🙏🙏🙏🙏💐💐
@malathynarayanan6078 Жыл бұрын
பகுதி - 1 இப்பகுதியில் விஷ்ணு வின் 108 வது திருநாமம் முதல் 111 வரையிலான திருநாமங்களுக்கு விசேஷமாய் அர்த்தங்களை ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அர்த்தித்ததிலிருந்து - 108 வது திருநாமம் ஸமாத்மா - யாரெல்லாம்ஆஸ்ரயிக்க வருகிறார்களோ அவர்களுக்கு இடையில் உயர்வு தாழ்வு பார்க்காமல் பெருமான் சமமாய் பாவிக்கிறார். தேஷி உணாத பிஹி: நின்ன உன்ன தேஹி அபி.... சிலர் உன்னதமாய் இருப்பவர்கள்- பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்றில்லாமல் சமதர்சனமாய் அனைவரையும் கருதவேண்டும் என நமக்கு உபதேசிக்கிறார். இந்த உப தேசம் கண்ணன் அர்ஜுனனுக்கு சமதர் சனத்தை வளர்த்துக் கொள் என கீதையில் கூறியது ஆகும். ஆக ஸமாத்மா - எனக்கு ப்ரியமானவர்களா, துவேஷிப்பவர்களோ கிடையாது அர்ஜுனா. அதாவது சரணாகதி பண்ண வந்தவர்களிடத்தில் இவன் பணக்காரன் என்று விசேஷ அபிமானதையும், இவன் ஏழை என்று விலக்குவதும் கிடையாது - ஏரங்கபதே நீ குணத்தால் மிக மிக உயர்ந்தவர். அடியேன் மிகவும் தாழ்ந்தவன். ஒரு நாய் பட்டர் காலத்தில் கோயிலுக்குள் நுழைந்தது என்பதற்காக லகு சம்ப்ரோஷணம் செய்தபின்தான் புறப்பாடு கண்டருளியதை குறித்து பட்டர் பெருமாள் முன் நின்று, இந்த நன்றியுள்ள நாய் உள்ளே புகுந்ததிற்கு நீ சம்ப்ரோஷணம் பண்ணி கொண்டாயே. இந்த அடியேனாகிற நாய் நித்தம் வந்து போவதற்கு எந்தவிதமான சம்ப்ரோஷணமும் நீ பண்ணிக் கொள்ளவில்லை என பட்டர் வாக்கை முன்மொழிந்தார். இதன் அடியாய் திருமங்கை ஆழ்வார் அடிநாயாய் நினைத்திட்டேனே...என்று என்னை நாயாக நினைத்துத்தான் அடிபணிந்தேன் என்ற பாசுர விளக்கத்தையும் நினைவு கூர்ந்தார். ஆக இந்த உயர்ந்த வர் தாழ்ந்தவர் வித்யாசத்தை பெருமான் பாராமல் அனைவரையும் சமமாக கொள்கிறார். 109-ஸம்ஹிதா - மித-நன்குஅளவுக்கு உட்பட்ட வர். இவரோ அளவிற்கு உட்படாதவர் அபரிமிதமாய் இருப்பவர். விலையுயர்ந்த மாணிக்கத்தை ஒரு உத்தரியத்தில் - முந்தாளையில் முடித்து எடுத்துக் கொண்டு வரலாம். ஆனால் பஞ்சு மூட்டையை ஒரு வண்டியில் இட்டு தான் எடுத்துக்கொண்டு வர வேண்டும். அந்த அளவுக்கு ஆஸ்ருத வ்யாமோஹராய்(மாலே) அத்தனையும் உண்டு ஆலிலையில் அகடித கடனா சாபர்த்தியத்துடன் சயனிப்பவர் (மணிவண்ணா) 10 கோடி மதிப்புள்ள மாணிக்கத்தை ஒரு கைக்குட்டையில் முடித்துக் கொண்டு போவது போல் அத்தனை பெருமைகள் உடைய பெருமானை எளிதில் முடிந்து ஆளும் அளவிற்கு ஸர்வஸுல பன் பெருமான். ஆக பக்தர்களின் பக்திக்கு இசைந்து அவர்களுக்கு உட்பட்டு கட்டுபட்டு இருப்பவர். கண்ணி நுன் சிறுத்தாம்பினால் கட்டுண்ட பண்ணிய பெருமான் - ஆக. யசோதையின் அன்புக்கிரங்கி தன்னை சுருக்கிக் கொண்டு அக்கயிற்றில் கட்டுண்ட தன்னை கட்டும்படி ஆக்கிக் கொண்ட பெருமாயன். ஊன ஜோஷ்ட.... மே ராம.ராஜீவலோசனா என்று தசரதன் கூறும் சாஸ்திர வாக்கின்படி மாரீசன் ஸீபாஹுவை முடிக்க6 நாட்கள் யக்ஞம் பண்ண ராமனை அனுப்பு என விஸுவா மித்திரர் கேட்டுக் கொண்டதின் பேரில் முதலில் தான் மறுத்து பின் ராமனை அனுப்பினார். அந்த அளவிற்கு சுலபனாய், அடங்கியவனாய் ராமன் திகழ்ந்தார்.மேராம- என்னுடைய ராமன் வயது இன்னும் அதற்கு ஆகவில்லை என்றாலும் அனுப்புகிறேன் என தசரதன் அனுப்பும் அளவுக்கு தன்னை அமைத்துக கொண்ட ராமன். மேலும் தசரதன் ராமா நீ வா என்னும் போது அவர் முன் அழகை ரசித்ததில் தசரதனுக்கு 6000 வயது 600 வயது ஆகுமாம். ராமா நீ போ என்ற போது அவர் பின்னழகை கண்டு 600 வயது 60 வயது ஆகிவிடுமாம். இப்படி தன்அழகை சேவிக்க அளவுக்கு உட்பட்டு ஸம்ஹிதனாய் ராமன் இருக்கிறார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@monishraja3399 Жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏 தேவரீர் திருவடிக்கு நமஸ்காரம் சாமி 🙏🙏🙏🙏🙏