உலகிலேயே அதிக கால்களை கொண்ட உயிரினம் எது தெரியுமா உங்களுக்கு

  Рет қаралды 255

Zio Tamil

3 ай бұрын

உலகிலேயே அதிக கால்களைக் கொண்ட உயிரினம் என்றால் அது மரவட்டை. இது ஆங்கிலத்தில் மில்லிபீட் என அழைக்கப்படுகிறது. மரவட்டைகளைப் பொறுத்த வரைக்கும் பல இனங்களுக்கு 100க்கும் குறைவான கால்கள் இருக்கும். இதில் இல்லக்மே பிளேனிபேஸ் என்ற மரவட்டைக்கு 750 கால்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையும் தாண்டி ஒரு மரவட்டை இந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து இருக்கிறது. அந்த மரவட்டையை ஆய்வு செய்த பொழுது அதற்கு 1,306 கால்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மரவட்டை யூமிலிப்ஸ் பெர்செபோன் (Eumillipes persephone) என்ற மரவட்டை. இந்த மரவட்டை வெளிர் நிறத்தில் கண்கள் இல்லாத ஒரு உயிரினம். இது அதனுடைய உடல் அகலத்தை விட 100 மடங்கு நீளமானது. இந்த உயிரினம் நீண்ட காலமாக வாழ்வதாக சொல்லப்படுகிறது. இந்த உயிரினத்தை பூமியின் மேற்பரப்பிலிருந்து 200 அடிக்கும் கீழே கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் எளிதில் நம்மால் இதை பூமியின் மேற்பரப்பில் பார்க்க முடியாது. எரிமலை பாறைகளால் சூழப்பட்ட இடங்களில் காணப்படுகிறது. இந்த உயிரினம் முதல் முதலாக மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் காணப்பட்டது. இது 0.95 மிமீ அகலமும் 95.7 மிமீ நீளமும் கொண்டிருந்தது.
Do you know which animal has the most legs in the world?

Пікірлер
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 54 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 54 МЛН