Рет қаралды 287,418
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழர்களுக்கு வழிகாட்டுகிறது தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர். அதில் பலர் சரியான முகவர்கள் மூலம் சரியான வேலைக்கு சென்று பத்திரமாக வீடு திரும்புகிறார்கள். ஆனால், சிலரோ போலி முகவர்களை நம்பி சென்று தவறான இடத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இதனால் பல துன்புறுத்தல்களுக்கும் கூட ஆளாகிறார்கள். அதேநேரம், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக சரியான மற்றும் பாதுகாப்பான பணிகளுக்கு தமிழ் மக்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து தருகின்றனர். மேலும் அதற்கான பயிற்சிகளும் கூட வழங்குகின்றனர்.
#Employment #Tamilnadu #TamilnaduGovernment
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil