No video

11 Forms of Nāṭṭiyam "Patiṉōrāṭal" / சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்

  Рет қаралды 3,450

Kala Saadhana

Kala Saadhana

3 жыл бұрын

11 Forms of Nāṭṭiyam "Patiṉōrāṭal"
சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்
1. கொடுகொட்டி
2. பாண்டரங்கம்
3. அல்லியம்
4. மல்லாடல்
5. துடிக்கூத்து
6. குடைக்கூத்து
7. குடக்கூத்து
8. பேடிக்கூத்து
9. மரக்காலாடல்
10. பாவைக்கூத்து
11. கடையம்
மாதவி ஆடிய பதினோராடல்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்,
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்,
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
செருவெம் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்//
சிவனும் உமையும் கை கொட்டி ஆடிய கொடுகொட்டியும் அதைத் தொடர்ந்து சிவன் நீறணிந்து திரிபுரம் எரித்தாடிய பாண்டரங்கத்துடன் தொடங்கும் பதினோராடல் தொடர்ந்து வஞ்சன் கஞ்சனை கண்ணன் வதைத்து ஆடிய ஆடலுடனும், மல்லனை வெல்ல ஆடிய மல்லாடலுடனும் தொடர்கிறது.
அவுணர்களை வெல்ல ஆடிய துடியும், குடையும் முருகன் ஆடியது.
நீள்நிலம் அளந்தும் நெடும்பூமி தாவியளந்தும் மாயோனாடியது குடக்கூத்து.
ஆண்மை திரிந்து பெண்மைக் கோலத்தில் காமன் ஆடியது பேடிக்கூத்து.
உண்மைப் போரால் அவுணர்களை வெல்லல் அரிதென்றதால் வஞ்சப் போரால் மரக்கால் பூண்டு கொற்றவை ஆடியது மரக்காலாடல்.
கொல்லிப் பாவை வடிவெடுத்து செய்யோள் ஆடியது பாவைக்கூத்து.
இறுதியாக கடைசியர் (உழத்தியர்) வடிவங் கொண்டு இந்திராணி(அயிராணி) மருத நிலத்தில் ஆடியது கடைக்கூத்து.
இந்தக் கூத்துக்கள் இவர்களால் ஆடப்பெற்றது என்பது குறித்தும் அதன் உறுப்புகள் குறித்தும் பின்வரும் சூத்திரங்களால் அறியலாம்.

Пікірлер: 16
@fhofia1749
@fhofia1749 2 жыл бұрын
Adorable expressions!
@deepamanoj1734
@deepamanoj1734 Жыл бұрын
எனக்கு மிகவும் உதவியாக இருந்தது❤️⚘️🌹❤️
@kavingarjk
@kavingarjk 3 жыл бұрын
தை திருநாள் வாழ்த்துக்கள் 🌸 🌸 🌸 கலையும் கலைஞர் களும் காலம் கடந்தும் வாழ்வார்கள் என்பதற்கு இது ஒரு சான்று... மாதவியை அவள் நேசித்த கலை இன்று கொண்டாடி கொண்டிருக்கிறது.. நாளைய உலகம் நிச்சயம் உம்மையும் கொண்டாடும்.. 🌸🌸 வாழ்த்துக்கள் தோழி 🌺🌺
@shanthinithuraiyarangan2950
@shanthinithuraiyarangan2950 3 жыл бұрын
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.👏🏼👏🏼👏🏼இதனை நிறைவேற்ற உழைத்த உங்களுக்கு வாழ்த்துகள். ( கனகசபை கலாலயம்)
@AD-ym4ne
@AD-ym4ne 3 жыл бұрын
நல்ல முயற்சி தோழி
@ravijanach2969
@ravijanach2969 3 жыл бұрын
💛💛💛
@mechanicalcompetitiveexams7785
@mechanicalcompetitiveexams7785 3 жыл бұрын
Just now I read silapathikaram and unfortunately KZbin recommenda urs வாழிய காவேரி dance....🙏🙏🙏🙏 really blessed 🙏🙏
@deepamanoj1734
@deepamanoj1734 Жыл бұрын
அற்புதம் ❤️❤️❤️❤️❤️❤️🌹⚘️🙏
@nash4804
@nash4804 Жыл бұрын
Superb presentation. Efforts like these at creating awareness and appreciation of the ancient cultural gems are greatly appreciated. It will help if you can include English subtitles, difficult as it might be to find suitable expressions in English, so that a wider audience could be enthralled. Keep up your excellent contributions to cultural education. Thank you.
@shanmukhatheaters
@shanmukhatheaters 2 жыл бұрын
Beautiful ❤❤❤
@manvasanai2716
@manvasanai2716 2 жыл бұрын
Tamil Sathirattam (Bharata Natyam). The art of the Tamils. Originated in Tamil Nadu. Early the dance was performed by the Devaradiyar (Devadasis) at temples. But the Aryan Brahmins stole it from Tamils. There was a Imaginary MYTHICAL person called Bharatamuni who created this dance shastra from the scriptures of Rick, Yasur, Sama and Atharvana. Bharatanatyam . But Actually The original grammar for the Bharathanattiyam /Tamil Sathir natanam is in Tamil Sangam literature SILAPATHIKARAM. & NATTIYA NANNOOL. Please save our Tamil traditional dance form 🙏🙏
@deekshita2561
@deekshita2561 3 жыл бұрын
hi mam can u send these 11 styles of dance in english with full details
@KalaSaadhana
@KalaSaadhana 3 жыл бұрын
I don't have full details. I have those in tamil. But I have some notes.
@deekshita2561
@deekshita2561 3 жыл бұрын
@@KalaSaadhana please send me mam.
@deekshita2561
@deekshita2561 3 жыл бұрын
Doing my.project in Madhavi 11 style dance. Thats y asking
@KalaSaadhana
@KalaSaadhana 3 жыл бұрын
Your mail id?
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 8 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Hindolam Thillana #bharatanatyamdance #bharathanatyamsongswithdance
11:04
Eleven types of Madhavi dances
39:51
Arulchelvi Kirupairajah
Рет қаралды 15 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН